கேள்விகளும் பதில்களும் (COD 1:3) Jeffersonville, Indiana, USA 54-0103E 1...நம்முடைய கர்த்தருடைய ஆராதனையில் மறுபடியுமாக இங்கிருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே இப்பொழுது, நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியுடன், இந்த அற்புதமான பழைய பாடல்களைப் பாடி, எல்லாரும் ஆவியினால் நிறைந்து, மற்றும் இன்னுமாக இருப்பதை காண்கையில், நாங்கள் உண்மையாகவே அருமையாக உணரும்படிக்குச் செய்கிறது. மறுபடியுமாக இன்றிரவு ஒன்று அல்லது இரண்டு கேள்விக்கு பதிலளிக்க நேரத்தின் சில பொழுதுகளை எடுக்க முயற்சிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். நாங்கள்... காலையில் உங்களுடைய நேரத்தை அதிகமாக நான் எடுத்துக் கொண்டேன், ஆனால் நீங்கள் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன், பேசுவதற்கென்று அநேகம் நம்மிடம் இருக்கின்றது, அப்படித்தானே? ஆகவே நாம் பேசுவதற்குரிய நபரை நாம் கொண்டிருக்கிறோம், அது நம்முடைய கர்த்தராகிய இயேசு. சகோரதரன் டெட்டி, என்னால் - உங்களால் கூடுமானால், சிறிது நேரம் இங்கே மேலே அப்படியே இருங்கள். கட்டிடத்தில் வியாதிப்பட்டுள்ள ஒரு குழந்தை உள்ளதென்று என்னிடம் கூறப்பட்டது. 2இதை துவங்குவதற்கு முன்னால், நமக்கு இராப்போஜனம் இருக்கின்றது, ஆதலால் நமக்கு - அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை - பிறகு ஒருக்கால் ஒரு ஞானஸ்நானமும் இருக்கும். ஆகவே நான் - நான் முதலாவதாக ஜெபிக்கப்பட விரும்புகிறவர்களுக்காக நான் ஜெபிக்க விரும்புகி றேன்...?... வியாதியஸ்தருக்கு முதலில் ஜெபித்து, பிறகு நான் ஆரம்பிக்க விரும்புகிறேன். ஆகவே இப்பொழுது, கூடுமானால்... டெட்டி, அந்த மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் இருக்கிறார், உங்களால் கூடுமானால், இந்த பாடலை வாசியுங்கள். நாங்கள் வியாதியஸ்தரை இங்கே அழைத்து அவர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கேட்கப் போகிறோம். இன்றிரவு ஜெபிக்கப்படத் தக்கதாக எத்தனைப் பேர் இங்கே இருக்கிறீர்கள்? காலை நாங்கள் விட்டுவிட்ட சிலர் இருந்தனர். உங்கள் கைகளை உயர்த்துவீர்களா ...?... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி] ...அந்த சாட்சியைக் கேட்டு, தேவனை அவருடைய எல்லா நற்குணத்திற்காக ஸ்தோத்தரிக்கத் தக்கதாக எல்லா ஆசீர்வாதங்களும் புறப்பட்டு ஓடுகின்ற இடமாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள். அது சரியா? 3இப்பொழுது, இந்த சாட்சிகளின் பேரில் நாம் துரிதமாக ஆரம்பிப்போம், பிறகு நாம் இந்த கேள்விகளின் பேரில் - (சற்று பொருத்தருள்க) நாங்கள் முயற்சிக்கப் போகிறோம். ஆகவே தேவன் தம்முடைய ஆசிர்வாதங்களை இந்த - இந்த விதத்தில் ஊற்றுவார் என்று நான் நம்புகிறேன். ஆகவே இப்பொழுது, அவைகளின் பேரில் நீண்ட நேரமாக செல்ல என்னை விட வேண்டும். சகோதரன் காக்ஸ், நான் உங்கள் கவனத்தைக் கோர விரும்புகிறேன், நீங்களும் முன் வரிசையில் அமர்ந்திருக்கின்ற மூப்பர்களும், நமக்கு இராப்போஜனம் கொடுக்கப்படும் நேரம் வருகையில் (நீங்கள் பாருங்கள்?) - நான், என்னை நிறுத்திவிடுங்கள். ஏனெனில் நான் அநேக நேரமாக அவைகளின் பேரில் நின்று விடுகிறேன். என்னால் கூடுமான வரை வேகமாக செல்ல நான் முயற்சிக்கிறேன். பிறகு இந்த ஞாயிற்றுக் கிழமையில் இவைகளை நான் முடிக்கவில்லையெனில், அடுத்த ஞாயிறு நான் இவைகளை எடுப்பேன், ஆதலால் நான் இன்றிரவு முடிக்க முயற்சிக்கிறேன். 4இவை மிக அருமையான கேள்விகள். ஆகவே நான் உங்களுக்கு கூறுகிறேன், நண்பர்களே, ஆதியாகமம், யாத்திராகமம் மற்றும் வெளிப்படுத்தல் இன்னுமாக வேதாகம போதனைகளுக்கென சுமார் ஒரு வாரம் அமைக்க எனக்கு விருப்பம். ஆகையால் - ஆகையால் நாம் ஒரு - ஒரு அருமையான நேரத்தை கொண்டிருக்கலாம். நீங்கள் ஏதோ ஒரு பொய்யான ஆதாரமற்ற புராணக் காரியத்தின் பேரில் செல்லாத வரைக்கும் நான் ஆழமான வேதாகம கேள்விகளையும் மற்றும் வேதாகம போதனைகளையும் நேசிக்கிறேன். தெளிவான, பழைமை வாய்ந்த, கலப்படமற்ற தேவனுடைய வார்த்தையில் சரியாக அப்படியே நில்லுங்கள்; அது உங்களை சரியாக கொண்டுச் செல்லும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? அது சரி. இந்த காலை சில - சில மிக அருமையான கேள்விகளை நாம் கொண்டிருக்கிறோம், அவைகளில் சில இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்தைக் குறித்தது, அவர்கள் யார், அவர்கள் எந்த பாகமாக இருப்பார்கள் என்று?மற்றும் - மற்றும் மணவாட்டியைக் குறித்து. ஆகவே ஓ, அநேக காரியங்கள், மிக உண்மையான ஆழமான கேள்விகள். என்னால் முடிக்கப்படாத சிலவற்றை நான் கொண்டிருந்தேன். 5இப்பொழுது, இன்றிரவு இங்கே இருக்கின்ற ஒன்றின் பேரில் நாம் ஆரம்பித்து கர்த்தர் நமக்கு உதவ கேட்கப் போகிறோம். ஆகவே இப்பொழுது, வேதாகமத்தை நம்மால் திறக்க முடியாது. நாம் அதை இப்படி திறக்கலாம், ஆனால் அதை உண்மையாகவே நமக்கு திறந்தளிக்கப்பட தேவனால் தான் முடியும். நம்மால் பக்கங்களைப் புரட்ட முடியும். ஆனால் வெளிப்படுத்தல் புஸ்தகத்தில், யோவான் பார்த்த போது, சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருக்கக் கண்டான், ஆகவே அங்கே - அவர் ஒரு புஸ்தகத்தை தம்முடைய கரத்திலே கொண்டிருந்தார். அந்த புஸ்தகத்தை எடுக்கவும், அல்லது முத்திரைகளை உடைக்கவும், அல்லது அதைப் பார்க்கவும் ஒரு மனிதனும் தகுதியுள்ளவனாக இல்லை. பரலோகத்தில் உள்ள ஒருவனோ, பூமியிலிருக்கின்ற ஒருவனோ அல்லது பூமியின் கீழிலிருக்கின்ற ஒருவனும் அல்லது யாராயினும் தகுதி வாய்ந்தவனாக இருக்கவில்லை. ஆகவே அவன் ஒரு ஆட்டுக்குட்டியைக் கண்டான், அது உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட வண்ணமாயிருந்தது. ஆகவே அது வந்து அவருடைய கரத்திலிருந்து புஸ்தகத்தை எடுத்து முத்திரைகளைத் திறந்தது; அது இயேசு கிறிஸ்துவாக இருந்தது. 6இப்பொழுது, இந்த வாரம் நகரத்திலே ஒரு மிக முக்கியமான வணிகர் ஒருவருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிற்கு செல்வதைக் குறித்து கூறினார். அவர், ''என்ன, அவர்கள் அங்கே ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை கொன்றுச் சென்றனர்'' என்றார். நான், “அதினால் எனக்கென்ன?” என்றேன். அவர் ''கொலைகள் இனக் கலவரங்கள் இன்னும் மற்றவை எல்லாம் நடக்கும் அங்கேயா நீங்கள் செல்லப் போகிறீர்கள்?'' என்றார். நான், ''நிச்சயமாக, அந்த இடத்திற்குத்தான் நான் தேவைப்படுகிறேன், ஏனென்றால் நான் செல்ல வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்,'' என்றேன். அவர், ''அவர்கள் உங்களை கொன்றுவிட்டால்?'' என்றார். நான், ''நல்லது, நான் கொல்லப்பட வேண்டுமென்று தேவன் விரும்புவாரானால், நான் கொல்லப்படுவேன், அவ்வளவுதான்'' என்றேன். மேலும் அவர், “ஓ என்னே சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் அப்படி நினைக்கவே கூடாது. நல்லது, எனக்கொன்றுமில்லை. நீங்கள் பக்தியுள்ளவரென்று நான் நினைக்கிறேன், நீங்கள் ஒரு நல்ல மனிதன் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவைக் கூட கொலை செய்தனரே'' என்றார். நான் “நிச்சயமாக, அது தேவனுடைய சித்தம்'' என்றேன். அவர், “என்ன? தேவனுடைய சித்தமா?'' என்றார். நான்... அந்த மனிதன் சபைக்கு சென்று கொண்டிருந்தார் (ஏறக்குறைய எழுபது வயது) - சபைக்கு சென்று கொண்டிருந்தார்... அவர் இந்த நகரத்தில் ஒரு அருமையான சபையில் அங்கத்தினனாக அதிலே இருந்திருக்கிறார் - இயேசு மரிக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தம் என்பதை அறியாதிருந்தார். ஏன், நான் “சகோதரனே, அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னர், ஆதியிலேயே அவர் அடிக்கப்பட்டார். அவர் பூமிக்கு வருவதற்கு முன்னரே அடிக்கப்பட்டார்,'' என்றேன். அது சரியா? அது பூமியின் அஸ்திபாரத்திற்கு முன்னர் அடிக்கப்பட்ட தேவாட்டுக்குட்டி. 7கேள்விகளுக்காக ஒரு க்ஷணம் அவரிடம் பேசுவோம். இப்போழுது, பிதாவே, புஸ்தகத்தை திறக்கவும் அல்லது அதை நோக்கிப் பார்க்கவும் நாங்கள் தகுதியில்லாதவர்கள், முடியாதவர்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் இன்றிரவு தாமே ஆட்டுக்குட்டியானவர் இப்பொழுது வருவாராக, உலகத்தோற்றத்திற்கு முன்னர் அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி தாமே, தேவனுடைய காரியங்களை எடுத்து அவைகளை இந்த சபையாரிடம் அளிப்பாராக. பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த வார்த்தைகளை கொண்டு செல்லட்டும், அவை தாமே என்னுடைய வார்த்தைகளாக இல்லாமலிருப்பதாக, ஆனால் அவை தாமே பசியுள்ள ஒவ்வொரு இருதயத்திற்கும் தேவனுடைய வார்த்தையாக இருப்பதாக. இயேசுவின் நாமத்தில் இதை நாங்கள் கேட்கிறோம். ஆமென். 8இங்கே முதலாவதாக (இவைகளை சுழல் வரிசையிலோ அல்லது வேறு எந்த விதமாகவோ நாங்கள் வைக்கவில்லை, அவை எவ்வாறு கொண்டுவரப்பட்டதோ) அவ்விதமாக உள்ளது. இது அருமையானதாகத் தோன்றுகிறது. முதலாவதாக, கேள்விகளில் எத்தனைப் பேர்களுக்கு ஆர்வம் உண்டு, உங்களுடைய...?... நல்லது, அது மிக அருமையானது. எனக்குத் தெரிந்து வரையில் கேள்வி: இப்பொழுது. மனிதன் மரித்தவுடன் பரலோகத்திற்கு அல்லது அல்லது நரகத்திற்கு செல்வானா, அல்லது நியாயத்தீர்ப்பிற்காக அவர்கள் காத்திருப்பார்களா? இது ஒரு மிக அருமையான கேள்வி. ஆகவே இது - இதற்கு - அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்று, ஏனெனில் தன்னுடைய ஜீவியம் முடிந்த பிறகு அவன் என்னவாக இருக்கப் போகிறான்? ஒவ்வொரு மனிதனும் ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆர்வம் இருக்கின்றது. நல்லது இப்பொழுது, நான் - என்னைப் பொருத்த வரையில், எனக்கு - எனக்குத் தெரியாது. வேதாகமத்திலிருந்துதான் நான் பதிலளிக்க வேண்டும். 9ஒரு சமயம் ஒரு பெண், லாஸ்ஏஞ்சலிலிருந்து, சுமார் முப்பத்தைந்து அல்லது நாற்பது நிமிடங்களாக அல்லது அதற்கு மேலாக, ஒரு நீண்ட தூரத்திலிருந்து என்னிடம் பேசினாள். ஐம்பது டாலர் தொலைபேசி கட்டணம் அவளுக்கு செலவானது என்று யூகிக்கிறேன். அவள் தன்னுடைய புருஷனை விட்டுவிட்டு வேறொரு மனிதனை விவாகம் செய்வது தனக்கு சட்ட ரீதியாகவும் சரியான ஒன்றாகவும் உள்ளது என்று நான் கூற வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருந்தாள். நான் அதைச் செய்யமாட்டேன். இல்லை! நான், ''இல்லை ஐயா!'' என்றேன். அவள், “நல்லது, என் கணவர் ஒரு பாவி, இந்த மனிதனோ ஒரு கிறிஸ்தவன்” என்றாள். நான் அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. நிச்சயமாக நீ விபசாரத்தில் இருப்பாய் என்று கூறினேன். அவள், “நல்லது, நான் எலும்புருக்கி வியாதி (tuberculosis) உடையவள், ஆகவே இந்த மனிதன் எனக்கு இல்லையெனில் நான் வாழவேண்டிய அவசியமேயில்லை'' என்றாள். நான், ''நீங்கள் மோகம் கொண்டிருக்கிறீர்கள். அன்பு, நேசம் கொண்டிருக்கவில்லை, ஏனெனில் உங்களால் அவ்வாறு இருக்க முடியாது, அவ்வளவுதான், ஏனெனில் அவர் தான் உங்கள் கணவர். மரணம் உங்களை பிரிக்கும்வரை அவருடன் வாழ நீங்கள் வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். அதிலிருந்து வேறெதுவாயிருந்தாலும் அது விபசாரம் ஆகும் என்றேன். அவள் பேசிக் கொண்டேயிருந்தாள். நான் கூறினேன் “ஸ்திரீயே, அதில்...'' அவள், ''நீர் மாத்திரம் அது சரி என்று என்னிடம் கூறினால் போதும்“ என்றாள். நான், ''நான் அதைச் செய்யமாட்டேன்'' என்றேன். நான் கூறினேன், “என்னால்...'' அவள், “ஆம், சகோதரன் பிரன்ஹாம், நாங்கள் உம்மிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம்'' என்றாள். நான், “அப்படியானால் நான் உங்களுக்கு என்ன கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்பதைக் கேளுங்கள். நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறுகிறேன். தேவன் என்ன கூறினாரோ அதைத் தவிர வேறு எதையும் என்னால் கூறமுடியாது” என்றேன். அது உண்மை என்று தேவன் கூறினார். ஆகவே அது சரியாக அவ்விதமாகத்தான் இருக்கும். பாருங்கள்? நான் அந்த விதமாகத் தான் அது - அது இருந்தாக வேண்டும், அந்த விதமாகத்தான் அது இருக்க வேண்டும்'' என்று கூறினேன். 10ஆகவே இப்பொழுது, இந்த கேள்விகளில், அவ்விதமாகத்தான் இவைகள் இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இப்பொழுது, அது எப்பொழுது... இப்பொழுது, இதில், இன்றிரவு இந்தச் சிறிய ஜனக்கூட்டத்தில், ஒருக்கால் எல்லா விதமான வித்தியாசமான கருத்துக்கள் இருக்கும் என்று நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்; அவையெல்லாம் சரியானது தான் என்று நாங்கள் நினைக்கிறோம், அவைகளில் ஒவ்வொரு கருத்தும் நல்லது தான், அது ஒரு... ஆனால் இப்பொழுது, நாங்கள் என்ன செய்கிறோமென்றால் யாராவது ஒருவரை நாங்கள் கொண்டிருக்க... இந்த வாத்துக்கள், குள்ளவாத்துக்கள், வேறெதுவாயிருந்தாலும், தேனீக்கள் - ஒவ்வொன்றிற்கும் ஒரு தலைவன் உண்டு. ஒரு ராணி தேனி மரித்தால், சம்பவிப்பதென்ன என்று நீங்கள் அறிவீர்கள். ஒரு வழிநடத்தும் குள்ள வாத்து மரித்தால், மற்றொன்றை அவைகள் தங்களுக்கென பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த - அவைகளுக்கு ஒரு தலைவன் இருக்கத்தான் வேண்டும். ஆகவே மனிதனும் ஒரு தலைவனைக் கொண்டிருக்கத்தான் வேண்டும்; அந்த தலைவர் பரிசுத்த ஆவியானவரே. பரிசுத்த ஆவியானவர் சபையில் முதலாவதாக அப்போஸ்தலர்களையும், அதற்குப் பிறகு, தீர்க்கதரிசிகளையும், இன்னும் மற்றவைகளையும் வைக்கின்றார். 11சில சமயங்களுக்கு முன்பாக யாரோ, ஒருவர் “என்ன, சகோதரன் பிரன்ஹாம், எங்களுக்கு போதிக்க யாரும் அவசியம் இல்லை. பரிசுத்த ஆவியானவர் வரும்போது, போதிக்க யாருமே எங்களுக்கு தேவையில்லை'' என்றார். ''உங்களுக்கு போதகம் தேவையில்லை என்று வேதாகமம் கூறுகின்றதே” என்றார். நான் ''அப்படியானால் அந்த அதே பரிசுத்த ஆவியானவர் சபையில் போதகர்களை வைத்தது ஏன்?'' என்று கூறினேன். (பாருங்கள், பாருங்கள்?) அவர் சபையை ஒழுங்கில் வைத்திருக்கின்றார். இதோ நாம் போதகர்களை கொண்டிருக்கத்தான் வேண்டும். அது சரி. ஆனால் நீங்கள் மேலும் கொண்டிருக்க... உங்களுக்கு ''விபசாரம் செய்யாதிருப்பாயாக; சத்தியம் பண்ணாதிருப்பாயாக, எடு...'' என்று கூறி உங்களுக்கு போதிக்க வேண்டியதில்லை. அதை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். அதை நீங்கள் செய்வது தவறு என்று பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய உங்கள் மனசாட்சியே உங்களுக்கு கூறும். ஆனால் இப்பொழுது வேத வசன போதனையைப் பொறுத்த வரையில், அதற்கு ஒரு பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒன்று தேவையாயிருக்கிறது. அது சரி. தேவன் சபையை, அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள், சுகமளிக்கும் வரங்கள், அற்புதங்கள், இன்னும் மற்றவைகளினால் ஒழுங்கில் வைத்திருக்கிறார். அவர் சபையை ஒழுங்கில் வைத்து, போதகர்களையும், இன்னும் மற்றவைகளையும் அங்கே வைத்து தம்முடைய சபையை வழிநடத்தி இலக்கை நோக்கி செலுத்துகிறார். ஆகவே இந்த நாம் - நாம் கூறின விதமாக, இயேசு பூமியின் மேல் தம்முடைய சரீரமாக... அவருடைய சரீரம் அசைகையில், பூமிக்கு பிரதிபலிக்கும் ஒரு நிழலாக மாத்திரமே அது இருக்கிறது. அதனுடன் அது அசையும். 12இப்பொழுது அநேக ஜனங்கள்... ஓய்வு நாள் ஆசரிக்கும் ஜனங்கள், ஒரு மனிதன் மரிக்கும் போது அவன் சரியாக கல்லறைக்குள் சென்று, ஆத்துமா, சரீரம் மற்றவையோடு உயிர்த்தெழுதல் வரை அங்கேயே தங்குகிறான் என்று விசுவாசிக்கின்றனர். அவர்கள்... அவர்கள் அதை “ஆத்துமா உறங்குதல்'' என்று அழைப்பார்கள். நல்லது, அது சரிதான். அவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து மறுபடியும் பிறந்திருக்கும் வரையில் அது பரவாயில்லை, அது அவர்களை புண்படுத்தாது. ஆனால் இப்பொழுது வேத வசனங்களை பொறுத்த வரையில், அந்த நபர் மரிக்கும் போது, அவன் ஒரு கிறிஸ்தவனாயிருந்தால், அவன் மறுபடியும் பிறந்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தால், மரிக்கத்தக்கதாக அவன் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டிய அவசியமில்லை. பாருங்கள்? அவன் நேராக தேவனுடைய பிரசன்னத்திற்குச் செல்கிறான். ஆகவே அவன் நியாயத்தீர்ப்பில் இருக்க வேண்டிய அவசியமேயில்லை, ஏனெனில் அவன் ஏற்கெனவே... பாருங்கள்? கிறிஸ்து எனக்கு செய்ததற்காக நான் காத்திருக்க வேண்டியதில்லை. இப்பொழுது, நான் ஒரு பாவியாக இருந்தேன், ஆனால் கிறிஸ்துவினுடைய நியாயத்தீர்ப்பு... இங்கே இங்கே சில வார்த்தைகளில் முழு காரியம், “அதை நீ புசிக்கும் நாளிலே, அந்த நாளிலே நீ சாவாய்'' அது அவ்வளவுதான். 13இப்பொழுது, தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ளத்தான் வேண்டும். தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்வதைத் தவிர வேறு எதையுமே அவரால் செய்ய முடியாது, ஏனெனில் அவர் தேவன். நல்லது அப்படியானால், அவரால் முடியாது. அப்படியானால், அவர்... நீ தேவனிடமிருந்து வேறு பிரிக்கப்படுகிறாய். அந்த... ஆகவே அப்படியானால், நீ பாவத்தில் பிறந்து, பொய் பேசுகிறவனாய் உலகத்திற்கு வந்தாய். ஆதலால் நீ பிறக்கும் போது, சுபாவத்தின்படி நீ ஒரு பாவி. அதைக் குறித்துச் செய்யும்படியாய் உலகத்தில் உங்களுக்கு எதுவுமே கிடையாது. என்னைத் தானே அல்லது உங்களையே இரட்சித்துக் கொள்ள என்னால் செய்ய கூடியது ஒன்றுமேயில்லை. அது கிறிஸ்து நமக்காக தேவனுக்குள் என்ன செய்தார் - அல்லது தேவன் கிறிஸ்துவுக்குள் நமக்கு என்ன செய்தாரென்பதே. பாருங்கள்? அப்படித்தானே, நல்லது, ஒருக்கால் நான் இதைச் சிந்தித்தாலோ அல்லது நான் இதைச் செய்தாலோ என்பதல்ல அது. அவர் அதைச் செய்தாரா என்பதே. நல்லது, இப்பொழுது, நாம் அவருக்குள் இருக்கிறோம். அப்படியானால் அவர் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் இருந்தார்; அவர் நியாயத்தீர்ப்பை எடுத்தார். ஆகவே அவர், பாவத்திலிருந்து குற்றமற்றவராக, பாவத்தை அறியாதவராக இருந்தும் இன்னுமாக நமக்காக பாவமாக்கப்பட்டார். ஆகவே நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கும் வரைக்கும், நியாயத்தீர்ப்பிலிருந்து விடுதலையாயிருக்கிறீர்கள். ''நான் இரத்தத்தை காண்கையில் உங்களைக் கடந்து போவேன். பாருங்கள், பாருங்கள்? அதுதான். உங்களை விடுதலையாக்கும் அந்த இரத்தம். 14இப்பொழுது, பாவி ஒருக்காலும்... பாவி நியாயத்தீர்ப்பில் நிற்கத்தான் வேண்டும். இந்த நியாயத்தீர்ப்பைத் தவிர வேறொன்றும் இராது. அது ஒரு... அது கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் உலகத்தை சுற்றி இருக்கிற ஒரு வானவில் அல்லது ஒரு - ஒரு வட்டம் தான் ஆகும். இங்கே நீங்கள் எவ்வளவு காலமாக இருக்கிறீர்களோ... கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாகவேயன்றி தேவன் வேறு எந்த வழியிலாவது இன்றிரவு பூமியை இந்த நிலையில் நோக்கிப் பார்ப்பாரானால், ஒரு வினாடியில் அவர் அதை அழித்துப் போடுவார். அவர் அதைச் செய்தாக வேண்டும், நிச்சயமாக அவர் செய்துத்தான் ஆகவேண்டும். அங்கேதான் நியாயத்தீர்ப்புகள் வருகின்றன. இப்பொழுது, இல்லையென்றால் - அல்லது இங்கே கீழே ஒரு மனிதன் எவ்வளவு காலமாக இருக்கும் வரை, அந்த மனிதன் ஒரு குடிகாரனாகவும், ஒரு சூதாட்டக்காரனாகவோ அல்லது ஒரு மோசமான ஒரு அவிசுவாசியாக இருந்தாலும், தேவனுடைய இரக்கங்கள் இன்னுமாக அவனுக்காக பிராயச்சித்தம் செய்து கொண்டிருக்கிறது. ஆகவே ஒரு ஸ்திரீ, அவள் என்னவாயிருந்தாலும் சரி, ஒரு விபசாரியாகவோ, அல்லது என்னவாயிருந்தாலும், இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் இன்னுமாய் அவளுக்காக பிராயச்சித்தம் செய்துக் கொண்டிருக்கிறது. அவளுடைய ஆத்துமா இந்த சரீரத்தை விட்டுச் செல்கின்ற மாத்திரத்தில் அவள் அதற்கு புறம்பாக கடந்து செல்கிறாள், அவள் இரக்கத்தின் மேல் சென்று நியாயத்தீர்ப்புக்குள் செல்கிறாள். தேவன் ஏற்கெனவே அவளை நியாயந்தீர்த்துவிட்டார். அது காரியத்தை முற்றுப்பெறச் செய்கிறது. அது அவளுக்குச் செய்யப்படுகிறது. அவள் நியாயந்தீர்க்கப்படுகிறாள். அவள் நியாயந் தீர்க்கப்படுகிறாள். உங்கள் பாவங்களுக்காக அங்கே இருக்கும் தேவனுடைய பிராயச்சித்த பலியை நீ செயல்படுத்தும் விதத்தைப் பொருத்து நீ உன்னைத் தானே நியாயந்தீர்த்துக் கொள்கிறாய். பாருங்கள்? நீ உன்னைத் தானே நியாயந்தீர்த்துக் கொள்கிறாய். அவர் உன்னை மன்னிக்க மாத்திரமே போதும் என்று அவரைக் குறித்து கணக்கிடாதே. பாருங்கள்? அவர் உங்களை மன்னிப்பாரென்று நீங்கள் எண்ணினால், உங்களுடைய தவறுகளை அறிக்கையிடுங்கள், பிறகு அவர் உங்களை மன்னிப்பார். 15அப்படியானால் ஒரே ஆவியினால் (கவனியுங்கள்) ஒரே சரீரத்திற்குள்ளாக நாமெல்லாரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம். அந்த சரீரம் தேவனால் எழுப்பப்பட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, நீதியாக்கப்பட்டு பரலோகத்தில் வல்லமையோடும் மகத்துவத்தோடும் அவருடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார், ஆதலால் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், கிறிஸ்துவுக்குள் இருக்கிறவர்கள், நியாயத்தீர்ப்பிலிருந்து விடுதலையானவர்கள், உயிர்த்தெழுதலில் வருவார்கள். இப்பொழுது, ஆனால் இப்பொழுது நாம் மரிக்கையில் நாம் இப்பொழுது மரிக்கையில், ஒரு வானத்துக்குரிய சரீரத்தில் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னத்திற்கு நேராகச் செல்கிறோம். அங்கே நான் சகோதரன் நெவிலைச் சந்திப்பேனானால், இப்பொழுது நாங்கள் இருவரும் மரித்தால், இப்பொழுதிலிருந்து ஒரு மணி நேரத்தில் நான் அவரைச் சந்திப்பேன்; நான், ''வாழ்த்துக்கள் சகோதரன் நெவில் என்று கூறி அவருடன் பேசுவேன். நான் அவருடைய கையை குலுக்க முடியாது; அவர் ஒரு வானத்துக்குரிய சரீரத்தில் இருக்கிறார். நான் அவருடன் பேச முடியும்: இங்கே எப்படி இருக்கிறாரோ அவ்விதமாகவே அவர் காணப்படுவார். நானும் இவ்விதமாகவே இருப்பேன். ஆனால் நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசுவோம், ஆனால் எங்களால் ஒருவரையொருவர் தொட முடியாது, ஏனெனில், பார்த்தல், ருசித்தல், உணர்தல் முகர்தல் மற்றும் கேட்டல் ஆகிய ஐந்து புலன்களில் ஒன்றாகில் எங்களிடத்தில் இருக்காது. பாருங்கள்? ஆனால் நாங்கள் அழியாமையில் இருப்போம், எங்களால் ஒருவரையொருவர் பார்க்க முடியும். நாங்கள் தேவனுடைய பீடத்தண்டையில் ஆசீர்வதிக்கப்பட்ட பரிமாணங்களில் ஜீவிப்போம். யோவான் பீடத்தின் கீழே ஆத்துமாக்கள் மறுபடியுமாக பூமிக்கு வந்து தங்கள் மேல் வஸ்திரம் பெற்றுக் கொள்ள ''எவ்வளவு காலம், ஆண்டவரே, எவ்வளவு காலம்“ என்று கதறியதை யோவான் கண்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா? 16இப்பொழுது பரிசுத்த ஆவியின் வடிவில் நம்மில் இருக்கும் இயேசு, அவருடைய வானத்திற்குரிய சரீரம், பரிசுத்த ஆவி, மகிமையுள்ள சரீரத்தில் வரும் போது, நாம் அவருடன் அவரைப் போல மகிமைப்படுத்தப்படுவோம். நான் என்ன கூற முற்படுகிறேன் என்பதை காண முடிகிறதா? பிறகு நான் அவருடைய கையைக் குலுக்கி ''இதோ, சகோதரன் நெவில்'' என்று கூறுவேன். பிறகு நாங்கள்... கவனியுங்கள். இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார் அவர்கள் தங்கள் இராப்போஜனத்தை எடுத்துக் கொண்டிருந்தனர், அவர், ''நான் இந்த திராட்சப்பழ ரசத்தை நவமானதாய் உங்களோடே கூட என் பிதாவின் ராஜ்ஜியத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதை நான் பானம் பண்ணமாட்டேன்“ என்றார். அது சரியா? பாருங்கள்? அதோ அது. ஆதலால் நாம்... மரித்தோர் மரிக்கும் போது... தேவனுடைய பிரசன்னத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு நீதிமானாக்கப்பட்ட நபராய், அழியாமை கொண்டவனாய் அவருடைய பிரசன்னத்திற்குள் சென்று திரும்ப வருகின்ற - அந்த நாள் வரைக்கும் சமாதானத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட பரிமாணங்களில் ஜீவித்துக் கொண்டிருப்பான். 17இப்பொழுது, நீதிமானாக்கப்பட்ட ஜனங்கள் மரித்தபோது தேவனுடைய பிரசன்னத்திற்குள் செல்லாத காலம் ஒன்று இருந்தது. அது பழைய ஏற்பாட்டில் இருந்தது. அவர்கள் பரதீசு என்னும் இடத்திற்குள் சென்றனர், நீதிமான்களின் ஆத்துமாக்கள் பரதீசில் காத்திருந்தன. நீதிமான்களின் ஆத்துமாக்களை தேவன் வைத்திருந்த ஸ்தலம் தான் பரதீசாகும்; இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்படும் வரையில் இது ஒரு சொப்பன இடம் போன்றிருந்தது. ஏனெனில் காளைகள் மற்றும் ஆட்டுக்கடாக்களின் இரத்தம் பாவத்தை எடுத்துப் போடவில்லை, அது பாவத்தை மூடிக் கொண்டிருந்தது. ஆனால் இயேசுவின் இரத்தம் பாவத்தை எடுத்துப் போடுகின்றது. நீங்கள் கவனியுங்கள் அவருடைய - கல்வாரியில் அவர் மரித்த போது... அவர் வந்த போது, காளைகள், ஆட்டுக்கடாக்கள், மற்றும் கடாரி இவைகளின் இரத்தத்தின் பரிகாரத்தின் கீழ் மரித்த அந்த மரித்த பரிசுத்தவான்களை கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வந்தார். அவர்கள் நகரத்திற்குள் பிரவேசித்தார்கள், (ஓ!) அநேகருக்கு காணப்பட்டார்கள். ஓ, அதைத் தான் நாம் சற்று வரைவோமென்றால், அது எவ்வளவு அழகான ஒரு காட்சி! அவர் மரித்தபோது இயேசுவை கவனித்துப் பாருங்கள். 18இங்கே, நான் அடிக்கடி கூறுவது போல, இங்கே சபையில், இங்கே ஒரு பட்டியல் இருக்கிறது. இங்கே மானிடப் பிறவிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் இந்த இருட்டு மற்றும் கறுப்பு, குற்ற உணர்வான மகத்தான கூட்டுத்திரளாக உள்ளனர். இங்கே அழிந்து போகக்கூடிய மானிடப் பிறவிகள் வாழ்கின்றனர். கீழ் உலகத்திலிருந்தோ அல்லது மேல் உலகத்திலிருந்தோ ஒரு பாதிப்பு இல்லாமல் நீ இங்கே ஒரு ஆவிக்குரிய இனமாக, பாவியாகவோ அல்லது பரிசுத்தவானாகவோ, இருக்க முடியாது. இங்கிருந்து பாதிப்பு உனக்கு உண்டாயிருக்குமானால், நீ மேலிருந்து வந்தவன். உன்னுடைய வானத்திற்குரிய சரீரம் மேலே இங்கே காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நீ ஒழுக்கக்கேடான, மாய்மாலமிக்க, இரண்டுங்கெட்ட நிலையில் இருந்தால், உங்களுடைய வானத்திற்குரிய சரீரம் இங்கே கீழேயே உள்ளது, அது மேலே உள்ளது என்று நீ எவ்வளவு தான் சிந்தித்தாலும் சரி; ஏனெனில் நீ கொடுக்கும் கனியானது ஜனங்களுக்கு முன்பாக நீ எங்கிருந்து வருகின்றாய் என்பதை நிரூபிக்கிறது. ஆதலால் வேறு எங்கேயோ நீ எப்படியிருக்கிறாயோ அவ்விதமே நீ இங்கேயும் இருக்கின்றாய். நீ இங்கேயிருந்து கடந்து செல்லும் போது அங்கே உன் ஜீவியமானது உன்னுடைய மரபு வழியை பிரதிபலிக்கிறது. உங்களுக்கு புரிகின்றதா? 19சரியாக நாம் இப்பொழுது (ஓ, அதைக் குறித்து நான் நினைத்துப் பார்க்கையில்) சரியாக இப்பொழுது நாம் தேவனுடைய பிரசன்னத்தில் மகிமைப்படுத்தப்பட்டு, மறுபடியும் பிறந்த விசுவாசிகளாயிருக்கிறோம். ''இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும், நமக்கென்று ஒன்று ஏற்கெனவே மகிமையில் காத்துக் கொண்டிருக்கிறது“. வேறெங்கேயோ அல்ல, சரியாக இப்பொழுது காத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்த பூமிக்குரிய சரீரங்கள் அந்த அழியாமையால் உடுத்துவிக்கப்பட வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது சரியா? வியாதி மற்றும் பிணிகள் மற்றும் வலிகள், மற்றும் ஏமாற்றங்கள் மற்றும் இருதயவலிகள், மற்றும்... ஓ, இந்த பழைய பூச்சி நிறைந்த வீடு மூடப்படும் போது நான் மகிழ்ச்சி கொள்வேன், நீங்களும் தானே? ஆம், ஐயா! நாம் வீட்டிற்குச் செல்வோம். அது சரி. இந்த... நாம் - தரித்துக் கொள்ள தவிக்கிறோம், ஆவிக்குரிய தவிப்பு. ஓ, சுற்றிலுமிருக்கின்ற எல்லா வேதனையும், பாவம், நாற்றம், அழிவுள்ள ஜீவியம், ஏமாற்றம் மற்றும் எல்லாமும் கொண்ட கூட்டுத்திரளை நீ நோக்கிப் பார்ப்பாயானால், நான் “ஓ, தேவனே, இது இன்னும் எவ்வளவு காலம் இருக்கும்?'' என்று நினைப்பேன். 20இந்த நாட்களில் ஒன்றில் என்னுடைய கடைசி பிரசங்கத்தைச் செய்து, அதைப் போல வேதாகமத்தை கீழே வைத்து விட்டு, வீட்டிற்குச் செல்வேன். ஓ, அது என்ன ஒரு சமயமாக இருக்கும். ஆகவே இந்த பூமிக்குரிய கூடாரம் இங்கே முடிக்கப்படும்போது, நான் ஒரு வினாடிக்குள் மறுபுறம் செல்வேன்; நீங்களும் அவ்விதமாகத்தான். ஓ, என்னே! அவர்கள் கூறியதில் ஆச்சரியம் இல்லை. இந்த மாம்ச அங்கி, கீழே போட்டு மேல் எழும்புவேன் நான், நித்திய பரிசை பிடித்துக் கொள்வேன்; காற்றினூடாக செல்லும் போது சத்தமிடுவேன்... (நிச்சயமாக, மேலே செல்லும் போது) இப்பொழுது, அது எங்கேயிருக்கிறது? நாம் அதை எப்பொழுது பெற்றுக் கொள்வோம்? இப்பொழுது! “எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்''ஆகவே நம்முடைய மகிமைப்படுத்தப்பட்ட, அழியாமை கொண்ட சரீரம் சரியாக இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில், நாம் வரத்தக்கதாக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை உங்களால் உணரமுடிகிறதா? 21நீங்கள் அறிவீர்களா? ஒரு குழந்தை பூமியில் பிறக்கின்ற போது, பிரசவிப்பதற்கு முன்பு அது உயிருள்ளதாயிருக்கின்றது. ஆனால் ஆனால் அது இன்னும் பிரசவிக்கப்படவில்லை. அந்த குழந்தை வரும்போதே - அது - அது ஆரம்பிக்க - பிறக்கும்போது... அதன் நுரையீரல்கள் மூடப்பட்டு, அது மரித்துவிடுகின்றது. அதன் தசைகள் உதறுகின்றன, நடுங்கின்றன. ஆனால் முதல் கேள்விகளும் பதில்களும் காரியம் என்னவெனில், இதைப் போன்று ஒன்றோ அல்லது இரண்டு முறை கையினால் அதைத் தட்டும் பொழுது... (சகோதரன் பிரன்ஹாம் விளக்கிக் காண்பிக்கிறார் - ஆசி) அது (சகோதரன் பிரன்ஹாம் திணறுதல் என்ன என்பதை காண்பிக்கிறார் - ஆசி) தன் சுவாசத்தை இழுத்துக் கொள்கின்றது. காரியம் என்ன? ஒரு தாயினுள் மாம்ச சரீரம் உருவாகும்போதே, அந்த குழந்தை பூமியில் பிறக்கும் போதே அதை ஏற்றுக்கொள்ள ஆவிக்குரிய சரீரம் காத்திருக்கின்றது. இந்த ஆவிக்குரிய சரீரத்தின் பிறப்பு எவ்வளவு நிச்சயமோ அதேபோல அது இவ்வுலகத்தைவிட்டுக் கடந்து செல்கையில் மாம்ச சரீரம் அதை ஏற்றுக் கொள்ள காத்திருக்கின்றது. பாருங்கள்? எதிர்மறையாக, மறுபடியும் சரியாக ஏதேன் (பாருங்கள்?), சரியாக அங்கே செல்கிறது. 22இப்பொழுது, அங்கே தேவன்... அதே போன்று, அது - அது மரணத்தினின்று எல்லா கூரையும் வெளியே அடித்துத் தள்ளுகிறது. எனவேதான் பவுல் நின்று ''மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?'' என்று கூறினதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவன் நம்முடைய, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்றான். ஆம், நண்பர்களே! இந்த பூமிக்குரிய கூடாரம் ஒழிந்து போனாலும் ஏற்கெனவே காத்துக் கொண்டிருக்கிற ஒன்றை நாம் கொண்டிருக்கிறோம், ஆதலால் அதை குறித்து மறந்துவிடுங்கள். இப்பொழுது உனக்கு, நண்பனே அதைக் கேட்ட நீ ஒரு பாவியாயிருந்தால், தேவன் உன் மீது இரக்கமாயிருப்பாராக. ஆம், ஐயா இப்பொழுது நீ ஆக்கினைக்குள்ளாக இல்லை, இங்கே இல்லை, இல்லை! நீ செழிப்பாய், சென்று கொண்டேயிரு. ஆகவே அது எல்லாம் தேவனுடைய இரக்கங்கள் மூலமாகவே ஆகும். அவைகள் எல்லாம் தேவனுடைய இரக்கங்கள் மூலமாக நீ செழித்து நீ என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய். அது உண்மை. ஆனால் இந்த நாட்களில் ஏதாவதொன்றில், நீ ஒரு பாவியாயிருந்து உன்னுடைய ஆத்துமா வெளியே நழுவும் போது, அது நியாயத்தீர்ப்புக்குச் சென்று ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படும், ஆகவே பிறகு, நீ புறம்பாக்கப்படுவாய், நீ மறுபடியுமாக இந்த பூமிக்கு கொண்டு வரப்படும் நாள் வரைக்கும் வேதனைக்குட்படுத்தப்பட்டிருப்பாய். நீ ஒரு அழியாத சரீரத்தை பெறுவாய், மரிக்காத ஒரு அழியாத சரீரம், பிறகு அழுகையும் கூக்குரலும் பற்கடிப்பும் இருக்கின்ற புறம்பான இருளுக்குள் தள்ளப்படுவாய், அதில் ஒரு புழு கூட சாகாது, நெருப்பும் அவியாது, வரவிருக்கின்ற எல்லா காலங்களினூடாக நீ வேதனைக்குட்படுத்தப்படுவாய். இயேசு அதைக் கூறினார். அது ஒரு கடுமையான காட்சி, ஆனால் அதைத்தான் வேதாகமம் கூறுகின்றது. 23தேவன் பாவத்தைக் கடிந்து கொண்டு அதற்கு எப்படிப்பட்ட ஒரு கிரயத்தை செலுத்த வேண்டியதாயிருந்தது, அந்த அநீதியான ஆவிகள் மறுபடியுமாக கட்டவிழ்க்கப்பட்டால் எப்படியாகயிருக்கும்? கடந்த ஆறாயிரம் வருடங்களாக நாம் கொண்டிருந்ததைப் போன்று வேறொரு காரியத்தை நாம் கொண்டிருப்போம். அது சரியா? மற்றொரு தருணம் என்பது இருக்கவேயிருக்காது. இப்பொழுது நீங்கள் ''நல்லது, நீங்கள் கல்லறைக்கு சென்றால் நீங்கள் - நீங்கள் பாதாளத்திற்கு செல்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்“ என்று கூறலாம். உங்கள் சரீரம் பாதாளத்திற்கு செல்கிறது, அது சரி. பாதாளம் என்பதற்கு ”வேறு பிரித்தல்'' என்று அர்த்தம். மரணம் என்றால் “வேறு பிரித்தல்” என்று அர்த்தம். உங்கள் சரீரம் மரிக்கிறது, வேறு பிரிகிறது. நீங்கள் இங்கே உங்கள் பிரியமானவர்களிடமிருந்து சென்றுவிடுகிறீர்கள், ஆனால் அதைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கவில்லை. “அன்றியும் ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றது”, பாருங்கள். 24இப்பொழுது, நீங்கள் - தேவனுடைய நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டுமென்றால், நீங்கள் கோபமுள்ள தேவனால் நியாயந்தீர்க்கப்படப் போகிறீர்கள். ஆகவே தேவன் - அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை ஏற்கெனவே அறிவித்துவிட்டார். ஆகவே நீங்கள் அங்கே செல்லுமுன்பே உங்களுடைய நியாயத்தீர்ப்பு என்னவென்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே செய்யப் படவேண்டிய காரியம் என்னவென்றால் இரட்சிக்கப்பட்டு, இந்த மகிமையான காரியத்தை கொண்டிருத்தல்... கவனியுங்கள், நான் - என்னுடைய ஆவி... கவனியுங்கள், நாம் மரித்துப்போன ஏதோ ஒன்று அல்ல; நாம் உயிரோடிருக்கிறோம். என்னுடைய - இங்கிருக்கின்ற இந்த மேஜை - என் விரலிலுள்ள ஜீவனை இந்த பலகை கொண்டிருக்குமானால், அந்த மரணம் - அது அசையத்தக்கதாக ஒரு சக்தியை கொண்டிருக்குமானால்,என்னுடைய விரல் அசைவது போல அது அசையும். அந்த விதமான பொருளைக் கொண்டு நாம் உண்டாக்கப்படவில்லை. நாம் அணுக்கள், ஜீவனால், நார்ப் பொருளால் உண்டாக்கப்பட்டிருக்கிறோம், இவையெல்லாம் கட்டுப்படுத்த ஒரு ஆவி அங்கேயிருக்கிறது. அது எவ்வளவு வேகமாக பயணிக்க வேண்டும் என்பது பாருங்கள். இங்கே பாருங்கள்; என் கை அதைத் தொடுகிறது. இப்பொழுது சீக்கிரத்தில்... அங்கே ஒரு எதிர்மறை (negative) மற்றும் ஒரு நேர் எண் (positive) விளைவு ஏற்படுகிறது. என் விரல் அதைத் தொட்டவுடன், அதை உணர்கிறது. அது மிக வேகத்தில் என் மனதிற்கு செல்கிறது, என்மனது, “அது குளுமையாயிருக்கிறது'' என்று கூறுகிறது. அது திரும்பிவிடுகின்றது. அது எவ்வளவு வேகமாக இருக்கிறது என்பதை பாருங்கள்? அது எண்ணத்தை விட வேகமானது, எந்த ஒன்றையும் விட வேகமான செயல் அங்கே இருக்கின்றது. அது என்ன? அங்கே அதில் ஏதோ ஒன்று உயிரோடிருக்கிறது, அந்த நரம்பு மனதின் மேல் கிரியை செய்கின்றது. நான் என்ன கூறமுனைகிறேன் என்று தெரிகிறதா? நரம்பு அதை தொடுகிறது, அதை உணர்கிறது, மனதற்கு ”அது குளுமையாக இருக்கிறது'' என்று கூறுகிறது. மனது அது குளுமையாயிருக்கிறது என்று கூறுகிறது, ஏனெனில் அதை நரம்பு உணர்ந்து கொள்கிறது. ஓ என்னே! நீங்கள் ஒப்பனையைக் குறித்து பேசுகிறீர்கள். 25ஆகவே பிறகு அதனுடைய எல்லாம்... நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணத்தையும் தேவன் எவ்வளவு வேகமாக அறிந்து கொள்கிறார். நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், அவர் அதை அறிந்திருக்கிறார். ஆதலால் ஒரு விசுவாசி மரிக்கையில் அவன் தன்னை உண்டாக்கினவராகிய, தன்னுடைய தேவனின் பிரசன்னத்திற்குள் சென்றுவிடுகிறான். ஆகவே பாவியானவன், அவன் மரிக்கையில், தன்னுடைய முடிவான இடத்திற்கு செல்கிறான். பிறகு வரும் போது... இப்பொழுது, நான் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் குறித்து இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நியாயத்தீர்ப்பில் பாவியோடு நிற்கவேண்டிய, அவனோடு நியாயந்தீர்க்கப்பட வேண்டிய, இரண்டாம் வருகையில் வருகின்ற சிலர் இருக்கின்றனர். நீங்கள் அதை நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். பாருங்கள்? 26இப்பொழுத, அங்கே... முதலாவதாக நடக்கப் போவதென்னவென்றால் மணவாட்டியினுடைய வருகை. இந்த உலகத்தில்... ஜனங்கள் இருப்பார்கள்... நான்... இதனுடன் வித்தியாசமான கருத்தைக் கொள்ளலாம், ஆனால் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதனால், நீங்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்றுவிடுவீர்கள் என்பதல்ல. அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே, அவர்கள் தான் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்கள். இங்கே உபத்திரவத்தினூடாக செல்கின்ற எஞ்சியுள்ள சிலர் பூமியில் விடப்பட்டிருப்பார்கள். சபை எடுத்து கொள்ளப்படுதலில் மேலே எடுக்கப்பட்டிருக்கும். 27பொருளிலிருந்து ஒரு துண்டை வெட்டப் போகிறீர்கள் என்றால் பொருளை இப்படியாக வைப்பீர்கள், பிறகு நீங்கள் வைத்திருக்கிற முன்வரைவு (pattern) மாதிரி படிவத்தை இந்த விதமாக அதன் மேல் வைத்து, முன்வரைவு படிவத்தின் படியே நீங்கள் பொருள்களை வெட்டுவீர்கள். இங்குள்ள ஸ்திரீகளின் எத்தனை பேர் அதை அறியாமல் இருக்கிறீர்கள்? அது சரியா? முன்வரைவு மாதிரி படிவத்தில் இருக்கின்ற அதே விதமான பொருள்கள் தான் ஏனைய மற்ற பொருள்களும் கூட. அது சரியா? ஆனால் இந்த விதமான ஒன்றைத் தான் நீங்கள் எடுக்கின்றீர்கள். நீங்கள் அதை பின்னர் உபயோகப்படுத்த அப்படியே வைத்துவிடுவீர்கள், ஆனால் நீங்கள் வெட்டி எடுத்துவிட்ட அந்த - அந்த பொருள்கள் இப்பொழுது, இந்த முன் வரைவுமாதிரி படிவத்தை வைப்பது யார்? தேவன், தெரிந்து கொள்ளப்படுதல் மூலம். ஆமென் தேவன் தெரிந்து கொள்ளப்படுதல் மூலம் முன் வரைவு (pattern) மாதிரி படிவத்தை வைக்கின்றார். அவர் “இப்பொழுது, உலகத் தோற்றத்திற்கு முன் நான் தெரிந்து கொண்டேன்... நான் இவைகளை வைக்கிறேன்...” என்று கூறுகிறார். ஏன், இயேசுவும் சீஷர்களிடம் தாம் அவர்களோடு இருந்ததாகவும், தாம் அவர்களை தெரிந்து கொண்டதாகவும் உலகத்தின் அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்பாகவே அவர்களை அறிந்திருந்ததாகவும் கூறினார். அது சரியா? ஆதலால் தேவன் முன்வரைவு மாதிரி படிவத்தை வைக்கின்றார். இப்பொழுது, எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லும் தெரிந்து கொள்ளப்பட்ட குழுவொன்று இருக்கும். மேலும் நல்லவர்களாகவும், நேர்மையுள்ளவர்களாகவும், பரிசுத்த ஜீவியம் செய்பவர்களாகவும், தேவனால் இரட்சிக்கப்பட்ட ஜனங்களாகவும் இருந்து, எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லாத ஒரு ஜனக்கூட்டம் ஒன்று இருக்கும்; அவர்கள் இரண்டாம் உயிர்த்தெழுதலில் வருவர், ஏனெனில்... 28ஓ, நான் ஏதோ ஒன்று இங்கே உங்களுக்கு வெளிப்படையாக்குகையில் நீங்கள் என் மேல் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று நான் - நான் நம்புகிறேன். பாருங்கள்! நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள். நான் - நான் அதைக் கூறித்தான் ஆக வேண்டும், ஏனெனில் நான் - அதைக் கூறவேண்டும் என்று என்னை நெருக்கிக் கொண்டேயிருக்கிறது (நீங்கள் பாருங்கள்?) கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள். அப்படியானால், நான் இதைக் கூறப்போகிறேன்: விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் என்பதில் விசுவாசம் கொண்டுள்ள மக்கள் இருக்கின்றனர் (பாருங்கள்?) அவர்கள் ஒரு நல்ல, சுத்தமான, பரிசுத்த ஜீவியம் செய்கின்றனர்; அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலிலும் கூட விசுவாசம் கொண்டுள்ளனர். திரும்ப... யூதாஸ் காரியோத்தைப் பாருங்கள். யூதாஸ் காரியோத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டபோது நீதிமானாக்கப்பட்டான் - யூதாஸ்காரியோத்து. யோவான் 17:17-ல் யூதாஸ்காரியோத்து பரிசுத்தமாக்கப்பட்டு மத்தேயு 10-ல் வெளியில் சென்று பிசாசுகளை துரத்த வல்லமை கொடுக்கப்பட்டது. வியாதியஸ்தரை சுகப்படுத்திய பிறகு யூதாஸ்காரியோத்து திரும்பி வந்தான், அவன் களிகூர்ந்து, நீங்கள் எப்பொழுதும் கண்டிராத வகையில் ஒரு நல்ல உருளும் பரிசுத்தனாக சத்தமிட்டுக் கொண்டிருந்தான். அது சரியா? வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. ஆனால் அவன் பெந்தெகொஸ்தேவிற்கு வந்த போது தன்னுடைய நிறத்தைக் காட்டினான். இப்பொழுது அதை கவனியுங்கள் - அந்த ஆவி. 29இன்றைக்கு உலகில் ஜனங்கள், நீதிமானாக்கப்படுதலில் விசுவாசம் கொண்டிருக்கின்ற நல்ல கிறிஸ்தவ ஜனங்கள், நீதிமானாக்கப்படுதலில் விசுவாசம் கொண்டிருக்கின்ற அநேகர், ஆயிரக்கணக்கான,லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பரிசுத்தமாக்கப்படுதலுடன் எந்தவித தொடர்பும் இருக்காது. நாம் அதை பிரஸ்பிடேரியன், எபிஸ்கோபலியன், இன்னும் மற்றவை என்று கூறுவோம். அவர்கள் நீதிமானாக்கப்படுதலில் விசுவாசம் கொண்டுள்ளனர்; அதை பிரசங்கிக்கின்றனர். அது நல்லது தான்; அவர்கள் சரியே. ஆனால் இப்பொழுது, அந்த - அந்த நசரீன்கள், பரிசுத்த யாத்ரீகர்கள், விடுதலை மெத்தொடிஸ்டுகள் பரிசுத்தமாக்கப்படுதலுக்குள் செல்கின்றனர். அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலில் விசுவாசம் கொண்டிருக்கின்றனர். சரியான விதத்தில் அவர்கள் சரியாக உள்ளனர். அவர்கள் ஜெயத்தைப் பெற்றுக் கொள்கின்றனர், சத்தமிடுகின்றனர், கர்த்தரை ஸ்தோத்தரிக்கின்றனர். அவர்கள் சரியாக உள்ளனர்; அவர்கள் சரியாக இருக்கின்றனர். அவர்கள் யாராவது ஒருவரிடத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேககத்தைக் குறித்தும், வல்லமை, மற்றும் அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைக் குறித்து பேசிப் பாருங்கள், அவர்கள் சரியாக அங்கேயே தங்களுடைய நிறத்தை காண்பிப்பர். அதைக் குறித்த ஒன்றுமே எனக்குத் தேவையில்லை. நான் விசுவாசிப்பதில்லை...'' என்று கூறுவார்கள். நல்லது, என்னுடைய நல்ல நசரின் ஜனங்களுக்கும் கூட, அந்நிய பாஷைகளில் பேசுகின்ற ஒரு மனிதன் பிசாசினால் உண்டானவன் என்று விசுவாசிக்கின்றனர். நல்லது, சகோதரனே நீ அதைச் செய்வாயானால், நீ... 30என்ன, சுடான் மிஷன்ஸ் தலைவராகிய டாக்டர் ரீட்ஹெட், அவர் அந்நிய பாஷையில் பேசினதால் அவரை அவர்கள் வெளியேற்றினர், ''அதை எங்களால் வைத்திருக்க முடியாது'' என்றனர். நான், “அப்படியானால் பவுல் பிரசங்கித்த விதமாக உங்களால் பிரசங்கிக்க முடியாது. உங்களால் பவுலின் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனெனில் பவுல் அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள் என்றான்'' என்று கூறினேன். அது சரி. ஆனால் அவர்களோ - அவர்களோ அது பிசாசினால் உண்டானது என்று கூறுகிறார்கள். அவர்கள் அநேக போலிகளைக் கண்டுள்ளனர், ஆதலால் அதை அங்கே கொண்டு சென்றுவிடுகின்றனர். பாருங்கள்? ஆனால் ஒரு நீதிமானாக்கப்பட்ட மற்றும் பரிசுத்தமாக்கப்பட்ட சபை ஒன்று இருக்கின்றது; ஆனால் பரிசுத்தமாக்கப்படுதலிலிருந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வித்தியாசப்பட்டது என்று மறுதலிக்கின்றனர். ஆனால் அது - அது ஒரு வித்தியாசப்பட்ட கிரியையே. நிச்சயமாக அது அவ்வாறுதான். 31கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து மூன்று தனிப்பொருட்கள் வந்தன. அவருடைய சரீரத்திலிருந்து வந்த அதே தனிப் பொருட்களைத்தான், நாம் அவருடைய சரீரத்திற்குள் செல்லத்தக்கதாக உபயோகப்படுத்துகிறோம். அங்கே ஜலம் (அது சரியா?), இரத்தம் (அது சரியா?) மற்றும் ஆவி இருந்தது. ஆகவே - இயேசு - வேத வசனம் கூறுகிறது, ''பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவர்களே. இம்மூன்றும் ஒன்றாயிருக்கிறார்கள்; ஆனால் பூலோகத்தில் சாட்சியிடுகின்ற மூன்று இருக்கின்றது; அவைகள் ஒன்றல்ல,' அவர், “ஆனால் அவைகள் ஒன்றாக ஒருமைப்பட்டிருக்கிறது: ஜலம், இரத்தம், மற்றும் ஆவி'' என்று கூறுகிறார். அது சரியா? இப்பொழுது, குமாரனைக் கொண்டிராமல் உங்களால் பிதாவைக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிராமல் உங்களால் குமாரனைக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் ஆனால் பரிசுத்தமாக்கப்படாமல் நீங்கள் நீதிமானாக்கப்பட முடியும். மேலும் நீங்கள் நீதிமானாக்கப்படுதல் பரிசுத்தமாக்கப்படுதல் ஆகிய இரண்டுமே ஆக்கப்பட்டு இன்னுமாக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளலாமலிருக்க முடியும். பாருங்கள்? அது உண்மை. அது வேதவசனம். ''இந்த மூன்றும் அவர் “பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள், ஜலம், இரத்தம், ஆவி; இவைகள் ஒருமைப்பட்டிருக்கிறது'' என்று கூறினார், பாருங்கள். அவைகள் ஒன்று அல்ல, ஆனால் அவைகள் ஒன்றில் ஒருமைப்பட்டிருக்கிறது, ஏனெனில் அது அளவு முறையான அதே ஆவியாகும். தேவன் அந்த ஆவியை நமக்கு அளவாக அளிக்கின்றார். 32இப்பொழுது, நீதிமானாக்கப்படுதலின் கீழ், லூத்தர் ''விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்“ என்று பிரசங்கித்தார். அவர் அதைத்தான் பிரசங்கித்தார். அது சரியா? அவர் ஒரு மகத்தான செய்தியைக் கொண்டிருந்தார். அது பரிசுத்த ஆவியின் ஒரு பாகமாக இருந்தது. அப்பொழுது, லூத்தரின் செய்தியானது வந்த போது - தேவன் தம்முடைய சபையை எழுப்பி மகத்தானதாக அதை வெளியே அனுப்பவிருந்தார் (ஓ, என்னே!) லூத்தர் ''ஓ, நாம் வார்த்தையில் அதைப் பெற்றுக் கொண்டோம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்'' என்றார். ஆனால் ஜான் வெஸ்லியோ “ஓ, இல்லை!'' என்றார். அவரும் ஜார்ஜ் வைட்ஃபில்டும், மற்றவர்களும், அவர்கள், ''நாங்கள் பரிசுத்தமாக்கப்படுதலில் விசுவாசிக்கிறோம் அது கிருபையின் இரண்டாவது உறுதியான கிரியையாக உள்ளது'' என்றனர். அது சரியா? ஆகவே அவர்களும் இரத்தத்தை பிரசங்கித்தனர். நல்லது, லூத்தர் அசைய விருப்பமில்லாதவராக இருந்ததால், தேவன் அதை வெஸ்லியன் மெத்தொடிஸ்டுகளிடத்தில் கொடுத்துவிட்டார். பாருங்கள்? ஆகவே அவர்கள் அதைக் கொண்டிருந்தனர். உலகமெங்கும் பரந்து சென்ற ஒரு எழுப்புதலை அவர்கள் கொண்டிருந்தனர். 33ஆகவே உண்மையான சபை... நல்லது இப்பொழுது, அந்த சமயமானது வருகையில்... இப்பொழுது, பரிசுத்த ஆவியின் அடையாளமாகிய அடையாளங்கள், அதிசயங்கள், மற்றும் அற்புதங்கள் ஆகியவையோடு வருகின்றது. இப்பொழுது, வெஸ்லி இதனுடன் உடன்பட விரும்பவில்லை. இப்பொழுது, இந்த சமயங்களில் வெஸ்லி பூமியின் மேல் இருந்திருப்பாரானால் மார்டின் லூத்தர் பூமியின் மேல் இருந்திருப்பாரானால், அதனுடன் அவர்கள் ஒருமைப்படுவார்கள், ஆனால் இரண்டாவது சுற்று... இப்பொழுது, பெந்தெகொஸ்தேயினர் அந்நியபாஷைகளில் பேசுவதில் விசுவாசம் கொண்டு, பெற்றுக் கொண்டனர். பிறகு அவர்கள் அதை ஒரு தொடக்கத்திலுள்ள அடையாளம் என்று ஒவ்வொருவரும் அந்நிய பாஷைகளில் பேசவேண்டும் என்ற விதத்தில் மாற்றிப் போட்டனர். அது பிழையான ஒன்றாகும். ஆனால் இப்பொழுது - இப்பொழுது அவர்கள் திரும்பவுமாக வந்து... அவைகள் தேவனால் அளிக்கப்பட்ட தனிக் கூறுகள். நான் நீலக்கண்களைக் கொண்டிருக்கிறேன் என்றால் அதை என்னால் தவிர்க்க முடியாது அல்லது... தேவன் அதைக் கொடுத்தார். அது சபையில் அவருடைய வரம் ஆகும். தேவன் அவைகளை வைத்தார். ''தேவன் சபையில் அதை வைத்திருக்கின்றார்...'' பாருங்கள்? 34இப்பொழுது. ஆனால் அவர்கள் அதனுடன் வந்த போது... இப்பொழுது, அவர்கள் ஒரு மகத்தான ஆசீர்வாதங்களை கொண்டிருந்தனர், அவர்கள் லூத்தரன்களை அல்லது அந்த மெத்தொடிஸ்ட், போன்றோரையும் கடந்து அப்பால் சென்றனர். ஆனால் இப்பொழுதோ, ''பெந்தெகொஸ்தேயினர், மெத்தொடிஸ்ட் மற்றும் மற்றவர்களையும் விட மோசமான நிலையை அடையத் தக்கதாக தங்களை ஸ்தாபித்துக் கொண்டுவிட்டனர். பிறகு அவர்கள் ஒரு இடத்திற்கு வந்தள்ளனர், இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று... அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து சுமார் நாற்பது வருடங்கள் ஆகின்றது. ஆனால் இந்த தேவனுடைய மரமானது ஒன்பது வித்தியாசமான கனிகளை அதன் மேல் கொண்டதாயிருக்கிறது. இப்பொழுது, நீங்கள் இந்த எந்த ஒரு கனிகளையும் கொண்டிருக்கலாம். பாருங்கள்? தேவன் அவைகளை அனுப்பியிருக்கின்றார், ஆனால் மொத்தமாக அவை அந்த மரத்திலிருந்து வெளிவருகிறது. இப்பொழுது, நீதிமானாக்கப்படுதல், அதை நோக்கிப் பாருங்கள். 35இக்காலை அளிக்கப்பட்ட செய்தியைப் பாருங்கள். நியாய சங்கம் உட்கார்ந்த போது, புஸ்தகங்கள் திறக்கப்பட்டபோது... இப்பொழுது, இயேசு கோடா கோடி பரிசுத்தவான்களுடன் வந்தார், அப்பொழுது நியாய சங்கம் உட்கார்ந்தது. இங்கே அவர்கள் எல்லாரும் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பை சுற்றிலும் இருந்தார்கள் (நாம் வேத வசனத்தினூடாக அதை பார்த்தோம்), புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவ புஸ்தகம் என்னும் மற்றுமொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. இங்கே எடுத்து கொள்ளப்படுதலில் இருந்த அவர்கள் அவர்களை நியாயந்தீர்த்துக் கொண்டிருந்தனர். அது சரியா? வீட்டிற்கு சென்று தங்களுடைய மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்களை பெற்றுக் கொண்டு, ஆயிர வருட அரசாட்சியினூடாக ஜீவித்த அவர்கள் இங்கே வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் அவர்களை நியாயந்தீர்த்துக் கொண்டிருந்தனர். அவர் செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிப்பார் என்று கூறியுள்ளார். இப்பொழுது, நீங்கள் இங்கே, “ஏன், இப்பொழுது கவனியுங்கள்” என்று கூறலாம், ''அது வருமா... எப்படி சகோதரன் பிரன்ஹாம்?'' என்று கூறலாம். அது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில். 36“எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்தென்ன?'' நல்லது, எடுத்து கொள்ளப்படுதல் சமயத்தில்... இயேசு அதை ஒரு உவமையாக கற்றுக் கொடுத்தார். அவர் அதை பல வித்தியாசமான வழிகளில் போதித்தார். இதோ ஒரு வழி. கர்த்தரை சந்திக்க சென்ற பத்து கன்னிகைகள் இருந்ததாக அவர் கூறினார். ஆகவே... அவர்கள் எல்லாரும் கன்னிகைகளாக இருந்தனர், ஆனால் சிலர் தங்கள் தீவட்டிகளில் எண்ணெயை வைத்திருந்தனர், சிலர் எண்ணெயை வெளியே போக விட்டுவிட்டனர். அது சரியா? ஆகவே மணவாட்டி... இப்பொழுது, அந்த எண்ணெய் என்னவாகயிருந்தது? அந்த எண்ணெய் பரிசுத்த ஆவி ஆகும்; வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் கன்னிகைகளாக இருந்தனர். இப்பொழுது, கன்னிகை என்றால் என்ன? ”பரிசுத்தமானது, சுத்தமானது, வேறு பிரிக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது“ அது சரியா? 37ஒரு சிறிய கண்ணாடி என்னிடம் இருந்தால் அதை நான் காண்பிக்க... இங்கே உதாரணத்திற்கு, இங்கே இருக்கின்ற பாட்டிலைப் போல, அது காலியாக இருந்தால், நான் அதை எடுத்து, அதை எடுத்தேன். நான் அதை உபயோகிக்க விரும்புகிறேன். இப்பொழுது நல்லது, நான் முதலாவதாக செய்ய விரும்பும் காரியம், நீதிமானாக்கப்படுதல். நான் அதை உபயோகிக்க விரும்பினதாலேயே அதை எடுத்தேன். அது அழுக்காக இருக்கின்றது; நான் அதை பன்றித் தொட்டியில் கண்டெடுத்தேன், அல்லது வேறெங்காவது இருந்திந்தாலும் சரி. இப்பொழுது நான் ஒரு சரியான நபராக இருப்பேனானால், நல்லது, அங்கே நான் உபயோகப்படுத்தப் போகின்ற அதில் ஏதோ ஒரு சுத்தமானதை வைக்க நான் விரும்பமாட்டேன். முதலாவதாக நான் - நான் அதை தீர்மானித்தாக வேண்டும். இப்பொழுது, செய்ய வேண்டிய சிறந்த காரியம் என்னவெனில் அதை தேய்த்துக் கழுவி, அதை சுத்தமாக்கி, பிறகு அதை பரிசுத்தம் செய்தல் ஆகும். அது சரியா? இப்பொழுது பரிசுத்தமாக்குதல் என்ற வார்த்தையின் பொருள் என்ன? சுத்தமாக்கப்பட்டு, ஊழியத்திற்கென்று வேறு பிரிப்பது பழைய ஆலயத்தின் பாத்திரங்கள் சுத்தமாக்கப்பட்டு ஊழியத்திற்கு பிரிக்கப்படுகின்றது. இப்பொழுது, அதோ அந்த சபை, தேவன் லூத்தரின் காலத்தின் மூலமாக அதை எடுத்தார், நீதிமானாக்கப்படுதல்; வெஸ்லியின் காலம், அவர் அவர்களை பரிசுத்தமாக்கினார். இந்த காலத்தில் அவர் அவர்களை நிரப்புகிறார். பாருங்கள்? பரிசுத்த ஆவியின் மூலமாக அவருடைய ஜீவன்... பரிசுத்தஆவி அவர்களை எடுத்தது; பரிசுத்தாவி அவர்களை பரிசுத்தமாக்கியது. பரிசுத்த ஆவிஅவர்களை நிரப்பினது. பாருங்கள்? அதே சபைதான். ஆனால் இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது இந்த நாளில்... 38இப்பொழுது, லூத்தர், வெஸ்லி, மற்றும் அவர்கள் எல்லாரும், அவர்களில் அநேகர் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு பிரசங்கிக்கப்பட்ட ஆவியின் பாகத்தை அவர்கள் கொண்டிருந்தனர்; அவர்கள் அதை விசுவாசித்தனர். இப்பொழுது எடுத்து கொள்ளப்படுதலில்... இன்று அசைந்து செல்லாத ஸ்தாபனங்களுக்குள் சென்றுவிட்ட ஜனங்கள் உள்ளனர். அது ஒரு... ஒரே ஒரு ஸ்தாபனம் தான் இருக்கின்றது, அது தேவனுடைய சபையாகும்; அது அதே விதமாக அசைந்து சென்றது. ஆனால் இந்த ஸ்தாபனங்களோ இந்த காரியங்களை உடைத்துப் போட்டிருக்கின்றன. அநேக ஜனங்கள் இன்றைக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பார்த்து அது ஒன்றுமற்றது என்று கூறுகின்றனர். ஆனால் இன்னுமாக அவர்கள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கின்றனர்; இன்னுமாக அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள், “ஓ, அந்த உபயோகமற்ற காரியத்தை செய்து கொண்டிருக்கின்றனர்'' என்று கூறுவர். எல்லா விதமான சோளக் கொல்லை பொம்மைகளையும் பிசாசு வைத்திருக்கின்றான் என்று எனக்குத் தெரியும். எங்கே நல்ல ஆப்பிள் பழங்களை காண்கிறீர்களோ, அங்கே தான் சுற்றிலும் சோளக் கொல்லை பொம்மைகள் இருக்கின்றன. அது சரி. நீங்கள் நேராக அங்கே சென்று ஆப்பிள் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருங்கள். பாருங்கள்? 39இப்பொழுது இந்த... பிறகு தேவன் பரிசுத்த ஆவியால் நிரப்பினார்... பிறகு அவர் அதை மகிமைப்படுத்தத் தக்கதாக தம்முடைய சபையை வைக்கின்றார். இரண்டாவது வருகையில், இங்கே மணவாட்டி, சபை திரும்ப வருகிறது. இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் உபத்திரவக் காலத்தினூடாக செல்கின்றனரா என்று பாருங்கள். அவர் இந்த கன்னிகைகள் வந்து, “உங்கள் எண்ணெயில் எங்களுக்கு கொஞ்சங்கொடுங்கள் என்றார்கள்'' என்று கூறினார். “மணவாளன் வருகின்றார்'' என்கின்ற சத்தம் புறப்பட்டுச் சென்றது, ''இதோ மணவாளன் வருகின்றார். அவரை சந்திக்கத் தக்கதாக அவருக்கு எதிர் கொண்டுப் போகப் புறப்படுங்கள்''. ஆகவே இந்த கன்னிகைகள், கன்னிகைகள் என்றால் யார், பரிசுத்தமானவர்கள், பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் (அதைக் குறித்து சிந்தியுங்கள்), பரிசுத்தமானவர்கள், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாமல் பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்கள், அவர்கள், ''எங்களுக்கு எண்ணெயைக் கொடுங்கள்'' என்று கூறினார்கள். ஆகவே அந்த சபையானது “போதுமான அளவுதான் எங்களிடம் உள்ளது, அப்படியானால் நீங்கள் சென்று ஜெபியுங்கள்'' என்று கூறினது. ஆனால் அப்பொழுது மிகவும் காலதாமதமாகிவிட்டிருந்தது. ஆகவே, அந்த சபை கலியாணத்திற்குள் சென்றது, இந்த மற்றவர்கள் புறம்பான இருளுக்குள் தள்ளப்பட்டனர் (அது சரியா?) அங்கே அழுகையும், கூக்குரலும் பற்கடிப்பும் இருந்தது; ஆகவே அவர்கள் உபத்திரவத்திற்குள் சென்று, அவதிப்பட்டு, மரித்தனர். 40இயேசு பூமிக்கு திரும்பி வந்தார். அவருடன் ஆயிரம் வருடங்கள், ஆயிரவருட அரசாட்சி துவங்கினது. நீதியுள்ளவர்களும் அநீதியுள்ளவர்களும் வந்தனர். அவர்கள் ஒவ்வொரு மனிதனையும் நியாயந்தீர்த்தனர். ஒரு பக்கம் வெள்ளாடுகளும் மறுபக்கம் செம்மறியாடுகளும் இருந்தன. பிறகு தேவன் வந்து பூமியின் விசாலத்திலிருந்து, கூடார சந்திப்பிற்காக சபையை மேலே எடுக்கின்றார், அங்கே நம்முடைய அருமையானவர்களுடன் நாம் ஒன்று கூடுவோம். பாருங்கள்? அங்கேதான் அந்த வித்தியாசம் உள்ளது. இப்பொழுது இங்கேயிருக்கின்ற இந்த ஜனங்கள்... நாம் மரிக்கையில், நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் இருப்போமானால், மறுகரையில் நிச்சயமாக கிறிஸ்து இயேசுவாகிய அந்த மகத்தான சரீரத்துடன் இருக்கத் தக்கதாக நாம் செல்வோம். நாம் பாவிகளாக இருப்போமானால், அவிசுவாசிகள் என்னும் பெரிய சரீரத்துடன் இருக்கத் தக்கதாக நாம் செல்வோம்; நம்முடைய பங்கு அங்கே நரகத்தில் மாய்மாலக்காரர்கள் இன்னும் மற்றவர்களுடன் இருக்கும் என்றும் தேவன் கூறியுள்ளார். ஆமென்! ஒருக்கால் சரியாக தெளிவாக இல்லாமலிருக்கலாம். ஆனால், நம்மால் கண்டுபிடிக்க முடியுமானால் நாம் இப்பொழுது பார்ப்போம். இப்பொழுது இங்கே சிறிய ஒன்று. 41கேள்வி: தயவு செய்து யாத்திராகமம் 24-வது 4-வது அதிகாரம் 24-வது வசனத்தை விளக்குங்கள். தேவன் மோசேயை அல்லது அவனுடைய குமாரனை கொல்ல முனைந்தார், ஏன்? இந்த வேத வசனத்தின் அர்த்தம் என்ன? அது எங்குள்ளதென்று நமக்குத் தெரியும், யாத்திராகமம் 4:24. இது ஒரு அருமையான கேள்வியாகும். இப்பொழுது ஒரு க்ஷணம் இங்கே நாம் இதை வாசிப்போம். யாத்திராகமம் 4 மற்றும் 24: வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார். இந்த கதையை எத்தனைப் பேர் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? இப்பொழுது, மோசேக்கு அநேக சந்ததிகள் முன்பு தேவன் ஆபிரகாமிற்கு விருத்தசேதனம் என்னும் அடை யாளத்தை அளித்தார். அது ஒவ்வொரு யூதனும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டுமென்று தேவன் செய்த உடன்படிக்கையாகும். அது சரியா?ஒவ்வொரு மனிதனும்... அது ஒரு அடையாளமாகும். இன்றைக்கு நாம் விருத்தச்சேதனம் பண்ணப்பட்டுள்ளோமா? மாம்சத்தினால் அல்ல, பரிசுத்த ஆவியினால். இப்பொழுது, இப்பொழுது, தேவன் ஒவ்வொரு ஆணுக்கும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும் என்று இந்த கட்டளையை அளித்தார். அங்கே சென்று இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்கத் தக்கதாக தேவன் மோசேயை அழைத்தபோது, அந்த அதே விடுவிக்கும் அடையாளத்தை தன்னுடைய குமாரனுக்கு அவன் செய்யவில்லை. நான் என்ன கூற முற்படுகிறேன் என்பதைப் பார்க்கிறீர்களா? நான் ''இப்போழுது சபையாகிய நீங்கள் எல்லாரும், உங்களில் ஒவ்வொருவரும் நீங்கள் உள்ளே வந்து தண்ணீரால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள். ஆகவே உங்களை சபை அங்கத்தினனாக செய்யப் போகிறோம். நாம் எல்லோரும் ஒன்றாக மகிமைக்கு செல்கிறோம்'' என்று நான் கூறுகிறேன் என்றால், என்ன, சகோதரனே, அது வேதவசனம் அல்ல. நீ மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியினால் விருத்தசேதனம் பண்ணப்படும் வரை... நீ அப்படித்தான் இருக்க வேண்டும். நீ எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், எந்த சபையை நீ சேர்ந்தவனாக இருந்தாலும், உன் பெற்றோர் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல, நீ ஒரு தனிப்பட்ட நபராக பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தாலொழிய நீ எடுத்து கொள்ளப்படுதலில் செல்லமாட்டாய். பாருங்கள்? உன்னால் செல்ல முடியாது. அதுதான் அந்த அதே விடுவிக்கும் அடையாளம், விருத்தசேதனம்; ஆகவே அந்த விருத்தசேதனம் பரிசுத்த ஆவியே. இப்பொழுது தேவன்... 42கேள்வியை கேட்டவர் இதைக் கேட்டார்: “தேவன் மோசே அல்லது அவனுடைய குமாரனை கொல்லப் பார்த்தாரா என்று இந்த வேதவசனம் கூறுகிறதா? ஏன்?'' தேவன் மோசேயைத் தொடர்ந்தார். சிப்போராள் ஒருவள் தான் அங்கே அவனை காப்பாற்றினாள். எப்படியென்றால் சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, போய் தன் குழந்தையினுடைய நுனித்தோலை அறுத்து அதை மோசேயின் முன்பாக எறிந்து ''நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்” என்றாள். அது சரியா? தேவன் மோசேயின் உயிரை எடுத்துவிட்டிருப்பார், ஆனால் ஒருக்கால் ஒரு தூதன் அங்கே நின்று கொண்டிருந்திருப்பான். அவன், ''சிப்போராளே! அதை சீக்கிரமாக பிடித்துக்கொள்!'' என்று கூறினான். பாருங்கள்? சிப்போராள் போய் குழந்தைக்கு விருத்தசேதனம் பண்ணினாள். ''மோசே நீர் மற்ற எல்லாவற்றைக் குறித்தும் மற்றும் உம்முடைய பிரயாணத்தைக் குறித்தும் மிக மிக அக்கறைக் கொண்டிருக்கிறீர், உன்னுடைய சொந்த குமாரனுக்கோ விருத்த சேதனம் பண்ணப்படவில்லை'' என்றாள். அநேக சமயங்களில் நான் ஆச்சிரியப்படுவதுண்டு... ஏனெனில் “ஓ, தேவனுக்கு மகிமை. நான் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். நான் ஆப்பிரிக்காவிற்கு, இந்தியாவிற்கு செல்ல வேண்டுமென்று அவர் விரும்புகிறார், என்று என்னிடம் கூறின மக்களை நான் சந்தித்திருக்கின்றேன். நான் ஒரு பால்காரனிடம் நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா என்று நீங்கள் எப்பொழுதாகிலும் கேட்டதுண்டா? ஒரு பேப்பர் விநியோகிக்கும் பையனிடம் இன்னுமாக நீ மறுபடியும் பிறந்திருக்கிறாயா என்று நீங்கள் எப்பொழுதாகிலும் கேட்டதுண்டா? உங்கள் அக்கம் பக்கத்தில் குடியிருக்கிறவர்களைக் குறித்தென்ன, அவர்கள் இரட்சிக்கப்பட்டுள்ளனரா?'' என்று கூறினேன். பாருங்கள்? இப்பொழுது அதுதான் கேள்வி. பாருங்கள்? அது உங்களுடைய இருதயத்தில் இருக்குமானால்... 43இங்கே சில காலத்திற்கு முன்னர் இங்கே ஃபிளாரிடாவில் ஒரு பெண் என்னை சந்தித்தாள். இந்த சிறிய பெண், எனக்கு ஒரு வழியும் இல்லை... நான் நீதிபதியல்ல. ஆனால் இங்கிருந்த இந்த மேடையிலிருந்து பிரசங்கித்த ஒரு சிறிய பிரசங்கி அங்கே இருந்தார். ஆகவே வேறொரு பிரதேசத்தில் இருந்த அந்த சிறிய நபர் திருமாணமாகி மனைவி மற்றும் மூன்று அல்லது நான்கு பிள்ளைகளைக் கொண்டவராக இருந்தார். ஆகவே இந்த பெண் ஒரு விதவைப் பெண்ணாக இருந்தாள். ஆகவே அவர்கள் இருவரும் ஒரு பெரிய காடிலாக் காரில் டெக்ஸாஸிலிருந்து ஒன்றாக வந்தனர். ஆகவே அந்த பெண் வந்தாள். அவள் விரும்பும் வகையில் எந்த விதத்திலும் உடையுடுத்த அவளுக்கு உரிமையுண்டு, அதினால் எனக்கொன்றுமில்லை; ஆனால் ஒரு கிறிஸ்தவ பெண்ணாக அதன் படி அவள் உடையுடுத்தியிருக்கவில்லை. அவள் (ஓ, என்னே!) அவள் ஒரு பெரிய நீண்ட காதணிகளை (அதை எந்த விதமாக அழைத்தாலும் சரி) இதைப்போன்று தொங்கிக் கொண்டிருந்தது, மேலும் வாயில் அடர்த்தியாக உதடு சாயம் பூசிக்கொண்டிருந்தாள்; மேலும் மேலும் அந்த மேலும் அவளுடைய கண் புருவங்கள் வெட்டப்பட்டு அதின் மேல் மைகளை, ஒரு பென்சிலினால் மையிட்டுக் கொண்டிருந்தாள். அவள் என்னிடம் “சகோதரன் பிரன்ஹாம், கர்த்தர் என்னை வெளி நாட்டிற்கு அழைக்கின்றார்'' என்று கூறினாள். நான் “அவர் அழைக்கிறாரா?''என்றேன். “ஆம்!'' மேலும் அவள், ''இந்த மனிதனுடன் நான் செல்லப் போகிறேன்'' என்றாள். நான், ''நல்லது, தேவன் உங்களை அழைக்கிறார் என்றால், நல்லது, சரி“ என்றேன் (ஆனால் அவர்களுடைய கனியினால்... எனக்கு அது சரியாக தென்படவில்லை... பாருங்கள்?) அவள், ''நீங்கள் விசுவாசிக்கவில்லையா, கர்த்தர்...?'' என்றாள். நான், “என்னைக் கேட்காதே. கர்த்தர் உங்களிடம் கூறியிருந்தாரானால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் உங்களிடம் கூறியிருக்கிறாரோ அதைச் செய்யுங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பொறுத்தவரையில் நான் அவ்விதமாக நினைக்கவில்லை, நான் உங்களிடம் வெளிப்படையாக இருப்பேன்” என்றேன். அவள், ''நல்லது, ஏன் அவ்விதமாக எண்ணுகிறீர்கள்?'' நான், “முதல் காரியம், நீங்கள் ஒரு விவாகமான பெண்ணாக இந்த விவாகமான மனிதனுடன் நகரத்தில் ஒன்றாக இங்கே தங்குவது நல்லதாகத் தென்படவில்லை. இதனால் நிந்தை வருமானால், பாருங்கள்?'' என்றேன்.மேலும் நான் கூறினேன், ”இப்பொழுது, முதல் காரியம் என்னவெனில்...'' 44அந்த பெண்ணிற்கு என்ன நேரிடும் என்று நான் வியக்கின்றேன்? அதே காரியமானது... இன்று என்னிடம் தொலைபேசியில் பேசின, அந்த மனிதனை விவாகம் செய்ய விரும்பின, தன்னுடைய சொந்த கணவனை விட்டுவிட்ட அந்த ஸ்திரீயைப் போல், இவளும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமல் சுற்றிலும் குழப்பிக் கொண்டிருந்தாள். அவள் ஒரு நிலைக்கு வந்தாள், ஒருக்கால் தேவனுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம், ஆனால் உலகத்தின் காரியங்களை இச்சித்துக் கொண்டிருந்தாள். ஆகவே நான் அவளை, ''நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டேன். அவள், “இன்னுமாக இல்லை, ஆனால் நான், அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்றாள். நான், “முதலில் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள், எந்தவித கணவனைக் கொண்டிருக்க வேண்டுமென்று அவர் உங்களுக்கு கூறுவார்” என்றேன். அது சரி. பாருங்கள்? நீங்கள் - நீங்கள்... அது அவ்விதமாகத்தான் இல்லையென்றால் நீங்கள் ஆவிக்குரிய விதத்தில் மரித்துப் போவீர்கள். இன்றிரவு தேவன் அநேக காரியங்களை பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் உங்களுடைய இருதயத்தை அநேக முறை தட்டினார் (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தின் மீது தட்டுகிறார் - ஆசி). ஆனால் இந்த நேரங்கள் ஏதாவதொன்றில் அவர் கதவை அடைத்துவிடப் போகின்றார், ஆகவே - ஆகவே இரக்கம் அகன்றுவிடும். பாருங்கள்? 45நிச்சயமாக, தேவன் அவனுடைய ஜீவனை எடுத்துவிட்டிருப்பார். அவர் அவனை கொல்லப் பார்த்தார் என்று அவர் கூறினார். வேதவசனம் எவ்வாறு இருக்கிறது என்று கவனியுங்கள்: வழியிலே தங்கும் இடத்திலே கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனை கொல்லப் பார்த்தார். (மோசே, இப்பொழுது கவனியுங்கள்). அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை - கருக்கான ஒரு கல்லை எடுத்து தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து, நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள். அது சரி. இப்பொழுது, தேவன் மகனை கொல்லப் பார்க்கவில்லை. தேவன்... அந்த ஒன்றுமறியாத சிறு குழந்தை என்ன செய்வதென்று அறியாதிருந்தது; அது ஒன்றும் அறியாத ஒன்றாகும். ஆனால் காரியம் என்னவெனில், அந்த குழந்தையின் தகப்பன், விருத்தசேதனம் என்னும் அடையாளத்தின் கீழ் இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்க குழந்தையுடன் சென்று கொண்டிருந்த அவன்; ஆனால் இன்னுமாக தன்னுடைய சொந்த மகனுக்கு விருத்த சேதனம் பண்ணப்படாதிருந்தது. பாருங்கள்?ஆகவே சிப்போராள் அதை, அந்த நுனித்தோலை, ஒரு கல்லைக் கொண்டு அறுத்து கீழே எறிந்து, ''நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்“ என்றாள். 46கேள்வி: தயவு கூர்ந்து வேத வசனத்தின் அர்த்தங்களையும், அது எப்பொழுது நிறைவேறும் என்று விளக்குங்கள்: ஏசாயா 4 மற்றும் 1. நன்றி. சரி. நாம் இப்பொழுது திருப்புவோம்... வேதாகமங்களை வைத்திருந்து, பார்க்க விரும்புகிற ஜனங்களாகிய நீங்கள், என்னவென்று நாம் பார்ப்போம்... இதை பார்க்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, ஆனால் ஏதோ ஒரு விதமான பதிலை நாம் காண்போம் என்று நான் நினைத்தேன். இதோ அது. அந்நா... (ஓ, ஆமாம்!) அது நடக்கும்... அந்நாளில் ஏழு ஸ்திரிகள் ஒரே புருஷனை பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தை புசித்து எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர் மாத்திரம் எங்கள் மேல் விளங்கட்டும் என்பார்கள். நல்லது, சகோதரனே, அது அந்த விதமாகவே மிக மோசமாக இப்பொழுது உள்ளது. நம்முடைய தேசத்திற்கு எப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான காரியமானது சம்பவித்திருக்கின்றது! என் அருமை கிறிஸ்தவ நண்பனே, இதைநான் கூறட்டும். ஒவ்வொருவருக்கும் தேவ மரியாதையுடன் இதை நான் கூறுவேனாக: அப்படியொன்று... சரித்திரம் படித்திருக்கின்ற ஜனங்களாகிய உங்களுக்கு, காலங்களினூடாக ஒவ்வொரு அருமையான தேசமும் ஒழுக்க நெறி தவறுதல், சரியாக பின்புறம் செல்லுதல் இவற்றில் விழுந்து போன அதே பாதையில்தான் சரியாக நாம் இப்பொழுது இருக்கிறோம். 47இக்காலை நான் கூறின விதமாக... (அதை மறுபடியும் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும்). வெளிநாடுகளில் ஒரு மனிதன் என்னிடம் வந்து சகோதரன் பிரன்ஹாம், எந்த விதமான ஸ்திரீகளை நீங்கள் எல்லாரும் அங்கே கொண்டிருக்கிறீர்கள்? நல்லது, “நீங்கள் பாடுகின்ற எல்லா பாடல்களும், உங்கள் ஸ்திரீகளைக் குறித்த ஏதோ ஒரு பழைய கீழ்த்தரமான பாடல்களாய் இருக்கின்றனவே'' என்றார். அது தான். எல்லாரும் ஏதோ ஒரு எல்லாம் கலந்த கதம்ப கூளம் போன்ற - போன்ற - போன்ற... பாடுகிறார்கள். நல்லது, அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சில வார்த்தைகளைக் கொண்டு நான் அதை உங்களிடம் கூறட்டுமா? உலகமானது இந்த விதமான நிலையை அடைந்துள்ளது, ஏனெனில் இது ஒரு நவீன சோதோம், கொமோரா ஆகும். சரியாக! கலிபோர்னியாவில் நான் ஒரு செய்தித்தாளை எடுத்தேன். ஆண்புணர்ச்சிக்காரர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வருடம் எத்தனை ஆயிரம் பேர்களாக அதிகரிக்கிறது என்று நான் மறந்துவிட்டேன். அவர்களுடைய இயற்கையான விருப்பமாகிய - கணவன் மனைவிக்கிடையே, இருக்கின்ற ஒன்று, அது ஜனங்களைவிட்டு அகன்று கொண்டிருக்கிறது. அவ்விதம் நடந்தேறும் என்று தேவன் கூறியவாறு சரியாக அதே விதத்தில் நடக்கின்றது. ஆகவே தங்களுடைய சொந்த... 48நீங்கள் காண்பீர்களானால்... புகழ் யாருக்கு கிடைக்கிறதென்று பாருங்கள். உங்கள் வானொலியில் கேட்டுப் பாருங்கள், அல்லது தொலைகாட்சிகள், அல்லது எதை நீங்கள் வைத்திருந்தாலும் சரி, அதைப் பாருங்கள். அது மிக மோசமான, மற்றும் கீழ்த்தரமான... ஏதோ ஒரு பெண் அல்லது அதைப் போன்ற ஏதோ ஒரு பாடல் இருக்கிறது, அது தான் தகாவழிப் பேர்போன (notariety) ஒன்றைப் பெற்றுக் கொள்கிறது. நாம் நமது பெண்களுக்காக கவலைகொள்ளாத - அல்லது நம்முடைய பெண்கள் தங்களுக்காக அக்கறை கொள்ளாமல் உள்ளனரோ என்பதை போன்ற ஒரு நிலைக்கு அது வந்துவிட்டது. அதுதான். ஒரு பெண் தன்னைத் தானே சரியாக வைத்துக் கொள்வாளானால், மனிதனும் சரியாகத்தான் நடந்து கொள்ள வேண்டியவனாயிருக்கிறான். இது மனிதனுக்காக வாதிடுகின்ற ஒன்றல்ல, ஆனால் அது உண்மை என்று எனக்குத் தெரியும். ஆம் ஐயா! ஆனால் அது என்ன? அது ஒரு - ஒரு மிக மோசமான நிலையில் இருக்கின்றது, அது அவ்வாறே இருந்து கொண்டிருக்கின்றது. அது வேத வசனங்களுக்கு ஒத்திருக்கின்றது, அவ்விதமாகத்தான் இருக்கும் என்று வேதாகமம் கூறியிருக்கிறது. ஆகவே எப்படி நாம் ஒரு எழுப்புதலைக் கொண்டிருக்க முடியும்? எப்படி நாம் ஒரு எழுப்புதலைக் கொண்டிருக்க முடியும்? 49கவனியுங்கள், கிறிஸ்தவ நண்பர்களே. இன்னும் சிறிது நேரம் இருக்கையில் நான் உங்களை ஒன்று கேட்கட்டும். நாம் பில்லி கிரஹாமைக் கொண்டிருக்கிறோம். நாம் ஜாக் ஷீலரைக் கொண்டிருக்கிறோம். எல்லா விதமான மத சம்பந்தமான அசைவுகள் உலகம் முழுவதுமாக நாம் கொண்டிருக்கிறோம். அவைகள் அமெரிக்கா முழுவதுமாக கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாக முடிகின்ற அளவிற்கு வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது, ஆனால் எழுப்புதல் இல்லை. ஏன்? கதவுகள் அடைபடுகின்றன. இக்காலை நான் கூறின விதமாக, குளத்திலிருந்து ஒவ்வொரு மீனையும் நாம் வலைவீசி பிடித்திருக்கிறோம். ஒருக்கால் ஒன்று அல்லது இரண்டு எங்கேயோ ஒட்டிக் கொண்டிருக்கிறது. பில்லி கிரஹாம் நடத்திய கூட்டத்தில் (பாஸ்டன் அல்லது எங்கோ என்று நான் நம்புகிறேன்) ஆறு வாரங்களில் இருபதாயிரத்திற்கும் மற்றும் முப்பதாயிரத்திற்கு இடையே அவ்வளவு எண்ணிக்கையில் மனந்திரும்பினார்கள் என்று கூறினார். சில வாரங்கள் கடந்து அவர்கள் சென்ற போது இருபது போர்களைக் கூட அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அதைக் குறித்து சிந்தியுங்கள்! சகோதரனே, அது ஏறக்குறைய முடிந்து போனது. இங்கே ஒன்றை என்னால் கூறமுடியும். பாருங்கள்? 50வருவேன் என்று தேவன் உரைத்த நாட்களில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஜீவிக்கும் நேரமானது, மனிதர்... அதைக் குறித்து நாம் முயற்சிப்பதோ அல்லது சிந்திப்பதோ என்பதல்ல, நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம் என்று தேவ வசனம் கூறுகின்றது. அது சரி. தேவன் எதை அழைத்திருக்கின்றாரோ அது தேவனிடம் வந்து சேரும்; தேவன் எதை அழைக்கவில்லையோ அது தேவனிடத்திற்கு வராது. தேவன் அழைக்கின்றார், அவர்கள் அழைப்புகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்; அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்... இப்பொழுது, எந்த ஒருவரையும் தேவன் ஆக்கினைக்குள்ளாக்குகிறார் என்று நான் கூறவில்லை. எல்லாரும் - எந்த ஒருவரும் அழிந்து போக வேண்டுமென்று அவர் விரும்புவதில்லை, ஆனால் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று அவர் விரும்புகிறார். ஆனால் அவர் தேவனாக இருக்க வேண்டியதால், அவர்கள் வரமாட்டார்கள் என்று அவர் - அவர் துவக்கத்திலேயே அறிந்திருந்தார். ஆனால் இன்னுமாக அவர்களுக்கு ஒரு தருணத்தை அளிக்கிறார், ஆனால் அவர்கள் வருவதில்லை. எப்படி... அவர் அதை அறியாதிருப்பாரானால், நாம் குதிரைகள் இல்லாத வண்டிகளை நாம் வைத்திருப்போம் என்று எப்படி அவர் அறிந்திருந்தார்? நாம் இப்பொழுது கொண்டிருக்கிறதைப் போல இந்த காலங்கள் வரும் என்று எப்படி அவர் அறிந்திருந்தார்? அவர் ஏன், “மனிதன் துணிகரமுள்ளவனாயும், இறுமாப்புள்ளவனாயும், சுகபோகப் பிரியனாயும் இருப்பான் என்று கூறினார்? துவக்கத்திலிருந்து இந்த எல்லா மற்றக் காரியங்களும் வரும் என்று எல்லா தீர்க்கதரிசிகளும் ஏன் முன்னுரைத்தனர்? தேவன் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அது என்னவாக இருக்குமென்று அவர் அறிந்திருக்கிறார். காலங்களினூடாக தேவன் மனிதனை நோக்கிப் பார்த்தார். ''அவர்கள் வரமாட்டார்கள்'' என்று கூறினார். அவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டிருக்கின்றனர், ஏனெனில் அவர்களாகவே அதைத் தெரிந்து கொண்டனர். ஆமென். இதோ புரிகின்றதா. 51என் சகோதரனே, சகோதரியே நான் விசுவாசிக்கிறேன், (நான் இதை தேவ மரியாதையுடனும் என்னுடைய இருதயத்தில் தேவ பயத்தை கொண்டவனாகவும் கூறுகிறேன்), அமெரிக்கா மூழ்கிவிட்டது என்று நான் விசுவாசிக்கிறேன். அவள் ஒழுங்கு குலைந்து போயிருக்கிறாள். அவள் மிகவும் கீழான நிலைக்கு சென்றுவிட்டாள். அது பரிதாபகரமானதாகும். நான் இந்த வேத வசனத்திற்கு பதிலளிக்கையில் - நான் கூறுகையில் இங்கு சற்று சிந்தித்துப் பாருங்கள், ஏழு ஸ்திரீகள் ஒரு மனிதனை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாம் உலகப் போரில் - இரண்டாம் உலகப் போரில் செய்தித்தாளிலிருந்து ஒரு பாகத்தை நான் வெட்டியெடுத்து வீட்டில் வைத்திருக்கிறேன். நீங்களே அதைப் வாசித்து பார்த்துக் கொள்ளுங்கள். அதில் ''நம்முடைய அமெரிக்க பெண்களின் ஒழுக்க நெறிமுறைகளுக்கு என்ன நேர்ந்தது? முதல் ஆறு மாதங்களுக்கு வெளிநாடு சென்றிருந்த இராணுவ வீரர்களில் மூன்றில் இரண்டு பேர்கள் தங்கள் மனைவிகளால் விவாகரத்து செய்யப்பட்டனர்“ என்றிருக்கிறது. மூன்றில் இரண்டு பேர் விவாகரத்து செய்யப்படனர். இந்த பெண்கள் ஓடிப் போனார்கள். அது ஏன்? நீங்கள் புரிந்து கொள்வீர்களானால், நண்பர்களே, அது இந்த காலத்தின் ஆவியாகும். 52கடைசி நாட்கள் இங்கிருக்கையில் நாம் இந்த கடைசி நாட்களின் ஆவிக்குள் சென்று தான் ஆகவேண்டும். நீ ஒரு நடன அரங்கத்திற்குள் செல்வாயானால், நீ நடன ஆவிக்குள் சென்றாக வேண்டும், அல்லது அவர்கள் அங்கே நடனமாட முடியாது. நீ ஒரு சபைக்குச் செல்கிறாய், நீ தேவனை ஆராதிக்கும் முன்பு நீ ஆராதிக்கும் ஆவிக்குள்ளாக வேண்டும். இந்த கடைசி நாட்கள் வருமுன்பாக உலகமானது இந்த கடைசி நாட்களின் ஆவிக்குள்ளாக வேண்டும். நாம் இந்த கடைசி நாட்களின் ஆவியில் இக்காரியங்கள் இங்கிருக்கும் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார். நாம் அதைத்தான் பெற்றுள்ளோம். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். புருஷரும், ஸ்திரீகளும் நித்திரையாயுள்ளனர். ஆனால் அவர்கள் அதை அறியவில்லை. ஒழுக்கங்கள்... அன்றொரு நாள் ஒரு வாலிபப் பையனை... ஓ, சில காலத்திற்கு முன்பாக, கோடை காலத்தில், நான் அவனை சந்தித்தேன். நாங்கள் ஒரு நகரத்திற்குள் வந்து கொண்டிருந்தோம். அவன் உயர்நிலைப்பள்ளி செல்லும் வாலிபப் பையன், விவாகம் செய்துக் கொண்ட அவன் இவ்விதம் என்னிடம் கூறிக் கொண்டிருந்தான். அவன், நான் இந்தப் பெண்ணை விவாகம் செய்துக் கொண்டேன், ஏனெனில் அவள் மிகவும் நல்ல பெண்ணாயிருந்தாள். அவள் உயர்நிலைக் கல்வியை முடிக்கு முன்பே நான் அவளை விவாகம் செய்ய வேண்டியதாயிருந்தது,'' என்றான். மேலும் அவன்,''நான் அறிந்துள்ள வரையில், பல வருடங்களாக உயர்நிலைப் பள்ளியில் ஒரு கன்னிகையையும் நாங்கள் பெற்றிருக்கவில்லை,'' என்றான். பாருங்கள்? அவ்வளவாய் ஒழுக்கக்கேடாகியுள்ளது. 53இங்கே கலிஃபோர்னியாவில் நீங்கள் இந்த விதியிற்கு விலகி இருக்க வேண்டுமென்று காவற்காரர் உங்களுக்கு சொல்லுகின்ற விதிகளின் வழியாய் நான் சென்றிருக்கிறேன். கடந்து செல்வதற்கு, ஒரு ஸ்திரீயைக் காட்டிலும், ஒரு மனிதனுக்கு அது மிகவும் அபாயமான தெருவாக இருந்து. இருளான குருட்டுச் சந்துகள். ஓ, தேவனே, இரக்கம் காட்டுவீராக! இக்காரியங்கள் யாவும் வரும் என்று வேதம் கூறுவதை நீங்கள் அறிவீர்களா? சோதோம் கொமாராவை ஒரு முன் அடையாளமாக அளித்திருக்கிறார். அவர் அங்கு சென்றார். அதே காரியம் நடந்தேறியது. தேவன் அக்கினியை கீழே அனுப்பி அந்த இடத்தை சுட்டெரித்தார். அது அந்த இடத்திற்கு வருகையில், ஆம் அந்தக் காரியத்தையே பெற்றுக் கொள்ளும் என்று உலகம் முழுவதும் காண்பிக்கும்படியாய், அதுவே அந்த அடையாளக் கம்பமாயுள்ளது. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) 54நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். நிச்சயமாக. ஏழு ஸ்திரீகள் ஒரு மனிதனைப் பிடித்துக் கொண்டு, “நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து எங்கள் சொந்த வஸ்திரங்களை உடுப்போம், எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர் மாத்திரம் எங்கள் மேல் விளங்கட்டும்” என்பார்கள். சகோதரனே, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து நீ செல்ல வேண்டியதில்லை. நம்முடைய சொந்த தேசத்திலே நான் பார்த்த காரியங்களில், தெருக்களில் மிக மோசமானது என்று நான் எண்ணின, என் ஜீவியத்தில் நான் கண்டதில் ஒரே ஒரு இடம் தான் இருக்கிறது. ஆனால் நாம் சரியாகிக் கொண்டிருக்கவில்லை. நாம் அப்படியே காலங்கள் தோறும் மிக மோசமாக, மோசமாகிக் கொண்டேயிருக்கிறோம். நினைவில் கொள்ளுங்கள், கர்த்தருடைய நாமத்தில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நாம் தொடர்ந்து மோசமாகிக் கொண்டேயிருப்போம். ஒரேயொரு நம்பிக்கை மாத்திரமே உண்டு, அது கிறிஸ்து இயேசுவில்தான் ஆகும். நீ என்ன செய்தாலும் அது ஒரு பொருட்டல்ல. நான் இங்கே தேசம் முழுவதும் சென்று கூக்குரலிட்டிருக்கிறேன். மரித்தோரையும் கூட தேவன் எழுப்பியுள்ளார், நாங்கள் நகரத்திற்குள் சென்றோம்; வருடக்கணக்காக சக்கர நாற்காலிகளில் இருந்த மக்கள் எழுந்தனர், டிரக் வண்டிகளுக்கு பின்னால் நகரத்தில் நடந்து, தங்களுடைய சக்கரநாற்களை, காரியங்களை தள்ளிக் கொண்டே சென்றனர். ஸ்திரீகள், இறந்துவிட்டார் என்றுடாக்டர்களால் சான்றிதழ் அளிக்கப்பட்டவர்கள், எழுதப்பட்ட டாக்டர்களின் பெயர்களைக் கொண்ட X-ரேக்கள் பெற்றிருந்தவர், மரித்த நிலையிலிருந்து எழுப்பப்பட்டனர். ஆனால் நகரம் முழுவதும் உட்கார்ந்து கொண்டு, ''ஹ, மனோத்தத்துவம், பரிசுத்த உருளையர் கூட்டம்'' என்று கூறிக் கொண்டிந்தது. ஓ, ஆக்கினையைத் தவிர வேறெதையும் உங்களால் எதிர்ப்பார்க்க முடியாது! ஓ! சரியே! நியாயத்தீர்ப்பு இங்கே இருக்கிறது; நீ அதை பெற்றுத்தான் ஆகவே வேண்டும். வரவிருக்கின்ற கோபாக்கினையிலிருந்து தப்பியோடு, உன்னால் முடிந்த வரை கிறிஸ்து இயேசுவிடம் விரைந்துஓடு! இந்த காரியங்களிலிருந்து வெளியே செல்! ஆம், அது கடைசி நாட்களின் ஆவியாகும். கூறப்படக் கூடிய அநேகக் காரியங்கள் உண்டு. நான் விரைந்து செல்கிறேன். 55கேள்வி: நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து நாம் ஆராதனைக்காக கர்த்தருடைய வீட்டிற்குள் எவ்விதமாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார் என்பதை எங்களுக்கு தயவு கூர்ந்து கூறுவீரா? அது சரி, அது அருமையான ஒன்றாகும். ஒவ்வொரு சபைக்கும் அது தேவையான ஒன்றாகும். சபைக்கு நீங்கள் வரவேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கின்றார்... இப்பொழுது, இது ஒரு கேள்வியாகும், வெளிப்படையான ஒரு கேள்வியாகும். இது வேதப் பூர்வமான ஒன்றா; அது - ஆம் அது தான். பொறுங்கள், அவர் என்ன கூறினார் என்று நான் உங்களிடம் கூறுகிறேன். முதலாவதாக, வேத வசனம் நீங்கள் விரும்புவீர்களானால், ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்கு ஒரு நோக்கத்திற்காகத் தான் வர வேண்டியவர்களாயிருக்கின்றனர், அது ஆராதிக்கத் தக்கதாக, பாடல்கள் பாடுவதற்காக, மற்றும் தேவனை தொழுது கொள்ளத் தக்கதாக, அந்த விதமாகத்தான் தேவன் அதை எதிர்ப்பார்க்கின்றார். நாம் தேவனுடைய வீட்டிற்கு வந்து நம்முடைய - அல்லது வேறெதைக் குறித்தோ , அல்லது ஒருவரைக் குறித்து ஒருவர் பேசிக் கொள்வதோ, அல்லது வாரம் முழுவதும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பவைகளைக் குறித்தோ பேச தேவன் எதிர்ப்பார்ப்பதில்லை, நாம் வந்து அவரை ஆராதிப்பதையே அவர் எதிர்ப்பார்க்கிறார். அது ஆராதானையின் வீடாக இருக்கிறது. ''சகலமும் ஒழுங்கும் கிரமுமாக நடைபெற வேண்டும்“ என்று பவுல் வேதாகமத்தில் கூறியுள்ளான். எல்லா காரியமும் சரியாக இருக்க வேண்டியதாயுள்ளது. செய்தியும் இருக்க வேண்டும். 56நான் கூறப்போகின்ற முதல் காரியம், பழைய ஏற்பாடு - அல்லது கூறப்போனால் புதிய ஏற்பாட்டின் சபையின் முறைமைகளின் படி, முதலாவதாக, ஜனங்கள் தேவனுடைய சபையில் தொழுது கொள்ளுதலின் ஆவியுடன் பிரவேசித்தனர். அவர்கள் உள்ளே நடந்து வந்தனர், பாடல்கள் பாடப்பட்டன. பிறகு ஒருக்கால் பிரசங்கி பேசுவார், ஏனெனில் அவர் சபையின் தீர்க்கதரிசியாக இருந்தார். (புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி ஒரு பிரசங்கி ஆவார்; அது நமக்கு தெரியும்: “இயேசுவைப் பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது'' என்று வெளிப்படுத்தின விசேஷம் கூறுகின்றது). இப்பொழுது, பிரசங்கி பிரசங்கம் செய்ய ஆரம்பிக்கின்றார். அவர் பிரசங்கிக்கையில் ஒருக்கால் ஒரு பெரிய பிரசங்கத்தின் முடிவில், ஆசிர்வாதங்கள் விழ ஆரம்பிக்கின்றன; ஜனங்கள் “ஆமென்” என்று கூறி தேவனை ஸ்தோத்தரிக்க செல்கின்றனர். அவர் பிரசங்கத்தை முடித்தவுடன், ஒரு செய்தியானது வரும், ஒருக்கால் அந்நிய பாஷையில் அது பேசப்படலாம் (1கொரிந்தியர் 14:13, 14) பிறகு - பிறகு சபையில் வியாக்கியானம் செய்பவர் இல்லையென்றால், இந்த நபர் அமைதியாயிருக்க வேண்டியவராகவுள்ளார், ஏனெனில் அவர்கள் அந்நிய பாஷைகளில் சரியாகப் பேசுகின்றார்கள், ஆனால் அவர்கள் அதை தேவனுக்கு முன்பாகச் செய்கின்றனர். பாருங்கள்? ஆனால் அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி அங்கே வியாக்கியானம் பண்ணுகிறவர் இருப்பாரெனில், வியாக்கியானம் பண்ணுகிறவர் செய்தியைக் கொடுக்க வேண்டியவராக இருக்கின்றார். எல்லா சபைகளும் அதற்கு வருகின்றன. 57சார்லஸ் ஃபுல்லர், நான் அங்கேயிருந்த போது அதைக் குறித்து என்னிடம் குழம்பித் தொல்லைப்படுத்தினார், இப்பொழுதோ அதை அவர் ஏற்றுக் கொள்கிறார். அவர்கள் எல்லாரும் அதை லாங் பீச் முழுவதும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆம், ஐயா! சரியாக - சரியாக அமர்ந்திருக்கும் இடத்தில், தேவனுடைய ஆசிர்வாதங்களை கொண்டிருந்து, அந்நிய பாஷைகளில் பேசி, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கின்றனர். ஆகவே அவர் என்னுடைய முகத்திற்கு நேராக நின்று, ''சகோதரன் பிரன்ஹாம், அந்த அர்த்தமற்ற காரியத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது'', என்றார். நான், “நல்லது , அது உங்களைப் பொறுத்தது. அது அவிசுவாசிகளுக்கல்ல, சகோதரன் ஃபுல்லர், அது விசுவாசிக்கிறவர்களுக்காகத்தான்'' என்றேன். இப்பொழுது அதே காரியத்தை தான் அவர் பிரசங்கிக்கின்றார். ஒரு நேரத்திற்கு அது வருகின்றது, ஒரு பலப்பரீட்சை இருக்கின்றது. 58இப்பொழுது அப்படியானால், அது ஒழுங்கில் இருக்குமானால், இதைத் தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... பிரசங்கம் செய்பவர் பேசிக் கொண்டிருக்கையில் ஒவ்வொரு காரியமும் பிரசங்கியை கவனிக்க அமைதியாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் அபிஷேகத்தின் கீழ் பிரசங்கிக்கின்றாரென்றால் தேவனுடைய வார்த்தையானது சென்று கொண்டிருக்கின்றது, அப்படியானால், ஒவ்வொரு தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்க தரிசிகளுக்கு அடங்கியிருக்கின்றது. ஒரு மேய்ப்பர் பிரசங்க மேடையை நோக்கி நடந்து, வேதாகமத்தை புரட்டுகையில், சபையானது அமைதியாக இருந்து, வேதாகமத்தை அது வெளிப்படுத்துகையில் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்,அவர் என்ன கூறப் போகின்றார் என்பதை கவனிக்க வேண்டும். உங்களுக்கு அருமையாக காணப்படுகின்ற ஒன்றை அவர் கூறுவாரானால், நீங்கள், “ஆமென், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!'' என்று கூறலாம் அல்லது நீங்கள் விரும்புகின்ற எதுவாயிருந்தாலும் சரி. ஆமென் என்றால் ”அப்படியே இருக்கக் கடவது'' என்று அர்த்தமாகும். அதைச் செய்ய வேதாகமம் கூறுகின்றது. பிறகு, செய்தி முடிவுற்ற பிறகு... ஆவியானவர் ஜனங்கள் மத்தியில் இருத்தல், ஜனங்கள் களிகூர்ந்து கொண்டிருப்பார்களானால், பிரசங்கி அதைச் செய்ய இடங்கொடுக்கையில், ஒருக்கால் அவர் வேறொரு செய்தியை அனுப்பலாம். அவர் ஒரு செய்தியை அனுப்புவாரானால், அது யாராவது ஒருவருக்குவரும், அப்படியானால் வியாக்கியானங்கள் வேத வசனத்தை மேற்கோள் காட்டுவதாகவோ அல்லது வேறெதையோ செய்வதாக இராது. தேவன் வீண் உச்சரிப்புகளை செய்வதில்லை. ஆனால் அது ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டும் என்று யாரோ ஒருவருக்கு ஒரு நேரடியான செய்தியாக இருக்கும் அல்லது சபைக்கு பக்தி விருத்தி உண்டாக்கும் ஏதோ ஒன்றாக அது இருக்கும். அப்பொழுது அந்த சபைக்குரிய பக்தி விருத்தியை அவர்கள் பெற்றுக் கொள்கையில் அவர்கள், 59உதாரணத்திற்கு இதைப் போன்று: யாராவது ஒருவர் இங்கே எழுந்து நின்று அந்நிய பாஷைகளில் பேசி; “இந்த நபர் வியாக்கியானம் அளித்து, பரிசுத்த ஆவி உரைக்கிறதாவது: இன்னார் - இன்னார் சென்று இங்கேயிருக்கின்ற இந்த நபரின் மீது கரங்களை வையுங்கள், ஏனெனில் பரிசுத்த ஆவி உரைக்கிறதாவது, இன்றிரவு அவர்களுடைய சுகமடையும் நேரமாகும்'' என்று கூறுவார். அது என்னவாயிருக்கிறது? பிறகு இந்த அதே நபர் ''நான் அங்கே உட்கார்ந்து கொண் டிருக்கையில் என்னுடைய இருதயம் அந்த குழந்தைக்காக எரிந்து கொண்டிருந்தது“ என்றார். இப்பொழுது - இப்பொழுது அவர்கள் ஆவியானவருக்கு கீழ்ப்படிந்து எழும்புகின்றனர், சென்று அந்த குழந்தையின் மீது உங்கள் கைகளை வையுங்கள், அது சுகமாகின்றது. அப்படியில்லையெனில், ஏதோ தவறுயிருக்கின்றது. பாருங்கள், பாருங்கள், பாருங்கள்? அது ஒரு நேரடியான செய்தியாகும். அங்கே அவிசுவாசி உட்கார்ந்து கொண்டு “ஒரு நிமிடம் பொறுங்கள். ஓ, தேவன் அந்த ஜனங்களோடு இருக்கின்றார்!'' என்பான். நான் என்ன கூற வருகின்றேன் என்று பாருங்கள்? பிறகு அவர்கள் கூறுவர் - அல்லது, பரிசுத்த ஆவியானவர் உரைக்கிறதாவது: பட்டணத்தின் தெற்கு புறத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும், ஸ்பிரிங் தெருவின் பக்கத்தில் இருக்கின்றவர்கள், இன்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியே சென்றுவிடுங்கள், ஏனெனில் பட்டணத்தில் இருக்கின்ற எல்லாரையும் அடித்து கொண்டு செல்லப்போகின்ற ஒரு புயல் வரப் போகின்றது. அப்படியானால், முதலாவதாக உங்களுக்குத் தெரியுமா, அது முழு சபைக்கும் ஒரு தீர்க்கதரிசனம் ஆகும். 60பிறகு யாராவது ஒருவர் - ஆவிக்குரிய நியாயத்தீர்ப்பு - எழுந்து நின்று ''அது கர்த்தரால் உண்டானதா?'' ஒவ்வொருவரும் கூறுவர். மூன்று நல்ல மனிதர் எழுந்து ஆவிக்குரிய நியாயத்தீர்ப்பு ''அது கர்த்தரால் உண்டாயிற்று“ என்று கூறுவார்களானால், அப்படியானால் சபை அதை பெற்றுக் கொள்கிறது; அந்த பட்டணத்தின் கோடியில் இருக்கின்ற ஒவ்வொருவரும் வெளியே சென்றுவிடுவார்கள், அந்த நேரத்திற்கு அவர்கள் அதிலிருந்து புறம்பே சென்றுவிடுவார்கள். பிறகு அது நடந்தேறவில்லையெனில் நீங்கள் அந்த நபரை பிடியுங்கள். பாருங்கள்? உங்கள் மத்தியில் வேறொரு ஆவி இருக்கின்றது. ஆனால் அது நடந்தேறினால், அப்பொழுது வரவிருந்த கோபாக்கினையிலிருந்து உங்களை தப்புவித்ததற்காக தேவனை ஸ்தோத்தரியுங்கள், தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். பாருங்கள்? அந்த காரியங்களை கவனியுங்கள். அது சபையானது ஒழுங்கில் உள்ளது என்பதாகும். இரண்டு அல்லது மூன்று செய்திகள் - மூன்றுக்கு மேல் அல்ல - அதே நேரத்தில் புறப்பட்டு செல்லும். எதுவெல்லாம் புறப்பட்டு வருகின்றதோ, அது ஒழுங்கில் அமைந்திருக்க வேண்டும். முதலாவதாக... பிறகு, வேறொரு சபை, ஒழுங்கில் வேறொரு காரியம்... 61எனக்குத் தெரியவில்லை, இதை ஒரு ஸ்திரீ கேட்டிருக்கலாம். நான்... வேறே, ஒன்று என் சிந்தைக்குள் வந்தது, ஆகவே அதையும் நான் கூறுவேன். அந்த ஸ்திரீ, அவர்கள் சபைக்குள் வரும் போது, புதிய ஏற்பாட்டின்படி அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு முகவாட்டத்துடன் உள்ளே நடந்து வந்து ஆராதனை முழுவதும் இருக்கவேண்டும். அது வேதாகமத்தின் படியுள்ளது. இப்பொழுது, நான் எண்ணுகிறேன் ஒரு ஸ்திரீ... நிச்சயமாக. இப்பொழுது, பெண்களே நான் உங்களைக் கடிந்து கொள்ளவில்லை. பாருங்கள்? சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு வாலிபப் பெண் என்னிடம் வந்தாள். அல்ல... அந்த பெண், அவளுக்கு ஒரு பிரச்சனை இருந்தது என்று என்னிடம் வந்த போது சகோதரன் ஜூனியர் அங்கே இருந்தார். இங்கே சமீபத்தில் அவளுடைய அயலகத்தினர் அவளைப் பார்த்து நகைத்தனர், ஏனெனில் அவள் தன்னுடைய முடியை கத்தரித்துக் கொள்வதில்லை என்பதற்காக, அவ்விதம் நகைத்தனர். ஆகவே அவள் சென்று தன்னுடைய முடியை கத்தரித்துக் கொண்டாள். பிறகு, அங்கே நதியண்டையில் யாரோ ஒரு பெண் அவளைக் குழப்பி, அவளுடைய ஆவிகளை எடுத்துப் போடப் போவதாக அவளிடம் கூறியிருந்தாள், தன்னுடைய முடியினால் அவளுடைய பாதத்தைக் கட்டி, இந்த பெண் வெறுப்புக் கோளாறு (Phobia) ஏற்படச் செய்துவிட்டாள். அந்த பெண் தன்னுடைய சிந்தை இழந்து போக வேண்டுமென்று விரும்பினாள் இரண்டு பிள்ளைகள். அவளுக்கு என்னசெய்வதென்று தெரியவில்லை. அவள் அப்படியே அதைப் போன்று உட்கார்ந்து கொண்டிருந்தாள். 62ஒரு நாள் வீட்டிற்கு முன்பாக அவள் காரோட்டி வந்து நின்றாள். பரிசுத்த ஆவியானவர் அசைந்து, அவளிடம் பேசி, அவள் சுகமடையப் போகிறாள் என்று அவளிடம் கூறினார், ''ஆவியானவர் உரைக்கிறதாவது...'' பிறகு அவள் - அவள் சிறிது நாட்கள் அப்படியே இருந்தாள், பிறகு அவள்... நேற்று நான் சகோதரன் ஜூனியர் மற்றும் சகோதரன் ஃபங்க் உடன் அந்த பெண்ணைப் பார்க்க நான் சென்றேன். நான் அரைமைல் தூரத்தில் இருந்தேன். அவள் நின்று கொண்டு வளரவிடப் போகின்ற தன்னுடைய மயிரை சீவிக் கொண்டே, ''அயலகத்தினர் சிரிக்கட்டும், அவர்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் செய்யட்டும்'' என்றாள். அப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் என்னை அங்கே போகவிடவில்லை. அது அவளிடம் பேசி நான் அந்த இடத்தில் இருக்கிறேன் என்றும், வர நான் விரும்புகிறேன் என்றும், அவளிடம் கூறினது. கடந்த இரவு தரிசனத்தில் அந்த பெண் வருவதை நான் கண்டேன், அவளிடம் என்ன கோளாறு இருக்கிறது என்று கூறினேன்; அவள் சற்று முன்னர் என்னுடைய அறையில் சுகமானாள். பாருங்கள்? அதுசரியா சகோதரன் ஜூனியர்? அது சரி. சற்று முன்னர். பாருங்கள்? அங்கே நான் செல்ல தேவன் அனுமதிக்கவில்லை. ஏனெனில் காரியமானது இன்னும் தயாராக இருக்கவில்லை. பாருங்கள்? அவர் என்னை சரியாக ஒரு இடத்திற்கு கொண்டு வந்து, அது மனிதன் அல்ல அது தேவன் தான் என்று காண்பிக்க அதைச் சரியாக அங்கே உறுதிபடுத்தினார். பாருங்கள்? இப்பொழுது அவள் சகோதரன் பிரன்ஹாம், “என் கணவர் நான் நீண்ட முடிவைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார்” என்று கூறினாள். நானும் “தேவனும் அதே காரியத்தைத் தான் விரும்புகிறார்'' என்றேன். அது சரி, ஏனெனில் ஸ்திரீகள் நீண்ட மயிரை வைத்திருக்க வேண்டியவர்களாக உள்ளனர். அதுதான் அவர்களுடைய முக்காடு ஆகும். 63இந்த ஸ்திரீகள் இன்றைக்கு அல்லது ஸ்திரீகளாகிய நீங்கள், கூறப்போனால், தொப்பிகளை அணிகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அது உங்களுடைய முக்காடு என்று கூறுகிறீர்கள். அது தவறு. வேதாகமம் ஒரு ஸ்திரீயினுடைய முக்காடு அவளுடைய தலைமயிரே என்று கூறுகிறது. ஆகவே அவள் தன்னுடைய மயிரைக் கத்தரித்துக் கொள்வாளானால் அது அவள் ஜெபிப்பதற்கு ஒரு சாதாரண காரியமாகும். அது சரியா. அது வேதவசனம். பாருங்கள்? ஆகவே இப்பொழுது, ஸ்திரீகள் நீண்ட மயிரை கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர், அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது ஒரு பொருட்டல்ல; அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதே. நீங்கள் எந்த இடத்திலேயாவது எனக்கு காண்பியுங்கள்... நீங்கள், ''நல்லது, என்னுடைய முடி நீளமாக உள்ளது. பாருங்கள் அது என்னுடைய தோள்கள் வரை உள்ளது'' என்று கூறலாம். அது குட்டை மயிர் ஆகும். “கிறிஸ்து...'' நீங்கள் ”கிறிஸ்து நீண்ட முடி வைத்திருந்தாரே'' என்று கூறலாம். இல்லை, இல்லை. அவர் அப்படி வைத்திருக்கவேயில்லை. அவர் தோள்வரை நீளமுள்ள முடியை வைத்திருந்தார் என்று அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். அவர்கள் - அவர்கள் இந்த விதமாக அதை இழுத்து தோள்வரை நீளமாக இருக்கும்படி அதை வெட்டிவிடுகின்றனர். அதைக் குறித்துள்ள கிரேக்க வார்த்தையை பாருங்கள், நீங்கள் அதைக் கண்டு கொள்ளலாம். 64பெண் தன்மையான மயிர்... மனிதன் இந்த விதமாக நீளமான நீண்ட முடி வைத்திருக்கக் கூடாது, ஏனெனில் அது பெண்தன்மையாகும், ஆனால் அவர் அதை தம்முடைய தோள்களண்டை இங்கே கத்தரித்தார், அந்த இடத்தில் அவர்கள் வெட்டினர். எங்கே அதைக் கத்தரித்தார்கள், அவருடைய தலையை சுற்றி, அதைப் போன்று பாப் செய்துவிட்டார்கள். அது சிறிய முடியாகும். ஆகவே, பெண்கள், தங்கள் தோள்வரை முடி வைத்திருப்பது, அது இன்னுமாக குட்டை முடியாகும். இப்பொழுது, அது உங்களை நரகத்திற்கு கொண்டு செல்லுமா அல்லது உங்களை பரலோகத்திற்கு கொண்டு செல்லுமா என்று நான் கூறவில்லை. அதனுடன் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஆனால் பெண்களுக்கான சபையின் கட்டளை என்னவெனில் அவர்கள் நீண்ட தலைமயிரைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே. அது சரி; அது சரி; ஆகவே சபைக்குள் நுழையும்... அது - அது காரியங்களில், பொது காரியங்களில் - அல்லது அது - சபையின் நடத்தைக் குறித்த விவகாரங்களில் அவர்களுக்கு எந்தவித பங்கும் கிடையாது. அவள் கீழ்ப்படிதலுள்ளவளும், பயபக்தியுள்ளவளுமாகவும், இன்னும் மற்ற போன்றவை, ஏனெனில் அவள்தான், முதல் விழுந்து போதலைக் கொண்டு வந்தாள் என்று வேதாகமம் கூறுகிறது. அது சரி; அது சரி. இப்பொழுது விரைவாக முடிப்போம். அது புண்படுத்தவில்லை என்று நான் நம்புகிறேன். 65கேள்வி: என் சபையில் நான் இராப்போஜனம் எடுக்கவிருந்த நேரத்தில் ஏன் தேவனுடைய தரிசனமானது என் முன் வரவேண்டும்? அதில் (நல்லது, இது ஒரு பெண்ணின் பெயராகும்; ஆம், இது பெண்ணின் பெயராகும்), என் சபையில் நான் இராப்போஜனம் எடுக்கவிருந்த நேரத்தில் ஏன் தேவனுடைய தரிசனமானது என் முன் வரவேண்டும்? நல்லது, அது இவ்விதமாக இருந்தாலொழிய, சகோதரியே மற்றபடி எனக்கு தெரியாது: நீங்கள் உங்கள் சபையில் இராப்போஜனம் எடுக்கையில் ஒரு தரிசனத்தில் இயேசு கிறிஸ்து தோன்றுவதை நீங்கள் கண்டிருந்தால், நீங்கள் அவரை ஒரு அடையாளமாக கைக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தான் அவர் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தார். இராப்போஜனம் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய சரீரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறதாக இருக்கிறது; நீங்கள் அவரை ஒரு அடையாளமாக உங்கள் சரீரத்திற்குள் எடுத்துக் கொள்கிறீர்கள். ஆகவே சுத்தமாக ஜீவியுங்கள், தூய்மையாக ஜீவியுங்கள். 66கவனியுங்கள். நீங்கள் இராப்போஜனம் எடுக்கும் போது (இன்னும் சிறிது நேரத்தில் அது வாசிக்கப்பட நீங்கள் கேட்பீர்கள்) நீங்கள் அபாத்திரமாய்ப் புசித்தால், இயேசு கிறிஸ்துவினுடைய சரீரத்திற்கும், இரத்தத்திற்கும் நீங்கள் குற்றமுள்ளவர்களாக இருப்பீர்கள். ஒரு மனிதன் அந்த இராப்போஜனத்தை எடுத்து தேவனுக்கு முன்பாக சரியாக இருப்பானாக, இல்லை இராப்போஜனத்தை எடுக்கிறவன் தேவனுக்கு முன்பாக சரியாக ஜீவிப்பானாக. அதை வீணாக தகுதியாயிராமல் எடுக்காதே. அது... கவனியுங்கள், கடைசி நாட்களில் தேவனுடைய மேஜைகளெல்லாம் முழுவதுமாக வாந்தியினால் நிறைந்திருக்கும் என்று வேதாகமம் முன்னுரைத்திருக்கிறது. அதை புரிந்து கொள்ள ஒருவரும் இல்லை, முடியாதிருக்கிறது. அது சரியா? கவனியுங்கள். சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு பெரிய கூடாரத்திற்குள் நான் சென்றேன். அதன் பெயரை நான் கூறமாட்டேன்; அதை நீங்கள் எல்லாரும் நன்றாக அறிவீர்கள். அவர்கள் இராப்போஜனத்திற்கு எதை வைத்திருந்தனர் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ரொட்டியை (bread) எடுத்தார்கள், அதை அவர்கள் துண்டு துண்டாக பாகம் போட்டனர். பிரசங்கி கூறின அந்த மூப்பர்கள், ஏழு பேரும் குடிகாரர்களாக இருந்தனர்... அது சரி. அவர்களில் ஒவ்வொருவரும், அந்த முழு குழுவும்... அவர்கள் கட்டிடத்திற்குள் செல்கையில் மக்களிடம் பேசிக் கொண்டே செல்வதை நீங்கள் காணலாம். சபை கலைந்து சென்ற போது, முடிவில், ஞாயிறு பள்ளிக்கும் சபைக்கும் இடையே, ஒவ்வொருவரும், மேய்ப்பர் மற்றும் எல்லாரும் வெளியே சென்று, அந்தபுறத்தில் சிகரெட்டுகள் புகைத்துவிட்டு பிறகு உள்ளே வந்து கர்த்தருடைய பந்தியை ஆசரித்தனர். ஆகவே அவன் அதற்காக தேவனுக்கு குற்றமுள்ளவனாயிருக்கிறான் என்று தேவன் கூறினார். ''இதினிமித்தம் உங்களில் அநேகர் பலவீனரும் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்“. அது சரி. 67“போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது, யாருக்கு நான் உபதேசத்தை போதிப்பேன்?'' என்றார். அவர், ”கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும் என்கிறார்கள். நலமானதை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே நான் பேசுவேன். இங்கே இருக்கும் என்று நான் கூறின இளைப்பாறுதல் இதுவே. ஆனால் அவர்களோ இவைகள் எல்லாவற்றிலும், தங்கள் தலைகளை அசைத்து, நாங்கள் அதற்கு செவிகொடுக்க மாட்டோம்,'' என்று கடந்து சென்று விட்டனர். நண்பர்களே, நாம் எங்குள்ளோம். ஓ, இரக்கம்! விழித்தெழுங்கள். 68ஆம், சகோதரியே உங்கள் தரிசனம்... நீங்கள் தேவனுக்கு முன்பாக நல்ல, சுத்தமான, பரிசுத்தமான ஸ்திரீயாக அங்கே நீங்கள் நின்று கொண்டிருந்தீர்களென்றால், இயேசு, தாமே அந்த இராப்போஜனத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும், நீங்கள் அங்கே அவரை ஒரு அடையாளமாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் எடுக்கும் முன்பு அப்படியில்லையெனில், நீங்கள் அதை திரும்பவுமாக தேவனுக்கு முன்பாக உங்களை சரி செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு எச்சரிப்பாகவும் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தார். 69கேள்வி: பின் வருகின்ற இது - இது எனக்குத் தெரியும்... Iதீமோத்தேயு, 2-வது, IIதீமோத்தேயு 2-வது அதிகாரம் 16-வது வசனம். சற்று பொருங்கள். IIதீமோத்தேயு... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... நான் என்ன கூறினேனோ அதற்கு ஒருவேளை நீங்கள் இணங்காமல் இருக்கலாம். வீட்டிற்கு நீங்கள்... பிறகு, நீங்கள் வீட்டிற்கு சென்று அதிகமாக ஆராய்ந்து பாருங்கள், பிறகு நீங்கள் ஆவிக்குரியவராக ஆக அது உங்களுக்கு உதவியாயிருக்கும். அது சரி. IIதீமோத்தேயு 2:16 இவ்வாறு இருக்கிறது. சீர்கேடான விண் பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ள போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள். ஆம்! மேலும், சீர்கேடான வீண் பேச்சு என்பதைக் குறித்து நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ''சீர்கேடான - சீர்கேடான வீண் பேச்சுகளுக்கு விலகியிரு, அவைகள் அதிகரிக்கும்''. இப்பொழுது, முதல் காரியமாக “சீர்கேடான வீண்பேச்சு, அவைகள் அதிகரிக்கும். இப்பொழுது, பழையதாக இருக்கிற எதுவும் - வீண்பேச்சு பேசிக் கொண்டேயிருக்கும். வேதாகமம் கூறுகிறது - இயேசு, ”உங்கள் 'ஆம்' என்பது 'ஆம்' என்றும் உங்கள் 'இல்லை' என்பது 'இல்லை' என்றே இருக்கட்டும், இதற்கு மிஞ்சினது பாவத்தினால் வருகிறதாயிருக்கும்,'' என்றார். நீங்கள் ஒருவருக்கொருவர் நகைச்சுவை மற்றும் ஏளனம் கூட நீங்கள் செய்யக் கூடாது. நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு உபயோகமற்ற சொல்லுக்கும் தேவன் உங்களை கணக்கொப்புவிக்கச் செய்வார். அதை நீங்கள் அறிவீர்களா? ஒவ்வொரு வீணான வார்த்தைக்கும் நீங்கள் கணக்குகொடுக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. ஆகவே எப்படிப்பட்ட ஒரு ஜனமாக நாம் இருக்க வேண்டியவர்களாகவுள்ளோம்? வெளிப்படையாக, உறுதியாக, அன்புமிக்க, பாசமிக்க, முட்டாள்தனம் மிக்க ஒரு குழுவாக இல்லாதவர்கள், எப்பொழுதுமே... 70கவனியுங்கள். நீங்கள் அந்த நபரை எடுத்துக் கொள்வீர்களானால் இன்று ஆரம்பிக்கவிருக்கிற... ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவனாகிய நான், என்னையே என்னுடைய சொந்த சுபாவத்தையே கவனித்திருக்கிறேன். ஒவ்வொரு - ஒவ்வொரு முறையும் கிண்டலும் நையாண்டியும் செய்வதுண்டு. என்னுடைய மனைவியும் கூட ''இப்பொழுது, பில்..!'' என்று கூறுவாள். நான், “அது பரவாயில்லை; தேனே'' என்பேன். அவள் கூறுவாள், நான் பிள்ளைகளுடன் நெருக்கித் தள்ளி முட்டிமோதிக் கொண்டிருப்பேன்... நான் கூறுவேன்... அவர்களிடம் நையாண்டி செய்து மற்றும் ஏதாவதொன்றைக் கூறுவேன், ''நல்லது இப்பொழுது, உனக்குத் தெரியுமா, கெண்டக்கியிலிருந்து மூன்று மகத்தான மனிதர் வந்துள்ளனர்''. ''அது யார்?'' ''நல்லது, ஆபிரகாம் லிங்கன்“. ''டானியேல் பூன்'' ''ஹா- ஹம்'' ''அப்புறம் உன் தந்தை'' அதைப் போன்ற ஒன்று. அதற்கு அவள், “இப்பொழுது, பில், இதோ மறுபடியும் நீர் அதைச் செய்கிறீர்” என்பாள். நான் ஏதாவது ஒரு மறைவிடத்தில் சென்று, “கர்த்தாவே என்னை மன்னியும், ”அந்த விதமாக கூற நான் விழையவில்லை. எனக்கு ஏதாவதொன்றைச் செய்யும்; நான் அதை விட்டு கடந்து வரசெய்யும் என்பேன்“ பாருங்கள்? 71ஆகவே ஒவ்வொரு நாளும் நான் - நான் அதைச் செய்தால்... இப்பொழுது இக்காலை பின்மாற்றம் என்ற வார்த்தையைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருந்தோம். நீ அதைச் செய்தால் நீ பின்மாற்றத்திலிருக்கிறாய். ஆம், ஐயா! நீ மனந்திரும்பியாக வேண்டும். அது சரியல்லவா? இப்பொழுது, நீங்கள் உலகத்திற்குள் சென்று இதை மற்றும் அதை செய்தீர்கள் என்று நான் கூற விழையவில்லை, ஆனால் ஏதோ ஒன்றை நீங்கள் செய்துள்ளீர்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் ஜீவிக்கும்படியாக அநுதினமும் மனந்திரும்பி சாகவேண்டும். ஆதலால் கிறிஸ்து இயேசுவுக்குள் ஜீவிக்க ஒவ்வொரு நாளும் - ஒவ்வொரு நாளும், நீங்கள் ஒவ்வொரு நாளும் மரிக்க வேண்டும். நான் ஏதாவதொன்றை காணும் போது... தவறாயிருக்கின்ற காரியங்களை அநேக முறைகள் நான் செய்கிறேன். நான் வெளியே செல்வேன், யாரோ ஒருவர் ஏதோ ஒன்றை அல்லது மற்றதைக் கூறுவார், அதைக் குறித்து ஒரு சிறிய நகைச்சுவையை நான் ஒருக்கால் கூறுவேன். யாரோ ஒருவர் கூறுவார்... மோசமான ஒன்றல்ல; இப்பொழுது, கிறிஸ்தவர்கள் இழிவான நகைச்சுவைகளைக் கூறுவார்கள் என்று நான் நம்புவதில்லை. இல்லை ஐயா! இல்லை ஐயா! அப்படியானால் அவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல என்று வேதம் கூறுகிறது. அந்த பழைய சீர்கேடான காரியங்கள் போன்றவை, நகைச்சுவைகள், அரட்டைகள், மற்றும் அதைப் போன்றவைகளை விட்டுவிடுங்கள் என்று கூறுகிறது. இல்லை, அந்த விதமான காரியங்களை கிறிஸ்தவர்கள் கூறமாட்டார்கள்; கிறிஸ்தவர்கள் தூய்மையான எண்ணங்களைக் கொண்டவர்கள் ஆவர். 72ஆனால் நீங்கள் கவனிப்பீர்களானால், எப்பொழுதாவதொரு முறை நீங்கள் ஒரு மனிதனை... இன்று அவன் ஒரு சிறு நகைச்சுவையைக் கூறுவான். ஆகவே நல்லது, அது சரி என்று நினைத்துக் கொள்வான், அதை அவன் அப்படியே விட்டுவிட்டு அதைக் குறித்து ஒன்றும் சிந்திக்கமாட்டான். அடுத்த நாள் அவன் இரண்டு சிறிய நகைச்சுவைகளைக் கூறுவான். பாருங்கள். ஆகவே அடுத்த காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் வேறெதாவதொன்றைச் செய்து கொண்டிருப்பீர்கள். ஆகவே முதலாவதாக காரியம் என்னவென்பதை நீங்கள் அறிவீர்களா, அது திரும்பவுமாக அந்த அதே பழைய காரியத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது. அது சரியா? அந்த காரியத்தை விட்டு அகன்று செல்லுங்கள். அதை விட்டுவிலகுங்கள் சீர்கேடான வீண் பேச்சுகளுக்கு விலகியிருங்கள். யாரோ ஒருவர் வந்து... ஒரு சிறிய உதாரணத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன். ''திருமதி டோ, அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் உங்கள் கணவரைக் கண்டேன். என்னவென்று நான் உங்களுக்கு கூறுவேன். நீங்கள் மாத்திரம்... “ பாருங்கள் ஒரு... இப்பொழுது நான் நினைப்பதென்னவென்றால்..., “அதை நான் கேட்க விரும்பவில்லை!'' என்று கூறி, அப்படியே சென்று கொண்டிருங்கள். அதைக் குறித்து கவனம் செலுத்த வேண்டாம், அவர்கள் அதை நிறத்திவிடுவர். அது சரி. ''நல்லது என்ன என்று உங்களுக்கு தெரியுமா சகோதரியே? சகோதரனுக்கு என்ன ஆயிற்றென்று நான் உங்களுக்கு கூறுவேன்.'' சகோதரி மட்டுமல்ல, ஆனால் சகோதரனும் கூட. பாருங்கள். “சகோதரனே, என்ன நடந்தது என்று நான் உங்களுக்கு கூறுவேன். நாம் இந்த பிரசங்கியை மாத்திரம் அப்புறப்படுத்திவிட்டால், நாம் இதை செய்வோமானால், அல்லது இந்த டீக்கனை நாம் அப்புறப்படுத்துவோமானால், அல்லது இதை நாம் செய்வோமானால்” ஓ, ஓ - அந்த காரியத்தை விட்டுவிலகுங்கள். 73உங்கள் மேஜையின் மேல் ஒரு அருமையான சிறு காரியத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன், சிறிது காலத்திற்கு முன்னர் ஃபிளாரிடாவில் அந்த சிறு காரியத்தை நான் கண்டேன். அது மூன்று சிறிய குரங்குகள்; அதில் ஒன்று தன் கைகளை தன் கண்களின் மேல் வைத்திருந்து, “தீமையானதைப் பார்க்காதே'' என்று கூறினது; இன்னொன்று விரல்களை வைத்து ''தீமையானதிற்கு செவி சாய்க்காதே” என்று கூறினது; இன்னும் ஒன்று தன்னுடைய வாயின் மேல் தன் கையை வைத்து “தீமையானதைப் பேசாதே'' என்று கூறினது. அது ஒரு அருமையான காரியம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அவ்வாறே நினைக்கிறீர்கள் அல்லவா? ஆம், ஐயா! ஓ, என்னே! அது ஒரு மிக அருமையான காரியம். உங்கள் மனதை மாத்திரம் தூய்மையாகவும் கிறிஸ்துவின் மீதும் வைத்திருங்கள். நீங்கள் சிந்தித்து இப்பொழுது கூறுலாம், இப்பொழுது... பாருங்கள், நீங்கள் கவனிக்கவில்லையெனில், நீங்கள் உங்களையே ஒரு இடத்திற்கு கொண்டு சென்றுவிடுவீர்கள், நீங்கள் அதைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பீர்களானால்... நீங்கள் அதை சிந்திக்காதீர்கள்... இப்பொழுது அந்த தவறை நீங்கள் செய்ய முடியாத விதத்தில் உங்களால் மிக பரிபூரணமாக இருக்கமுடியாது. ஏனெனில் நீங்கள் செல்லமாட்டீர்கள் என்பதால் அந்த வழியாக நீங்கள் எப்பொழுதாவது செல்வேன் என்று நீங்கள் நினைப்பீர்களா. இல்லை ஐயா நீங்கள் பாவமில்லாதவர்கள் அல்ல, ஆகவே நீங்கள் இந்த புறமாக அல்லது அப்பக்கமாக நிச்சயமாக அவர்களுடைய பாதையில் சென்றுவிடுவீர்கள். 74ஆனால் கீழே அடித்து தள்ளப்பட்ட ஒரு மனிதன், அவன் ஒரு உண்மையான போர்வீரனாக இருப்பானானால் அவன் மறுபடியுமாக எழுந்து நிற்பான். “கர்த்தாவே நான் எழுந்து மறுபடியும் அதை முயற்சித்து பார்க்கட்டும். ஆனால் ஒரு கோழையோ தன்னுடைய முதல் சிறிய தவறை அவன் செய்வதை பார்க்கையில் இன்று காலை நான் கூறின விதமாக அவன் இருப்பான்: அந்த மூட்டுப்பூச்சியும் தண்ணீர் பூச்சியும் மறுபடியுமாக நேராக தண்ணீருக்குள் ஊர்ந்து சென்றுவிடும். பாருங்கள்? அவனால் அதை தாங்க முடியாது. ஆகவே எல்லா பழைய அந்த சீர்கேடான வீண்பேச்சு, பேசிக் கொண்டே இருத்தல், பேசுதல் போன்றவற்றிலிருந்து விலகுங்கள். வீண்பேச்சு என்றால் “குழப்பம்'' என்று அர்த்தம். ஆகவே வேதாகமம் ”...உங்கள் நடுவிலே சச்சரவுகளை உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்,'' என்று கூறுகிறது. யாராவது ஒருவர், ''ஹ-ஹாம் ஹா- ஹணம்,'' என்று கூறுவாரானால். இப்பொழுது - “இப்பொழுது எப்படியிருக்கிறீர்கள்?மறுபடியுமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. உமக்கு நன்றி'' என்று மாத்திரம் கூறுங்கள். அப்படியே சென்று கொண்டிருங்கள். அது தான் சிறந்த காரியம். அவர்களை விலக்கிவிடாதீர்கள். அவர்களை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். அது எங்கு செல்கின்றது என்பதை நீங்கள் காண்பதால் நீங்கள் எந்த ஒரு கவனத்தையும் செலுத்தவேண்டாம். 75கேள்வி: இயேசு தம்முடைய - இயேசு தம்முடைய ஞானஸ்நானத்திலிருந்து தம்முடைய மூன்று வருட ஊழியத்தின் வரை எங்கேயிருந்தார்? அது சரி. இயேசு, ஞானஸ்நானம் பண்ணப்பட்ட பிறகு தண்ணீரை விட்டு வெளியே வந்து நேராக, அவர் நாற்பது பகல் மற்றும் இரவுகளுக்கு பிசாசினால் சோதிக்கப்படும் படியாக ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குள் வழி நடத்தினார். அவர் அங்கே நாற்பது பகல் மற்றும் இரவுகளில் சோதிக்கப்பட்டார். அவர் உபவாசித்தார். அவர் வெளியே வந்தார். அவர் தம்முடைய உபவாசத்தை விட்டு வெளியே வந்த போது பிசாசு அவரை சோதித்தான். அவர் பிசாசை தேவனுடைய வார்த்தையினாலே எதிர்த்து, தம்முடைய ஊழியத்திற்குள் பிரவேசித்து, வேத வசனங்களின் படி மூன்றரை ஆண்டுகள் பிரசங்கித்தார். கவனியுங்கள். அவர் மூன்றரை ஆண்டுகள் பிரசங்கித்து அந்த நேரத்திலே, அவர் பலியாக சங்கரிக்கப்படுவார் என்று தேவன் தானியேலில் பேசியிருக்கிறார். அது அவ்விதமே சரி. அவர் உலகம் தோன்றுவதற்கு முன்பே நியமிக்கப்பட்டார். அது சரி. மத்தேயு 4-வது அதிகாரத்தில் நீங்கள் அதைக் காணலாம். அது உங்கள் நம்பிக்கையின்படியே சரியாக இல்லையெனில், சரி. இப்பொழுது அந்த ஒன்று... அதை நாம்... ஓ, ஆம்! முன்பாகவே நியமிக்கப்பட்டிருத்தல். நாம் அதைப் பெற்றிருக்கிறோம், அப்படிதானே...? 76கேள்வி: ஒரு காலத்தில் - ஒரு காலத்தில் நாமெல்லாரும் வெள்ளையாகவோ அல்லது கறுப்பாகவோ இருந்தோமா? அந்த இரண்டில் எதற்கு சாபம் கொடுக்கப்பட்டது? இப்பொழுது, நமக்குத் தெரிந்தவரை ஆதாமும் ஏவாளும் வெள்ளை, அல்லது பழுப்பு, அல்லது மஞ்சள், அல்லது கறுப்பாக இருந்தனரா என்று உங்களுக்கு என்னால் கூற முடியவில்லை. உங்களுக்கு என்னால் அதைக் கூற முடியாது. தேவனைத் தவிர வேறொருவருக்கும் அது தெரியாது; நான் யூகிக்கிறேன்; அவர் அங்கே இருந்தார். இப்பொழுது அந்த... நாமெல்லாரும் ஒரே பாஷைக்காரரும் ஒரே ஜனத்தாருமாய், குழப்பம் என்கின்ற பாபேல் கோபுரம் வரைக்கும் இருந்து வந்தோம். ஆகவே பிறகு அவர்களுடைய பாஷைகள் வித்தியாசப்பட்டது. நமக்கு தெரிந்த வரை அந்த நேரம் வரை அவர்களெல்லாரும் ஒரே ஜனங்களாயிருந்தனர். பிறகு அவர்கள் உடைந்து உலகின் பல்வேறு பாகங்களுக்கு சிதறிப் போயினர். சிலர்... நீங்கள் ஒரு மிருகத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; ஒரு குறிப்பிட்ட மண் பகுதியில் உணவு உண்கின்ற எந்த ஒரு ஜீவனையும் எடுத்துக் கொள்ளுங்கள், அது அந்த நிறமாக மாறிவிடும். நான் - இங்கே ஒரு வேட்டைக்காரன் இருப்பானானால், சில நிமிடங்களுக்கு நீங்கள் என்னை பின் தொடருங்கள். மெக்சிக்கோவிற்கு செல்லுங்கள், ஓநாயைப் பாருங்கள் (coyote வடஅமெரிக்க ப்ரெய்ரி பிரதேசத்தில் வசிக்கும் ஒருவகை ஓநாய்) அரிசோனாவிற்குச் சென்று அங்கே அந்த ஓநாயைப் பாருங்கள் வடபகுதிக்குச் சென்று அதே ஓநாயைப் பாருங்கள். மூன்று நிறங்களையும் பாருங்கள். டெக்ஸாஸில் வளர்கின்ற கிலாபயங்கர ஜந்துவைப் (Gila Monster) பாருங்கள், அரிசோனாவில் வளர்கின்றதைப் பாருங்கள். அவைகளுக்குள்ளிருக்கின்ற வித்தியாசத்தைப் பாருங்கள் (கவனிக்கிறீர்களா?) அவைகள் இருக்கின்ற நிலம், மண்தான் காரணம். பாருங்கள்? 77இப்பொழுது, சியாமீஸ் - சியாமீஸ் (siamese) ஒறு மஞ்சள் நிற மனிதன் ஆவான், ஜப்பான் தேச மக்கள் மற்றும் இன்னுமாக, ஒரு சியாமீஸ். எத்தியோப்பியா தேசத்தைச் சேர்ந்தவன் ஒரு - ஒரு கறுப்பின மனிதன் அல்லது இப்பொழுது நம்மிடையே உள்ள நீக்ரோ போன்று. அவன் அங்கே இருக்கின்ற அந்த இருண்ட நாடுகளுக்கு சென்றான். ஆகவே அவர்கள் - ஆகவே - ஆகவே - அவர்கள்... வெள்ளை மனிதராகிய நாமே ஆங்கிலோ - சாக்ஸன் (Anglo- Saxon) ஜனங்கள் ஆகும். ஆகவே - அல்லது அந்த அல்லது இங்கிருக்கிற ஜனங்கள், வெள்ளை மக்கள் என்று நாம் அழைக்கின்றவர்கள், அவர்கள் இங்கிலாந்து தேசத்திலிருந்து வந்தவர்கள், முன்னர் அது ''ஏஞ்சல் லாண்ட்,'' (“Angel Land”) என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் வெள்ளையாகவும் வெண் பொன்னிறமாகவும் இன்னும் போன்ற... ஐயர்லாந்து, நார்வே இன்னுமாக - அங்கே மேலே வரை பரவலாக இருக்கின்றனர். அவர்கள் எல்லாரும் ஆங்கிலோ சாக்சன் ஜனத்திலிருந்து வெளி வந்தவர்கள். 78இப்பொழுது, முதலாவதாக சபிக்கப்பட்டது எது? அவர்களில் ஒருவரும் அல்ல. நீங்கள் எதை குறிப்பிட முயல்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் காமை குறிப்பிட விரும்புகிறீர்கள். நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும் - காமின் ஜனத்திற்கு. இப்பொழுது இங்கே, காம், சேம், யாப்பேத் இருக்கின்றனர். இப்பொழுது காம், அவன் - அவன் தன் தகப்பனுடைய நிர்வாணத்தை மூட முயற்சிக்கிவில்லை, ஆனால் சிரித்து, அவனைப் பரியாசம் பண்ணினான். ஆகவே, காம் தன்னுடைய தகப்பனின் நிர்வாணத்தைப் பார்த்ததற்காகவும், அவனுடைய நிர்வாணத்தை மூட முயற்சி செய்யாமலிருந்ததற்காகவும் தேவன் அவன் மீது சாபத்தை வைத்தார். சேமும் யாப்பேத்தும் பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பன் நிர்வாணமாய் படுத்திருந்த போது தங்கள் கோட்டுகளினால் தங்கள் தகப்பனை மூடினார்கள். ஆகவே இப்பொழுது, தேவன் காமிடம், அவனுடைய சந்ததி மற்றவர்களுக்கு அடிமையாயிருப்பான் என்றார். 79இப்பொழுது, கறுப்பாக இருப்பது ஒரு சாபம் என்று நீங்கள் எண்ணியிருந்தால், அப்படியானால், யூதனும் கறுப்பாக இருக்கின்றானே. அவ்விதமாக நீங்கள் நினைப்பீர்களானால், - அந்த - கறுப்பு மனிதன் அல்லது இப்பொழுது தேசத்தின் நீக்ரோ மனிதன் என்று நாம் அழைக்கிறோமே, நீங்கள் இந்தியாவிற்கு செல்ல வேண்டும். இந்தியர்கள் நீக்ரோக்களை விட அதிக கறுப்பாக உள்ளனர். நான் இரண்டு நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். இங்கே இருக்கின்ற, இந்த - இந்த எந்தியோப்பியாவிலிந்து வருகின்ற எத்தியோப்பிய மனிதன், ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவன், இன்றைக்கு நாம் அறிந்திருக்கின்ற கறுப்பு நிற மனிதன் ஆவான். இயேசு வந்த போது நாம் இருந்தவாரே அவர்கள் அங்கே இன்னுமாக அவர்களில் அநேகர் மிக பழைய காலத்தவராக - தங்கள் பழங்குடி இனத்தில் இருக்கின்றனர். பூர்வீக ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடிமக்கள் இப்பொழுது இருக்கின்ற விதமாகவே, வெள்ளை நிற மக்களும் ஆதிகாலத்து பழைய காலத்தவராக இருந்தனர், கூறப்போனால் மோசமாக இருந்தனர். நினைவில் கொள்ளுங்கள், ஆங்கிலோ - சாக்ஸன் ஜனங்களாகிய நாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அங்கே நிர்வாண பூர்வகால குடிமக்களாக, வேட்டைக்காக ஒரு - ஒரு வில்லுடனும் அம்புடனும், கற்கோடாலியுடனும் இருந்தோம் (அது முற்றிலும் சரி), அது முற்றிலும் சரி. ஆகவே எது தான் அது? இன்று இயேசு கிறிஸ்தவை ஏற்றுக் கொள்ள மறுப்பவன் தான் சபிக்கப்பட்ட ஒருவன் ஆவான் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். அவ்வளவு தான். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். 80இப்பொழுது, உங்களால் கூற முடியாது... நான் சென்று அங்கே அந்த எஸ்கிமோவின் தேசத்தை எடுத்துக் கொள்வேன் என்று உங்களால் கூறமுடியாது. அவன் அங்கே வசிக்கிறான்; அந்த மனிதன் இங்கே நம்மிடையே இருக்கின்ற கறுப்பு நிற மக்களைக் காட்டிலும் கறுப்பாக இருக்கிறான். நான் இந்தியாவிற்கு சென்று இந்தியரைக் கூட்டி வருகிறேன்; அவன் - அவன் கறுப்பாக இருக்கிறான். அவன் கறுத்த நிறமாக இருக்கிறான் - மிக கறுத்த மனிதனாக இருக்கிறான். அவன் எப்படி அழைக்கப்படுகிறானென்றால்... அவன் ஒரு இந்தியனாக இருக்கிறான். நல்லது, இப்பொழுது ஆப்பிரிக்காவில் சில ஆப்பிரிக்க ஜனங்கள் உள்ளனர்... அவர்களில் சிலர் சற்று வெள்ளையாக உள்ளனர்; சிலர் ஏறக்குறைய வெள்ளை நிறத்தவராக இருக்கின்றனர்; அவர்களில் சிலர் வித்தியாசப்பட்ட முறைகளில் இருக்கின்றனர். நீங்கள் யூதரிடம் செல்லுங்கள்; எல்லா யூதர்களும் கறுத்த நிறம் கொண்டவர்களாயிருக்கின்றனர் என்று நீங்கள் கூறுவீர்கள். யூதன் பழுப்பு நிற மனிதன் ஆவான், ஆனால் சிகப்பு தலை, நீலநிறக் கண்கள், வெள்ளை தோலைக் கொண்ட அநேகம் பேர்களை நான் கண்டிருக்கிறேன். பாருங்கள்? 81ஆகவே அந்த முழு காரியம் என்னவெனில்: நாமெல்லாரும் ஒரே மரத்திலிருந்து வந்தவர்கள் ஆவர். அது சரி. ஏவாளின் விழுந்து போதலின் மூலமாக நாமெல்லாரும் சபிக்கப்பட்டோம். பிறகு நாமெல்லாரும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலமாக இரட்சிக்கப்பட்டோம். இதோ அது. ஆகவே சாபம் என்பது இல்லை. விசுவாசிக்காதவர்கள் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள், ஆனால் விசுவாசிக்கிறவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆகவே நண்பர்களே, கறுப்பு நிறத்தவரோ அல்லது நீக்ரோ மனிதனோ அல்லது வெள்ளை மனிதனோ, அல்லது மஞ்சள் நிற மனிதனோ, இவர்களில் யாருமே இல்லை. அவர்கள்... கறுப்பாயிருப்பதால் கறுப்பு மனிதன் சபிக்கப்பட்டவனாகயிருந்தால், அப்படியானால் மஞ்சள் நிற மனிதன் பாதி சபிக்கப்பட்டிருக்கிறான். பிறகு அந்த ஆகவே அப்படியானால் மஞ்சள் நிற மனிதன் பிறகு பழுப்பு நிற மனிதன், அவன் மூன்றில் இரண்டு பங்கு சபிக்கப்பட்டவனாக உள்ளான். பாருங்கள், பாருங்கள்? ஆகவே அப்படியானால் ஆப்பிரிக்கா மனிதன் ஐந்தில் நான்கு பங்கு சபிக்கப்பட்டிருக்கிறான். இன்னுமாக இந்தியன் மிகவும் சபிக்கப்பட்டிருக்கின்றானா என்று நான் யூகிக்கிறேன். ஓ, என்னே! எப்படிப்பட்ட ஒரு முட்டாள்தனம் இல்லை! அது வித்தியாசப்பட்ட சீதோஷணம், மற்றும் காரியங்களில் மக்கள் ஜீவிக்கிறதால் அவர்கள் கறுத்துப் போயினர். இன்னுமாக...?... 82அமெரிக்க இந்தியனைப் பாருங்கள். அவர்களில் அநேகர்... அங்கேயிருக்கின்ற நவஜோ, இந்த நாட்டில் இருக்கின்ற கறுப்பு நிற எத்தியோப்பிய ஜனங்களைக் காட்டிலும் கறுப்பு நிற ஜாதி மக்களாக இருக்கின்றனர், நவஜோ. அப்பாச்சுகள் (Apaches)... அவர்கள் ஒரு - ஒரு விதமான செம்புநிற மக்களாக இருக்கின்றனர். மேலும் வித்தியாசமான ஜாதிகள்... பாருங்கள்? அங்கே சரியாக இந்தியர்கள் மத்தியில், சரியாக இங்கே, நீங்கள் கறுப்பு நிற ஒன்றைக் காணலாம், ஏறக்குறைய... செரோக்கீயும் நாம் இருக்கிறது போன்று ஏறத்தாழ மங்கலான வெளுத்துப் போன நிறத்தையுடையவனாக இருக்கிறான். இங்கே சரியாக இந்த தேசத்தில் வித்தியாசமாக பிரிவுகள் இருக்கின்றன. ஆகவே நீங்கள் பாருங்கள், அவர்கள் பாதி சபிக்கப்பட்டுள்ளனர், முழுவதும் சபிக்கப்பட்டுள்ளனர் என்று உங்களால் கூறமுடியாது. அவர்கள் கறுப்பராயிருப்பதால் அவர்கள் சபிக்கப்படவில்லை. அவர்கள் மஞ்சள் அல்லது அவர்கள் வெள்ளை நிறத்தவராக இருப்பதால் அவர்கள் சபிக்கப்படவில்லை. எனக்குத் தெரிந்த வரையில் ஒரே ஒரு சாபம் தான் உண்டு, அது இயேசு கிறிஸ்துவைக் குறித்த அவிசுவாசமே. (டானி எனக்குத் தெரியும், முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஆனால் இன்னும் இரண்டு கேள்விகள் என்னிடம் இருக்கின்றன). 83கேள்வி: சரி இப்பொழுது. சிதறிப் போன இஸ்ரவேலின் பத்து கோத்திரங்கள் எங்கே (ஆதியாகமம் 44 : 49) அநேக தேசங்களுக்கான யோசேப்பின் கோத்திரம்? சிமியோன், லேவி, தங்களுக்கென சொந்த தேசம் இல்லாதவர்கள், ஆனால் பத்து கோத்திரங்களுக்கிடையே சிதறி இருப்பவர்கள்... பத்து கோத்திரங்கள் எங்கே? நம்மால் அதை கண்டுபிடிக்க முடியுமா? ஆம், ஐயா அவைகளைக் கண்டு பிடிக்கமுடியும். பூகோளப் பிரகாரமாக வேதாகமத்தில் அவைகளைக் கண்டு பிடிக்க முடியும். இந்த கடைசி நாட்களில் அவைகள் எங்கேயிருக்கும் என்றும் அவைகளின் முடிவு என்னவாயிருக்குமென்றும் அங்கே தேவன் நமக்கு கூறிகின்றார். ஆகவே சரியாக இப்பொழுது, இஸ்ரவேல் அவர்கள் எங்கே இருந்தனரென்று ஒரு புத்தகத்தை படித்தேன் அது...?... அது தன் பாதத்தை எண்ணையில் தோய்த்தது மற்றும் எல்லா காரியத்தையும் அது கூறினது. தேவன் அவர்களை அவர்கள் இடத்தில் ஸ்தாபித்துவிட்டார், அவர்களை வெவ்வேறான இடத்தில் வைத்துள்ளார். கடைசி நாட்களில் அவர்கள் எங்கிருப்பார்கள் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கின்ற இடத்திற்கு, பாலஸ்தீனாவிற்கு யூதர்கள் எல்லாரும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 84கேள்வி: இன்னும் ஒரே ஒரு கேள்வி: தேவன் யுத்தங்களை நியாயத்தீர்ப்பாக அனுப்பியிருக்கிறார் என்று என்னால் விசுவாசிக்க முடியவில்லை. யுத்தங்களை நியாயத்தீர்ப்பாக தேவன் அனுப்புகின்றார் என்று என்னால் விசுவாசிக்க முடியவில்லை. (சற்று செவிகொடுங்கள்.) தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் - மத்தியில் அப்பாவியான ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கொல்லத்தக்கதாக, ஆதி பாபிலோனிலிருந்து ஹிட்லர் வரை, அவர்கள் போன்ற கொலைபாதகர்களின் கைகளில் பட்டயத்தை தேவன் வைத்தார் என்று சிலர் விசுவாசிப்பது போல, நான் விசுவாசிப்பதில்லை. யுத்தங்கள் சாத்தானின் கிரியைகளாய் இருக்கின்றன. தயவுசெய்து இந்தக் குழப்பத்தை ஊர்ஜிதம் செய்யவும். இப்பொழுது, சற்று நேரம்... சற்று நேரத்திற்கு முன்னர் இதை நான் படித்தேன், அதன் காரணமாகத் தான் இதை நான் கடைசியில் வைத்தேன். இப்பொழுது, நீங்கள் சற்று பொறுத்துக் கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது, இதை நாம் சற்று - சற்று தெளிவாக பார்ப்போம், ஏனெனில் இது ஒரு நேரடியான கூர்மையான கேள்வியாகும். ஆகவே இது பயபக்தியுடன் அணுகப்பட வேண்டிய ஒன்றாகும். அதன்பிறகு உடனடியாக, நீங்கள் எங்களுடன் சற்று நேரம் பொறுத்துக் கொள்வீர்களானால். 85நேரமாகிக் கொண்டிருக்கிறதென்று எனக்குத் தெரியும், ஆனால் இது... நினைவில் கொள்ளுங்கள், இதைக் குறித்தென்ன? இப்பொழுது, நீங்கள் சென்று இரவெல்லாம் நடனம் ஆடிவிட்ட பிறகு அதைக் குறித்து ஒன்றும் எண்ணுவதில்லை, (அப்படித் தானே?) உலகக் காரியங்களுக்காக செல்கிறீர்கள், ஆனால் தேவனுடைய வார்த்தை என்று வருகின்ற போது இருபது நிமிடங்களுக்கு மேலானால், சகோதரனே, நாம் ஒரு புதிய பிரசங்கியை பெற்றுக் கொள்ள வேண்டுமென்கிறோம். பாருங்கள்? அது ஒரு வெட்கக்கேடான ஒன்று. பவுல் இரவு முழுவதும் பிரசங்கித்தான். அநேக வருடங்களுக்கு முன்பு சரியாக இங்கே காலை 2 அல்லது 3 மணிவரைக்கும் நான் பிரசங்கித்திருக்கிறேன். இங்கே ஜனங்கள் இந்த இடத்தில் மேலும் கீழுமாக நடந்து கொண்டு தேவனை துதித்துக் கொண்டிருப்பார்கள். 2 அல்லது 3 மணிக்கு அநேகர் ஒரே நேரத்தில் டசன் கணக்கில் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டதை நீங்கள் கண்டிருப்பீர்கள். தேவனே இரக்கமாயிரும். அதை நான் மறுபடியுமாக காண எனக்கு விருப்பம்தான். ஆனால் நம்மால் முடியாது; அந்த நாட்கள் சென்றுவிட்டன. நாள் இப்பொழுது கடந்துவிட்டது; இப்பொழுது அது செலவழிக்கப்பட்டுவிட்டது. இரவு வந்து கொண்டிருக்கிறது. ஜனங்களெல்லாரும்... இனிமேல் எங்களால் இருக்கமுடியாது ஆதலால்... என்னுடைய...?... செல்ல ஆயத்தமாக வேண்டும். அது அந்த அந்த விதமாகவே சென்று கொண்டிருக்கிறது. 86பொறுங்கள், இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். சகோதரனே அல்லது சகோதரியே அது யார் என்று எனக்குத் தெரியாது. உங்களுடன் நான் கருத்து வேற்றுமை கொள்ளப் போகிறேன். அது இங்கே இக்காலை வைக்கப்பட்டது. அதை என்னுடைய வேதாகமத்தில் வைத்து சற்று முன்னர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது, ஒரு சிநேகத் தன்மையான வழியில்... ஆகவே இப்பொழுது, நீங்கள் என் மீது வருத்தம் கொள்ள எனக்கு விருப்பமில்லை. நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆகவே நினைவில் கொள்ளுங்கள், சற்று முன்னர் அந்த ஏழை ஸ்திரீக்கு, அந்த ஸ்திரீக்கு நான் செய்தது போல, இதைக் குறித்த உங்களுடைய தீர்மானத்திலும் - உங்களுடன் இதைக் குறித்து இணங்க எனக்கு விருப்பமுண்டு. அவள்... அவளும், அவளுடைய புருஷனும், அவர்கள் ஓடிப்போய் விவாகம் செய்து கொண்டனர்; அதோ அது அங்குள்ளது. ஆனால் அவள் ஒரு வாக்குக் கொடுத்திருக்கிறாள்; நீங்கள் அதனுடன் தான் இருக்கவேண்டும். பாருங்கள்? ஆகவே இப்பொழுது, நான் தேவனுடைய வார்த்தையுடன் அசையாது ஒட்டிக் கொண்டிருக்க வேண்டியவனாக இருக்கிறேன். 87ஆனால் இப்பொழுது, ''நான் விசுவாசிக்கவில்லை...'' ஆனால் முதலாவதாக, “தேவன் யுத்தங்களை நியாயத்தீர்ப்புகளாக அனுப்புகிறார் என்று என்னால் விசுவாசிக்க முடியாது''. நல்லது இப்பொழுது, நண்பனே, உங்களுடைய நம்பிக்கையில் தவறாக ஒரே ஒரு காரியம் தான் இருக்கின்றது, அது, வேதப் பூர்வமாக இல்லாததே. தேவன் யுத்தத்தை நியாயத்தீர்ப்பாகவும் அனுப்புகிறார். அது சரி. நான் - நான் உங்களுக்கு வேத வசனத்தை கொடுக்கப் போகிறேன்; நான் இதை அப்படியே படித்துவிட்டு பிறகு உங்களுக்கு கூறிவிடப் போவதில்லை. கவனியுங்கள், ''ஒன்றுமறியாத ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கொல்லத் தக்கதாக, பழைய பாபிலோன் துவங்கி ஹிட்லர் வரையிலான இந்த கொலைபாதகர்கள் கைகளில் தேவன் பட்டயத்தை வைத்தார் என்று சிலர் விசுவாசிப்பது போல நான் விசுவாசிப்பதில்லை. ஆனால் அவர் அதைச் செய்தார் என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களிடம் கூறி, அதை அவர் செய்தாரென்று, அல்லது அவர் அதை மறுபடியுமாக செய்யப் போகிறாரென்று அதை வேதாகமத்தின் மூலமாக அதை நிரூபித்தால், அப்படியானால் நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? (பாருங்கள்?) சரி. இதற்கு செவி கொடுங்கள். 88எனக்குத் தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் இங்கே அமர்ந்திருக்கின்ற என்னுடைய நெருங்கிய நண்பனாகக் கூட இது இருக்கலாம்; இது யாருடைய கையெழுத்தென்றும் எனக்குத் தெரியாது. பரலோகத்திலிருக்கிற தேவன்தான் அதை அறிவார். என்னால் உங்களுக்கு கூற முடியவில்லை. ஆனால் இதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ''என் தேவன் அன்பின் தேவனாவார் - என் தேவன் அன்பாயிருக்கிறார். ஆகவே இதைச் செய்யமாட்டார். யுத்தங்கள் பிசாசினால் உண்டானது. யுத்தங்கள் பிசாசினால் உண்டானதென்று நான் உங்களுடன் ஒப்புக்கொள்கிறேன். அது சரியான ஒன்று.அவன் தான் இந்த உலகத்தின் அதிபதி. இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு இராஜ்ஜியமும் ஒவ்வொரு தேசமும் சாத்தானைச் சேர்ந்ததாகும். தேவன் தம்முடைய வார்த்தையில் அவை அப்படித்தான் என்று கூறினார். சாத்தானும், ''அவை என்னுடையது'' என்றான். அவைகளெல்லாம் அவனுடையது தான் என்று இயேசுவும் ஒப்புக் கொண்டார். ஆனால் பிறகு இயேசு அவைகள் எல்லாவற்றிற்கும் அவர் சுதந்தரவாளியாக ஆகப் போகின்றார். பிறகு நமக்கு இன்னுமாக யுத்தங்கள் இருக்காது. ஆனால் இதை திருத்துதலுக்காகவும் நியாயத்தீர்ப்பிற்காகவும் இதைச் செய்ய சாத்தானை தேவன் அனுமதிக்கின்றார். இப்பொழுது, நாம் துவங்குவதற்கு முன்னர் உங்களிடம் ஒன்றை நான் கேட்க விரும்புகிறேன். நீங்கள் இதற்கு எனக்கு பதிலளித்து கண்டு பிடிக்க நான் விரும்புகிறேன். தேவன் ஒரு... (நீங்கள் கூறினீர்கள்)... இந்த காரியங்களைச் செய்வதில்லை என்று நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால்... துவக்கத்திலிருந்து நாம் ஆரம்பிக்கும்படி... இப்பொழுது, உங்களால் கூடுமானவரை உங்கள் அசையாத கவனத்தை எனக்கு செலுத்துங்கள். கவனியுங்கள். பின் ஏன் தேவன் தாமே தம்முடைய சொந்த குமாரனை சிட்சித்து சிலுவையில் அவரை கொலை செய்தார்? தேவன் தம்முடைய சொந்த குமாரனை சிலுவையில் கொன்றார். “அவரை அடித்து, அவரை நொறுக்கி அவரை காயப்படுத்த வேண்டும்'' என்று ”அது அவருக்கு பிரிதீயாயிருந்தது'' என்று வேதவசனம் கூறுகின்றது, என்னை அவர் இரட்சிக்கத் தக்கதாக தேவன் தம்முடைய சொந்த குமாரனுக்கு அந்த விதமாக செய்தார். 89இஸ்ரவேலின் மகத்தான ராஜாவாகிய சவுலைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். சவுல் சென்று ஓக் ராஜாவையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் பிடித்து அங்கே இருந்த எல்லாவற்றையும் முழுவதுமாக அழித்து, ஆண், பெண்கள், பிள்ளைகள் மற்றும் எல்லாவற்றையும்... ஆகவே சவுல்... ஆடு மாடுகள் கூட கொல்லப்பட வேண்டும், உயிர் வாழ எதையுமே விட்டு வைக்கக் கூடாது என்று தேவன் அவனிடம் கூறினார். சவுல் அங்கே சென்று சில ஆடு மாடுகளைக் கொல்லாமல் விட்டுவிட்டான். ஆகவே தேவன் அவனிடமிருந்து ஆவியை எடுத்து தம்மிடமிருந்து அவனைப் பிரித்துவிட்டார்; அவன் தேவனுக்கு சத்துரு ஆனான். தேவன் அந்த வயதான ராஜாவாகிய ஓகை - ஆகாபின் கைகளில் கொடுத்த போது எலியா ஏன் அங்கு நின்றான்? அவன் ஆகாபிடம் அந்த ராஜாவைக் கொல்லவேண்டும் என்று கூறினான். ஆகாப் அதைச் செய்ய மறுத்தான். எலியா ஒருஉதவிக்காரனை வைத்திருந்தான், அவன் “உன்னுடைய பட்டயத்தினால் என்னை அடி'' என்றான். நீங்கள் வாசித்தால்... அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். அவன் “என்னால் முடியாது என்றான். அவன் தன்னுடைய உயிரை இழந்தான்”. பிறகு அவன் வேறொருவனைப் பார்த்து ''என்னை அடி'' என்றான். அந்த மனிதன் அவனை பட்டயத்தினால் அடித்தான், வெட்டினான். பிறகு அவன் தன்னைத் தானே துணியினால் சுற்றிக் கொண்டு வேஷமாறினவனாய் அங்கே நின்று கொண்டிருந்தான். அங்கே ஆகாப் தன்னுடைய இரதத்திலே வந்தான். அவன், “ஏன் - ஏன் இங்கு நீ நின்று கொண்டிருக்கிறாய்?'' என்றான். அவன், ''நான் ஒரு காவல்காரன்; ஒரு மனிதனை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அவன் என்னை அடித்து ஓடிவிட்டான்,'' என்றான். மேலும் அவன், ''நான் அவனை விட்டுவிட்டேன். இவ்வாறு நான் செய்தால் என் சொந்த பிராணனை அதற்கு ஈடாக செலுத்த வேண்டியதாயிருக்கும் என்று அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள்'' என்றான். அவன்,“அப்படியா, நீ உன் சொந்த பிராணனை அதற்கு ஈடாக செலுத்தித்தான் ஆகவேண்டும்'' என்றான். அவன் தன் வேஷத்தைக் கலைத்து “கர்த்தர் உரைக்கிறதாவது: அங்கேயிருந்த ராஜாவை நீ கொலை செய்யாமல் விட்டுவிட்டபடியால், உன்னைத் தானே அதற்கு ஈடாக செலுத்துவாய்'' என்றான். அது சரியா? அது முற்றிலும் சரி. 90இங்கு ஒன்றை நான் உங்களுக்கு வாசித்து காண்பிக்கட்டும். பாபிலோனைக் குறித்து, யோசுவோ - தேவன் யோசுவாவை அங்கே அனுப்பினபோது, அவன் சிறு குழந்தைகளை, பிள்ளைகளை, மற்ற எல்லாவற்றையும் அடியோடு அழித்துப் போட்டான், அவன் அவர்களை அழித்து போட்டான். அவன் ஒன்றையும் கூட உயிர்வாழ விடவில்லை. அவன் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துப் போட்டான். சிறிய பெலிஸ்திய குழந்தைகள், அவன் அவைகளை அழித்துவிட்டான். தேவன் அவனுக்கு கட்டளையிட்டார். ஆகவே அவன் அதைச் செய்யவில்லையெனில், அது அவனுடைய ஜீவனாக இருந்தது. இன்னும் சில நிமிடங்களில் உங்களை நான் தெளிவாக்கிவிடுவேன். தேவன் அன்பாக இருக்கிறார், பரிபூரண அன்பு; ஆனால் அன்பு என்ன என்று உங்களுக்குத் தெரியாது. அதனால் இன்று மக்களுக்கு விசுவாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் உள்ளது. தேவன் அன்பாக இருக்கிறார். அவர் அன்பில் தான் இருக்க வேண்டும். அவர் தம்முடைய வார்த்தைக்கு உத்தமமானவராக இருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவர் உன்னை நேசிக்கத்தான் வேண்டும். ஆகவே அவர் உன்னை நேசித்தால், அவர் உன்னை பாதுகாத்துக் கொள்ளத்தான் வேண்டும். 91இங்கே கவனியுங்கள். பிள்ளைகளைக் கொல்லுகிறதை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். இங்குள்ள இக்காரியங்களைக் குறித்து வேத வசனங்கள் என்ன கூறுகின்றன என்று - ஒரு நிமிடம் இங்கே வேத வசனங்களில் ஒன்றை நான் உங்களுக்கு காண்பிப்பேன். இங்கே நாம் திருப்புவோம், இதை சற்று ஒரு நிமிடம் கேளுங்கள், தேவன் என்ன கூறினார் என்பதைப் பாருங்கள். இப்பொழுது நான், நீங்கள் குறித்து கொள்ள விரும்பினால் எசேக்கியேல் 9-வது அதிகாரத்திலிருந்து நான் வாசிக்கிறேன். கூர்ந்து கவனியுங்கள்: ஆகவே... பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய் நகரத்தின் விசாரிப்புக்காரர் சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டு வரக்கடவர்கள் என்று சொன்னார். (இப்பொழுது இது தேவன் பேசுவதாகும்) அப்பொழுது இதோ, ஆறு புருஷர் வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள், ஒவ்வொரு மனிதனும் வெட்டுகிற ஆயுதத்தை தன் கையில் பிடித்துக் கொண்டிருந்தான். அவர்களில் வெள்ளை சணல் நூல் அங்கிதரித்து தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து வெண்கல பலிபீடத்தண்டையிலே நின்றார்கள். அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேரூபின் மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, வெள்ளை சணல்நூல் அங்கிதரித்து தன் கையிலே - அல்லது அரையிலே கணக்கனுடைய மைக் கூட்டை வைத்திருந்த என்னை - புருஷனைக் கூப்பிட்டு. கர்த்தர் (LORD)... (கொட்டை எழுத்து L-O-R-D க-ர்-த்-த-ர் அது தேவன் ஆகும்) கர்த்தர் அவனை நோக்கி நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய் அதற்குள்ளே செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டழுகிற மனிதனின் நெற்றியில் அடையாளம் போடு என்றார். பின்பு அவர்... (LORD அந்த கர்த்தர்)... என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் கண்தப்ப விடாமலும் நீங்கள் இரங்காமலும் (6-வது வசனத்தை கவனியுங்கள்) முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்து - சங்கரித்து கொன்று போடுங்கள்... (தேவன் அவ்வாறு கூறினார். தேவன் அவ்வாறு கூறினார்)... அடையாளத்தை கொண்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள். என் பரிசுத்த ஸ்தலத்திலே - நுழைவாசலில் துவக்குங்கள். அப்பொழுது ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பர் மனிதனிடத்தில் துவக்கம் பண்ணினார்கள். வேறு விதமாகக் கூறினால், தேவன் இந்த ஜனங்களிடம், “இப்பொழுது காத்திருங்கள்; உண்மையாக தேவனுக்காக அற்பணித்த அவர்கள்... நான் முதலாவதாக அந்த ஜனங்களுக்கு முத்திரையை இடப்போகிறேன்,'' என்றார். அவர் அவர்கள் மீது ஒரு அடையாளத்தைப் போட்டார். அவர் இப்பொழுது வெட்டுகின்ற ஆயுதங்களை கையில் பிடித்திருக்கிற மனிதராகிய நீங்கள், சென்று ஸ்திரீகள், பிள்ளைகள் அல்லது எதையுமே விட்டு வைக்காமல் ஒவ்வொன்றையும் சங்கரித்து கொன்று போடுங்கள்'' என்றார். 92ஜலப்பிரளயத்திற்கு முன்னர் இருந்த உலகத்தின் அழிவில், கோடிக்கணக்கான, கோடிக்கணக்கான, கோடிக்கணக்கான ஜனங்கள் பூமியின் மேல் இருந்த போது தேவன் நோவா என்னும் பேர் கொண்ட ஒரு வயதான பரிசுத்த பிரசங்கியை அனுப்பி, நூற்றிருபது வருடங்கள் பிரசங்கித்து, அவர்கள் பேழைக்குள் வரவேண்டுமென்றும் பேழைக்குள் வராத எல்லாரும் அழிக்கப்படுவர்... என்றும் கூறினார். வானங்களை தமது கட்டுக்குள் வைத்திருந்த சர்வ வல்லமையுள்ள தேவன், இலட்சக்கணக்கான வயதான மக்கள், வாலிப மக்கள், சிறிய குழந்தைகளை முற்றிலும் அழித்து போட மழையை அனுப்பினார். அவர்கள் நடுங்கி கொண்டு தண்ணீரில் மாண்டுபோயினர். சர்வ வல்லமையுள்ள தேவன் - அவர் சரியாக அன்பின் தேவன் ஆவார். அது உண்மை. அவர் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர் தமக்கு சொந்தமானதை நேசிக்கிறார். அவர் தமது வார்த்தைக்கு உத்தமமானவராக இருக்கவேண்டும். ஆதாலால் ஒரு - ஒரு சர்ச்சைக்கல்ல, ஆனால் உங்களுடன் இணங்காமல் போகவேண்டும் என்பதற்காகவே. உங்களுடைய அன்பின் தேவன்... 93சிறிது காலத்திற்கு முன்னர் இங்கே நான் பேசிக் கொண்டிருந்தேன். அது ஒருக்கால் ஒரு யெகோவா சாட்சியாக இருக்கலாம். அந்த மனிதன் வந்து “சகோதரன் பிரன்ஹாம், எரிகின்ற நரகம் ஒன்றிருக்கிறது என்பதை நீர் விசுவாசிக்கின்றீர் என்பதை எனக்கு கூற முற்படுகிறீரா?'' என்றார். நான், “அது நான் கூறுவதல்ல, வேதாகமம் அதைக் கூறுகிறது'' என்றேன். அவர், “அப்படியானால் ஒரு நேசமிக்க பரலோகப் பிதா தம்முடைய பிள்ளைகளை எரித்துவிடுவார் என்று என்னிடம் கூற முற்படுகிறீரா? ஏன்'' என்றார் ''உங்களுடைய குழந்தையை நீர் எரிக்கமாட்டீர்'' என்றார். நான் “இல்லை ஐயா!'' என்றேன். ''நல்லது அப்படியானால் மானிடராகிய நீர் அவ்வளவாக அன்பைக் கொண்டிருக்கிறீர் என்றால் (பாருங்கள் ஜனங்கள் எப்படி காரியத்தை மாற்றுகின்றனர்?) - மானிடப் பிறவியாகிய நீங்கள் அவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர் என்றால், ஒரு நேசமிக்க பரலோகப் பிதா தம்முடைய பிள்ளைகளை அழிப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான், “முடியாது!” என்றேன். அவர் தம்முடைய பிள்ளைகளை அழிக்கமாட்டார், ஆனால் நீங்கள் யாருடைய பிள்ளை? தேவன் தம்முடைய பிள்ளைகளை அழிப்பதில்லை. அவர்களை உள்ளே கொண்டு வர தம்மால் இயன்றதை அவர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்ற பிசாசுதான் தன் பிள்ளைகளை அழித்துப் போடுவான். ஆதலால் தேவன் சாத்தானை அனுமதிக்கின்றார். 94கவனியுங்கள். தீமையானது கீழே இறங்கி வந்து, சாத்தான் சென்று இயேசு கிறிஸ்து வரை தேவனுக்கு மிகவும் பரிபூரண ஊழியக்காரனாக இருந்த அவனை - யோபு - அவனுடைய பிள்ளைகளையும் அவன் கொண்டிருந்த எல்லாவற்றையுமே அழித்துப் போட அனுமதித்தது யார்? - தம்முடைய ஊழியக்காரனை சோதிக்கும்படியாக தேவன் அங்கே ஒரு கேட்டின் ஆவியை அனுப்பி, யோபின் பிள்ளைகள் எல்லாரையும், எல்லாவற்றையும், அழித்தார். அது சரியா? நிச்சயமாக. நீங்கள் யாராயிருந்தாலும் சரி, என்னுடைய சகோதரனே, சகோதரியே ஓ, ஒரு மணி நேரத்திற்கு என்னால் நின்று கொண்டு அவைகளை உங்களுக்கு காண்பித்தால் எப்படியிருக்கும், அது சரி, இந்த தேவனுடைய ஆவியை நீங்கள் வேறொன்றிலும் கலக்கவிடாதீர்கள். யுத்தங்கள் தேசங்களின் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பாக இருக்கிறது. அழிவுகள் தேவனால் அனுப்பப்பட்ட ஒன்றாகும். வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. தேவன் அன்பின் தேவனாக இருக்கிறார், ஆனால் தேவன் கோபாக்கினையின் தேவனாகவும் இருக்கின்றார். ஆகவே நீங்கள் நேசிக்கின்ற... நிற்கமாட்டார்கள். இன்று சபையை புண்படுத்தின காரியம் இதுதான். 95“ஒரு நேசிக்கின்ற பிதாவாயிருப்பதால், நான் இதைச் செய்வதைப் பொருட்படுத்த மாட்டார்'' நீங்கள் அதைச் செய்ய விரும்பினால் நீங்கள் சென்று அதைச் செய்யலாம், ஏனெனில் ஆரம்பமாக தேவனுடைய அன்பு உங்களில் இல்லவேயில்லை. இன்னும் சிறிது நேரத்தில் நாம் இராப்போஜனத்தை எடுக்கப் போகிறோம், ஆகவே நான் இது உங்களுக்குள் ஆழமாக பதியச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். காரியம் என்னவெனில், உங்கள் இருதயத்தில் என்ன இருக்கிறதோ, அதுதான் உற்பத்தி செய்யும் - உங்கள் வாழ்க்கையை உருவாக்கும். நீங்கள் எந்த விதமான விதையை நிலத்தில் விதைக்கிறீர்களோ அதன் இனம்தான் வெளிவரும். நீங்கள் ஒரு மக்காச்சோளப் பொறி செடியை எடுத்து அதிலிருந்து கனிக்கல் நாணலை (gypsumneed) எப்படி நீங்கள் எடுக்கமுடியும்? நீங்கள் ஒரு... நீங்கள் ஒரு நெல்லை எடுத்து அதினின்று ஒரு ஊமச்சிமுள்ளை உற்பத்தி செய்ய முடியதோ அதே போன்றுதான் இதுவும் ஆகும்... நீங்கள் அவைகளை ஒன்று சேர்க்க முடியாது, ஏனென்றால் அது இரண்டு வித்தியாசப்பட்ட சுபாவத்தை உடையவை, மொத்தமாக இரண்டு வித்தியாசப்பட்ட ஜீவன்கள். நீங்கள் நீங்கள் ஒரு கனிக்கல் கொடியின் விதையையும் ஒரு வெங்காயத்தின் விதையையும் எடுக்கலாம், சிறந்த ஒரு மனிதனாலும் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அது மிகவும் ஒன்றாகத் தென்படும். அது சரி. நீங்கள் செய்ய வேண்டிய ஒரேயொரு காரியம் அதை நடுவதேயாகும். அவைகள் ஒருவிதமாகத் தான் இருக்கும், ஆனால் அவைகளை நடுங்கள். அவையிரண்டும் உற்பத்தி செய்யும், ஒன்று கனிக்கல் செடியாக இருக்கும், மற்றொன்று வெங்காயமாக இருக்கும். அது முற்றிலும் சரி. “என்ன - இந்த விதை என்ன - இந்த விதமாக சரியாகக் காணப்படுகிறதே - ஆனால் வித்தியாசமான ஜீவனை உற்பத்தி செய்கிறதே?” எனலாம். ஏனென்றால் அது அந்த விதமான ஜீவனை அதற்குள் கொண்டிருக்கிறது. 96ஆகவே கிறிஸ்தவன் என்று கூறிக்கொள்ளும் எந்த ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ, தேவனுடைய கிருபையால், அந்த விதமான ஜீவியத்தை செய்யாவிடில், அது ஒரு கனிக்கல் செடியாகும். அவர்களுடைய கனிகளாலே அவர்களை அறிவீர்கள். அந்த காரியமானது உங்களுடைய இருதயத்தில் இருக்குமானால், நீ வேறெங்காவது என்னவாயிருக்கிறாய் என்று அது சாட்சி பகரும். அது தீமையாக இருக்குமானால், இங்கே என்னவாக நீ இருக்கிறாய் என்று அது சாட்சி பகரும். நீ மரிக்கும் போது, நீ ஏற்கெனவே எங்கிருந்தாயோ அங்கே நீ சென்றுதான் ஆக வேண்டும். நீ நல்லவனாக இருந்தால் நீ - நீ நல்லவனாக இருக்கிறாய், ஏனெனில் தேவன் உன்னை நல்லவனாக உண்டாக்கியிருக்கின்றார், நீ மறுபடியும் பிறந்தவனாக இருந்தால், அந்த வழியாகத் தான் நீ சென்றாக வேண்டும், ஏனெனில் நீ கொண்டிருக்கிற ஜீவனானது இந்த இடத்துடன் சாட்சி பகர வேண்டும். இங்குள்ளதைக் குறித்து அது சாட்சி பகர்ந்தால் இங்கேதான் நீ சென்றாக வேண்டும். அங்கே மேல் உள்ளதைக் குறித்து அது சாட்சி பகர்ந்தால், அங்கே தான் நீ செல்லவேண்டும். பாருங்கள்? 97நீ என்னவாக இருக்கிறாயோ, நீ... அதை உங்கள் மனதில் இப்பொழுது கிரகித்துக் கொள்ளுங்கள். நான் முடிக்கப் போகிறேன். அது நீங்கள் இங்கே என்னவாயிருக்கிறீர்களோ, நீங்கள் எங்கோ ஏதோ ஒரு அடையாளமாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. கிறிஸ்தவர்களாகிய நீங்கள் எப்பொழுதும் பரிபூரணத்தில் இருக்க வேண்டுமென்று விரும்பினீர்கள். ஒரு பரிபூரணம் இருக்கின்றது, அந்த பரிபூரணம் இந்த ஜீவன் அல்ல. இங்கே கிறிஸ்தவனாக இருக்கிற ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும், இங்கே கிறிஸ்தவர்களாக இருக்கின்ற ஒவ்வொரு நபரும் ஏற்கெனவே இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தில் மகிமைப்படுத்தப்பட்டாகிவிட்டது. நீங்கள் வேறொரு சரீரத்தைப் பெற்றிருக்கிறீர்கள். மற்றுமொரு சமயம் உங்களுக்கு இருக்காது, இப்பொழுது சரியாக உங்களுக்கு இருக்கிறது. இந்த ஒன்று அழிந்து போகுமானால் சரியாக இப்பொழுது வேறொரு சரீரம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதைக் குறித்து உங்களால் சிந்திக்க முடிகின்றதா. அதை ஒரு நிமிடம் ஆராய்ந்து பாருங்கள். நாம் ஒவ்வொருவரும் நாளை காலை சூரியன் எழுவதற்கு முன் ஒருக்கால் நித்தியத்தில் இருக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? இப்பொழுது நீ ஒரு கிறிஸ்தவனாக இல்லையென்றால், என் நண்பனே, ஒரே ஒரு காரியம் தான் உனக்காக விடப்பட்டிருக்கிறது. நீ அந்த வழியாகத்தான் சென்றாக வேண்டும். நீ அந்த சாலையில் இருந்தால் நீ அந்த சாலைக்குதான் சென்றாக வேண்டும். நீ ஒரு நெற்கதிராக இருந்தால் நீ நெல்லை உற்பத்தி செய்வாய். நீ களையாக இருந்தால், நீ களையினுடைய ஜீவனைத்தான் பிறப்பிப்பாய். இப்பொழுது நீ... ஒன்றையும் அறியாமல், ஒன்றையும் போதிக்காமல் உன்னை வரும்படி செய்து, சபையின் அங்கத்தினனாக மட்டும் இருக்கச்செய்யும் ஒரு சபையைச் சர்ந்தவனாகயிருப்பின்... நீ நல்லது, “ சகோதரன் பிரன்ஹாம், இயேசு கிறிஸ்துவை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று என்னுடைய சபை போதிக்கிறது. நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்தால் நாம் இரட்சிக்கப்படுவோம் என்று கூறலாம். ஆனால் உன்னுடைய ஜீவியம் அதனுடன் ஒத்துப்போகவில்லையெனில், நீ இன்னுமாக அதை சென்றடையவில்லை. 98இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று பிசாசு கூட விசுவாசிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வெளிப்படையாக இயேசு - இயேசு தேவனுடைய குமாரன் என்று வெளிப்படையாக பிசாசு அறிக்கை செய்தது என்பதை நீங்கள் அறிவீர்களா? அவன் இரட்சிக்கப்படவில்லை. அவன் இரட்சிக்கப்பட முடியாது; அவன் தான் பிசாசு. ஆகவே இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கை செய்வது... உங்களுக்கு தெரியுமா, பரிசேயர், சதுசேயர் அனைவரும் மிக வைராக்கியமாக இருந்த, பக்தியாக இருந்த ஜனங்கள்; தேவனை நம் இருதயங்களில் எவ்வளவாக நேசிக்கிறோம், இவ்வாறு அவர்கள் எண்ணினர்; ஆனால் அந்த குற்றமற்ற ஒன்றை, அந்த தேவனுடைய குமாரனை காணத் தவறினர், அவர் தேவனுடைய குமாரன் என்று அடையாளம் கண்டு கொள்ளத் தவறினர். ஆனால் இன்னுமாக அவர்கள் மிக பக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர் (அது சரியா?) மிக வைராக்கியமாக, மிக அறிவு கூர்மையுள்ளவர்களாக, நம்முடைய அறிவாளிகளுக்கு தெரிந்துள்ளதைக் காட்டிலும் வேதத்தை மிக அதிகமாக அறிந்திருந்தனர். அவர்கள் உட்கார்ந்து கர்த்தரை சேவிப்பதைத் தவிர பரம்பரைப் பரம்பரையாக வேறெதுவும் செய்வதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. 99இப்பொழுது வேதவசனம் என்ன கூறுகிறதென்று கவனியுங்கள்: ''கடைசி நாட்களில்...'' என்னுடைய கிறிஸ்தவ நண்பர்களாகிய உங்களுக்கு, தேவ அன்புடன், கூறுவது. வேதாகமம், “கடைசி நாட்களில் மனிதன் துணிகரமுள்ளவனாயும், இறுமாப்புள்ளவனாயும், தேவப் பிரியராயிராமல் சுகப்போகப் பிரியனாயும் இருப்பான்” என்று கூறுகின்றது. இப்பொழுது அது உண்மையாயிருக்கிறதல்லவா? இந்த கட்டிடத்தில் இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட நபர் அன்றொரு இரவு புத்தாண்டு விருந்திற்கு சென்றார், அடித்தளத்தில் அவர்கள் பானங்களும் களியாட்டங்களும், ஐஸ்கிரீம் இரவு உணவுகளும் இன்னும் மற்றவைகளை அவர்கள் கொண்டிருந்தனர். சபைகள் நடனங்களைக் கூட வைக்கின்றன. செய்யவேண்டாம் என்று தேவன் சரியாக எதைக் கூறினாரோ, அவர்கள் அதை கிறிஸ்துவின் நாமத்தில் செய்கின்றனர். சபை என்ன செய்ய வேண்டுமென்று இயேசு கூறினாரோ அது இங்கேயிருக்கிறது, ஆனால் அவர்கள் அதை மறுதலிக்கின்றனர். இயேசு. இங்கே தம்முடைய கடைசி வார்த்தைகளாக சபைக்கு தம்முடைய சித்தமும் பிரமாணமுமாக: ''நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் (இது மேய்ப்பர் ஒருவேளை இதுவரையிலும் வாசித்திருக்கலாம். இதோ மற்றைய பாகம்) விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள். அவர்கள் சர்ப்பங்களை எடுப்பார்களானால் அல்லது சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களுக்கு தீங்கு செய்யாது; வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்,'' என்பதே. இப்பொழுது, அதைத் தான் இயேசு தம்முடைய நாமத்தில் செய்ய வேண்டுமென்று அவர்களிடம் கூறினார். அவர்கள் இருக்கின்ற ஒன்றை மறுதலிக்கின்றனர், ஆனால் அவர்கள் சென்று அவர் கூறினதற்கு முரணாக செய்து, அது கடந்து விட்டதென்று போதித்து அதனுடன் ஒன்றுமில்லை என்று கூறி, அதற்கு பதிலாக வேதாகமக் கல்வியை கற்றுக் கொடுக்கின்றனர். ஓ, நாம் இருக்கின்ற நிலையைக் குறித்து நமக்கு ஆச்சரியமில்லை. இங்கே கவனியுங்கள், என் சகோதரனே இதை நான் உனக்கு கூறட்டும். இங்கிருக்கின்ற ஒவ்வொரு அங்கத்தினனும் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் மிகவுமாக நிறப்பப்பட்டு அடையாளங்கள் அவர்களைப் பின் தொடருமானால், அந்த எல்லைக்கு சபையானது வருமானால்... 100அந்த தீவில் கப்பல் நொறுங்கின பிறகு பரிசுத்த பவுலைக் குறித்து நான் நினைக்கிறேன். தேவன் அவனுக்கு ஒரு தரிசனத்தை அளித்திருந்தார். பதினான்கு பகலும் இரவுகளும்... அவர்கள் காப்பாற்றப்படுவர் என்கிற நம்பிக்கை அற்றுப்போயிற்று. அந்த சிறிய, பழைய படகு அங்குமிங்குமாக மிதந்து கொண்டிருந்தது, இரவும் பகலும் பதினான்கு நாட்கள் அவர்களெல்லாரும் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். பவுல் அங்கேயிருந்தான், அவன் ஒரு தரிசனத்தைக் கண்டான். அவன் ''நீங்கள் தைரியமாக இருங்கள், ஏனெனில் நான் யாருடைய ஊழியக்காரனாக இருக்கிறேனோ அந்த தேவனுடைய தூதனானவர், அவர் என்னிடம் நின்று, 'பயப்படாதே நீ இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும்', இதோ யாத்திரைப் பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்கு தயவு பண்ணினார் என்றான்“ என்று கூறினான். கப்பல் சேதமுற்று கரைக்கு வந்தபோது, அவர்கள் அங்கே அந்த தீவு மக்களுடன் சென்றார்கள். பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின் மீது போடுகையில் அங்கே ஒரு பெரிய சர்ப்பம் இருந்தது, அது அவனுடைய கையைக் கவ்விக் கொண்டது. அந்த சர்ப்பம், ஒரே நிமிடத்தில் கொல்லக் கூடிய விஷத்தை அவனுடைய கையில் ஏற்றினது. அந்த தீவார் அதைக் கண்டு, ''கவனி, அந்த ஆள் செத்து மடிவான், இன்னும் ஒரு நிமிடத்தில் அவன் மரித்துப் போவான். அவன் சுவிசேஷத்தை பிரசங்கிக்க தகுதியற்றவன்“ என்று கூறினார்கள். பக்திவாய்ந்த ஜனங்கள் அவனை சங்கிலியினால் கட்டினார்கள். அந்த நாளில் இருந்த மிக அருமையான சபை அவனைச் சங்கிலியில் கட்டிப்போட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமானது இல்லையென்றால், அதே காரியத்தை தான் இன்றைக்கும் காண்பீர்கள். அது சரி! அவள் - அவள் சிறிது சட்டத்தை உடைக்கும்போது பாருங்கள். 101ஆகவே ஒரு சர்ப்பம் அவன் கையைக் கவ்விக் கொண்டது. இப்பொழுது கவனியுங்கள். பவுல் பயப்படவில்லை. அவன் “இயேசு கிறிஸ்து, 'சர்ப்பங்களை அவர்கள் எடுத்தாலும் அது அவர்களுக்கு தீங்குசெய்யாது' என்று கூறினார் என்றான். ஆகவே அவன் நடந்து நெருப்பிலே அதை உதறித் தள்ளி; திரும்பி சில விறகுகளை பொறுக்கி நெருப்பிலே போடுவதற்காக எடுத்து, தன் முதுகை காட்டி அனலூட்டிக் கொண்டான்; இந்த பக்கமாக திரும்பி தன் கைகளுக்கு அனல் காட்டினான்”. அந்த தீவார், ''ஏன் இவன் இன்னும் மரிக்கவில்லை? அந்த மனிதன் ஏன் மரிக்கவில்லை? ஏன் அவன் சடிதியாய் விழுந்து சாகவில்லை?'' என்றனர். ஆனால் பவுலோ முழுவதுமாக பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்தான். (நான் என்ன கூற முனைகிறேன் என்று பாருங்கள்?) அந்த விஷம் அவனை பாதிக்காத அளவிற்கு முழுவதுமாக பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்தான். ஓ, சகோதரனே, பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்கிற ஒரு சபையை எனக்குத் தாருங்கள். வேத சாஸ்திரம் படித்தவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக செய்யத் தவறினதை தேவன் ஒரு வருடத்தில் செய்வார். சபையின் அபிஷேகமானது வரும் வரை காத்திருங்கள். அந்த சிறிய மீதமுள்ளவர்கள், அவர்களுக்கு விசுவாசம் இருக்கிறது. புறஜாதிகளின் கதவுகள் அடைக்கப்பட்டபிறகு, தேவன் அப்பொழுது ஒரு சபையை அபிஷேகம் பண்ணுவார். ''அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியாயிருக்கிறவன் இன்னும் நீதியாக இருக்கட்டும். பரிசுத்தமாயிருக்கிறவன் இன்னும் பரிசுத்தமாயிருக்கட்டும்'', தேவன் சபையை தேவனுடைய வல்லமையால் அபிஷேகம் பண்ணுவார், காரியங்கள் அப்பொழுது சம்பவிக்கும். அப்பொழுது மாத்திரமல்ல, இப்பொழுதும் அவர் அதைச் செய்கின்றார். அடையாளங்களையும் அற்புதங்களையும் கவனித்து; பின்பு மக்கள் சுற்றும் முற்றும் பார்த்து, “அது பிசாசினால் உண்டானது'' என்று கூறுகின்றனர். ஓ ஏனெனில் அவர்கள் வேத வசனங்களையோ, அல்லது தேவனுடைய வல்லமையையோ அறியாதிருக்கின்றனர். அதன் காரணமாகத்தான் அது அங்கே இருக்கின்றது. 102கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. இவ்வளவு நேரம் கடந்து உங்களை வைத்திருந்ததற்காக நான் வருந்துகிறேன். நான் இவ்வாறு செய்வது அரிது. ஆனால் உங்கள் எதிர்ப்பார்ப்பின்படியாக நான் இருப்பதில்லை. உங்களுடைய எண்ணங்களுக்கும் காரியங்களுக்கும் ஏற்றவாறு ஒருக்கால் இந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்காமல் இருந்திருக்கக் கூடும். இக்காலை இரண்டிற்கு பதிலளிக்கப்பட்டது. அப்படியில்லையெனில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களைப் புண்படுத்தவோ அல்லது எதையோ செய்ய நான் - நான் முயலவில்லை. நான் அதை கூறித்தான்... நீங்கள் கேள்வியைக் கேட்டீர்கள். எனக்குத் தெரிந்தவரை நான் உங்களுக்கு பதிலை அளித்தேன். சரி. இப்பொழுது, ஒருக்கால் காரியங்களைக் குறித்து அதிகமாக எனக்குத் தெரியாமல் இருக்கலாம். எனக்கு தெரிந்திருக்க வேண்டிய ஒன்றுமே எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு காரியம் எனக்குத் தெரியும், இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறார், பாவத்திலிருந்து நம்மை புறம்பே வைத்திருக்கிறார், தம்முடைய வல்லமையையும் ஆசீர்வாதங்களையும் நமக்கு அளிக்கின்றார். ஜெபிக்கப்பட்ட மக்களுக்கு என்ன சம்பவிக்கின்றது என்பதை நீங்கள் கவனிப்பீர்களானால்... தேசங்களில் பாருங்கள். எல்லா இடங்களிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் பாருங்கள். நேரம் வந்துக் கொண்டிருப்பதையும் கவனியுங்கள். இங்கே சில சமயங்களுக்கு முன்னர் இரண்டு கிளைகளைக் குறித்து நாம் இங்கே பிரசங்கித்ததை கவனியுங்கள், ஆதியாகமத்திலிருந்து எடுக்கப்பட்டது, அவைகள் எப்படி எல்லா இடங்களிலும் சாட்சி பகருகின்றன என்பதைக் கவனியுங்கள். எப்படி அந்த அவிசுவாசி, தன்னுடைய மதத்தில் அடிப்படியாகவும் நல்ல முறையிலும் இருக்கிறான், ஆனால் தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறான். ஆகவே சபை அசைந்து சென்று கொண்டேயிருக்கிறது. 103கர்த்தராகிய இயேசு தாமே ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாக இருக்கிறது. நீங்கள் மிக பாரம் கொண்டவர்களாகி - தேவன் தாமே ஜனங்களாகிய உங்கள் மேல் அதை வைப்பாராக இழந்துபோன ஆத்துமாக்களுக்காக இரவும் பகலும் தூங்க முடியாத அளவிற்கு மிகவுமாக பாரப்படுவீர்களாக. தேவன் தாமே அவ்விதமாக பாரப்படுகிற சிலாக்கியத்தை பிரன்ஹாம் கூடாரத்திற்கு அளிப்பாராக. நீங்கள் தூங்க முடியாத அளவிற்கு இழந்து போன ஆத்துமாக்களுக்காக மிகவுமாக பாரப்படுவீர்களானால் நீங்கள் சத்தமிடவில்லை, அல்லது நீங்கள் எதையுமே செய்யாதிருந்தாலும் அதைக் குறித்து எனக்கு கவலையில்லை, நீ அவ்வாறு செய்வாயானால், ஜெபிக்கப்படத் தக்கதாக உலகமே இங்கே உள்ளே வந்து கொண்டிருக்கும். (அதுசரி!) ஜெபிக்கப்படத் தக்கதாக உலகமே வந்து கொண்டிருக்கும். நீங்கள் எல்லாவிடங்களிலும் அறியப்படுவீர்கள். தேவனே உம்முடைய ஆவியை எங்களுக்கு அளியும், எங்களை உடைத்து போடும், வியாதியஸ்தரை சுகப்படுத்த, பிசாசுகளைத் துரத்த, மகத்தான அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்யத்தக்கதாக வல்லமையால் எங்களை நிரப்பும். நீங்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கும் போது உங்கள் இருதயத்தில் ஒரு சிறு அதிர்வு கூட இல்லாமல் அந்த ஆசீர்வாதத்தை கேளுங்கள். தேவன் அதைச் செய்ய போகிறார் என்று விசுவாசியுங்கள். அந்த இடத்தை கவனியுங்கள், அது சரியாக ஆரம்பிக்கும். ஏன்? தீமையானது நம்மை விட்டு சென்றுவிட்டது. அங்கே நின்று கொண்டிருந்த அந்த மரத்தைப் போல. இயேசு அதைப் பார்த்தார், அதில் கனியே இல்லாதிருந்தது. அவர், “நீ சபிக்கப்பட்டிருப்பாயாக'' என்றார். இருபத்து நான்கு மணி நேரம் சென்றது. பேதுரு, ''பாருங்கள், இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கிறது'' என்றான். ஏதோ ஒன்று சம்பவித்திருந்தது. தேவனுடைய வார்த்தை உரைக்கப்பட்டிருந்தது. இயேசு, “தேவனிடத்தில் விசுவாசம் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் இந்த மலையைப் பார்த்து பெயர்ந்து போ என்று கூறி அதைக் குறித்து சந்தேகிக்காமல் இருந்தால், அது உனக்கு கீழ்ப்படியும்'' என்றார். தேவனிடத்தில் விசுவாசம் வைத்திருங்கள். 104இப்பொழுது இராப்போஜன நேரமாக இருக்கிறது. நம்முடைய தலைகளை நாம் தாழ்த்தியிருக்ககையில் உங்களை தேற்றும் படியாக யாரோ ஒருவரை நான் கேட்கப் போகிறேன்... கர்த்தாவே, தேவன் உலகிலுள்ள எல்லா நாடுகளையும் அவர்களுடைய அரசியல் நிலைகளின்படி நியாயந்தீர்க்கப்போகிறார் என்ற அந்த மகத்தான நியாயத்தீர்ப்பின் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை கர்த்தாவே உலகெங்கிலுமுள்ள புருஷரும் ஸ்திரிகளும் இந்த மணி நேரத்தில் காண்பார்களாக. எல்லா இடங்களிலுள்ள ஒவ்வொருவரும் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் நின்றாக வேண்டும். ஆகவே பிதாவே, தப்பிக்க விரும்புகிற ஜனங்களுக்கு இந்த ஜனங்களிற்கு ஒரு தப்பிக்கும் வழி இருக்கிறதென்று நாங்கள் மிகவுமாக மகிழ்ச்சி கொள்கிறோம். தாவீதின் சந்ததியாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் மூலமாகத்தான் அந்த வழி உள்ளது. அன்புள்ள பிதாவே, நாங்கள் அதினூடாக செல்லக் கூடிய மத்தியஸ்தராகிய அவரை பூமிக்கு அனுப்பினதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அவர் எங்களுக்காக பரிந்து பேசி, எங்கள் பாவங்களையெல்லாம் எடுத்துவிடுவார். ஆதலால் நாங்கள் தேவ கோபாக்கினையிலிருந்து தப்பித்துக் கொள்ள ஏதுவாகும். கோபாக்கினை வரவிருக்கிறது என்று நாங்கள் அறிவோம். கடந்த நாட்களில் யோவான் கூறினது போல ''வரும் கோபாக்கினையிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.'' இப்பொழுது, கார்த்தாவே, இன்று நாங்கள் இராப்போஜனம் எடுக்கின்ற வேளையில் உம்முடைய சுத்தமாக்கும் இரத்தத்தினால் கர்த்தாவே எங்களை இன்றிரவு பரிசுத்தப்படுத்தும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்; இந்த மக்களின் ஒவ்வொரு பாவமும் போக்கப்படுவதாக. அதை தகுதியில்லாதவர்களாக எடுக்கும்படி எங்களை அனுமதிக்க வேண்டாம் என்று உத்தமமாகவும் தாழ்மையாகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். ஏனெனில் உம்முடைய வார்த்தையில் நீர் கூறியுள்ளீர், அவ்வாறு நாங்கள் செய்தால், கர்த்தருடைய இரத்தத்திற்கும் சரீரத்திற்கும் குற்றவாளிகளாக இருக்கிறோம் என்று உம்முடைய வார்த்தையில் நீர் கூறியுள்ளீர். இப்பொழுது, கர்த்தாவே, இந்த மக்களை பரிசுத்தமாகவும் அற்பணிக்கப்பட்டவர்களாகவும் செய்யும், ஆதலால் நாங்கள் எந்த ஒரு குறையும் இல்லாமல் அதை எடுக்க ஏதுவாயிருக்கும். 105ஆகவே இப்பொழுது, பிதாவே, முதன்முறையாக இராப்போஜனம் எகிப்திலே கொடுக்கப்பட்டது என்று நாங்கள் உணர்ந்து கொள்ளுகிறோம். ஆட்டுக்குட்டியும் அப்பமாகிய, இராப்போஜனத்தை எடுத்த அந்த மக்கள், அவர்கள் வெளியே சென்ற போது, நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் பிரயாணம் செய்தனர்; அவர்கள் வனாந்திரத்திலிருந்து வெளியே வந்த போது அவர்களில் ஒருவரும் பெலவீனமாக இல்லை. அவர்கள் இராப்போஜனத்தை எடுத்திருந்தனர். தேவனே இரக்கமாயிரும். எல்லா வியாதியஸ்தரும் சுகமாக்கப்பட வேண்டுமென்றும் இழந்து போன எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். உறைந்து போய், அக்கறையில்லாதவர்கள் தேவனுடைய அக்கினிக்கு அருகில் வந்து தங்கள் ஆத்துமாக்களை அனலாக்கிக் கொள்ளட்டும். இதை அருளும், கர்த்தாவே. இப்பொழுது எங்களை மன்னியும். எங்களுக்கு உதவி செய்யும். உம்முடைய குமாரன் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். 106நம்முடைய தலைகள் வணங்கியிருக்கின்ற வேளையில், (சகோதரன் பியானோ கருவியில் சுருதியை அளிக்கையில்) இங்கு தங்கள் கையையுயர்த்தி “சகோதரன் பில், நான் - நான் உத்தமுமாக... ஆத்துமாவின் நிலைக்காக என்னை நீங்கள் நினைவு கூறும்படி நான் - நான் - நான் விரும்புகிறேன். நான் - நான் - நான் பரிசுத்த ஆவியை பெற விரும்புகிறேன். நான் - நான் - நான் பரிசுத்த ஆவியை பெற விரும்புகிறேன்'' என்று கூறும் நபர் இங்கு இருப்பாரோவென்று நான் வியக்கிறேன். உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா...?... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை, உம்மை, உம்மை, உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை, உங்களையும் ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, ஸ்திரீயே, உம்மையும், உம்மை, உம்மை, சகோதரனே, என்னே, எல்லா இடங்களிலும் கரங்கள். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே உங்கள் கரத்தை நான் காண்கிறேன். பரிசுத்த ஆவியைப் பெற நீங்கள் விரும்புகிறீர்களா, சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஒரு நெருங்கின நடையை நீங்கள் விரும்புகிறீர்களா. நினைவில் கொள்ளுங்கள், நண்பர்களே, நாம் நம்முடைய கர்த்தருடைய வருகைக்கு அருகாமையில் இருக்கிறோம். எல்லா இடங்களிலும் அற்புதங்களும், அடையாளங்களும் - தேவன் தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்பொழுது, நிச்சயமாக - எனக்கு அவருடைய வார்த்தையைக் குறித்த சில கருத்துக்களை எனக்கு அளிக்காத வரை நான் சென்று அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்யத் தக்கதாக பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டு, திரும்ப வந்து வார்த்தையை பிரசங்கித்து எல்லா இடங்களிலும் அதை ஸ்தோத்தரித்து, இந்த காரியங்களுக்கு செவி கொடுக்க தேவன் என்னை அனுமதிப்பதில்லை. அவர் அதை எனக்கு கொடுக்கமாட்டார். ஆதலால் நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்று எனக்குத் தெரியும். 107நீங்கள் இயேசு கிறிஸ்து இல்லாமல், பரிசுத்த ஆவி இல்லாமல் இருப்பீர்களானால், அந்த பரிசுத்த ஆவியைப் பெறாமல் நீங்கள் இளைப்பாறுதலை கொண்டிருக்க தேவன் விடாதிருப்பாராக. வஞ்சிக்கப்படாதிருங்கள். நீங்கள் இந்த உறைந்து போன உலர்ந்த கண் அறிக்கைகளை செய்து பரிசுத்தாவியையுடையவராய் இருக்கின்றீர் என்று சொல்லாதீர்கள். நீங்கள் விசுவாசிக்கும் போது பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்வதில்லை. ஆவியைப் பெற நீங்கள் விசுவாசம் கொள்வதில்லை. அது ஒரு வரம் ஆகும். பவுல், ''நீங்கள் விசுவாசித்த பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்களா?“ என்று கூறினான். ஆகவே விசுவாசியுங்கள். தேவன்தாமே அதை உங்களுக்கு அருளுவாராக. இப்பொழுது, பிதாவே, தங்கள் கைகளை உயர்த்தியுள்ள இவர்களுக்கு, இப்பொழுது பரிசுத்த ஆவி என்னும் நபரை அவர்களுக்கு அளிப்பீராக. இந்த அநேகருக்குள் ஆழமாக அவர் வருவாராக - மேலே உயர்த்தப்பட்ட பத்து அல்லது பதினைந்து கரங்கள் உயர்த்தப்பட்டன. நிலைபேறுடைய (Being) உம்மையே ஞானஸ்நானமாக இவர்கள் ஒவ்வொருவருக்கும் அளிப்பீராக. இவர்கள் தாமே தங்கள் ஜீவியங்களில் அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும் விதத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படட்டும். இவர்கள், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்'' என்று இயேசு கூறின விதமாக அவர்கள் எல்லாவிதமான அடையாளங்களையும் காண்பார்கள். பிதாவே, இதை அருளும். உம்முடைய குமாரனின் நாமமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் தாழ்மையுடன் ஜெபிக்கிறோம். ஆமென்.